ஞாயிறு, 27 டிசம்பர், 2015

ராகு, கேது பெயர்ச்சி - உங்கள் ராசிக்கு எப்படி?

ஒவ்­வொரு ஆண்டு பிறக்­கும்­போதும் அந்த ஆண்டின் நிலை­வரம் ஜோதிட ரீதி­யாக எமக்கு சாத­கமா ? அல்­லது பாத­கமா ? எனும் கேள்வி அடிப்­படை பாமர மகன் தொடக்கம் நாட்டை ஆளும் அர­சியல் தலை­வர்­கள்­வரை கேட்­கின்ற விடயம். பொது­வா­கவே ஒரு வருடம் நிறை­வ­டைந்து விட்டால் எமக்கு ஒரு வயது அதிகம் ஆகின்­றது.

எமது வரவு செலவு பட்­டி­யலில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு எந்த விட­யத்தை குறைத்து நிறுத்தி ஒரு சேமிப்பை உண்­டு­பண்­ணலாம் என்­பது குடும்­பத்­த­லை­வி­களின் கவலை. ஜோதிட ரீதி­யாக நாம் வரு­டப்­ப­லன்­களை அறி­கின்ற போது எமக்கு வரும் கஷ்டம் துன்­பங்­களை முற்று முழு­தாக நீக்கி வெற்றி காண முடி­யாது.



பெரும் பிரச்­சி­னை­களில் இருந்து விலகி ஓர­ள­விற்கு எமது நடை­முறை செயற்­பா­டு­களின் மூலம் தலைக்கு வரும் துன்பம் தலைப்­பா­கை­யுடன் செல்லும் நிலைக்கு எம்மை தயார்­ப­டுத்­திக்­கொள்ள முடியும்.
அந்த வகையில் இந்த 2016 ஆம் ஆண்டில் 09.01.2016 அன்று ராகு, கேது பெயர்ச்சி நடை­பெ­று­கின்­றது.

கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ராகுவும் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி பெறு­கின்­றது. அத்­தோடு 02.08.2016 அன்று குரு­ப­கவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி பெறு­கின்றார்.

வருடம் முழு­வதும் சனீஸ்­வரன் விருட்­சிக ராசியில் சஞ்­ச­ரிக்­கின்றார். இதன் பலா­ப­லன்­களை ஒவ்­வொரு ராசி­யி­னரும் அறிந்து அதற்கு ஏற்ப செயற்­படும் போது பெரும்­பா­லான பிரச்­சி­னை­களில் இருந்து விடு­பட்­டுக்­கொள்ள முடியும். நாம் எமது எண்ணம் செயல் என்­ப­ன­வற்றை தூய்­மை­யாக கொண்டு செய்யும் தொழிலை நேர்­மை­யாக செய்­தாலே பல நன்­மைகள் நம்மை சாரும்.

எனவே பிறக்கும் 2016ஆம் ஆண்டு அனை­வ­ருக்கும் அவ­ரவர் எண்­ணங்கள் நிறைவு காணவும் மன­நி­லையில் சந்­தோஷம் பெரு­கவும் இனிமை, இங்­கிதம், இன்பம் சேரவும் அன்னை ஆதி­பராசக்தி அருள் பொழி­யட்டும்.

மேட­ராசி
( அஸ்­வினி, பரணி, கார்த்­திகை 1ம்பாதம்)

அன்பும் ஆத­ரவும் தெய்வ நம்­பிக்­கையும் அதிகம் கொண்ட மேட ராசி அன்­பர்­களே பட­ப­ட­வென முகத்­திற்கு நேரே பேசு­கின்ற சுபாவம் கொண்ட நீங்கள் நல்ல இதயம் படைத்­த­வர்கள். எல்­லோ­ருக்கும் உதவும் மனம் நிறை­வாக கொண்­ட­வர்கள். எதிரி என்று வந்­து­விட்டால் கடைசி வரை மன்­னிக்­கவே மாட்­டீர்கள். உங்கள் ராசி நிலைக்கு 2016ஆம் ஆண்­டிலே எப்­ப­டி­யான பலன்கள் சூழ இருக்­கின்­றது.

இந்த வருடம் முழு­வ­து­மாக சனீஸ்­வரன் அட்­ட­மத்து சனி­யாக அமை­வதால் உடல் ரீதி­யிலும் மன ரீதி­யிலும் குழப்­பங்கள் அதிகம் இருக்கும். 2016 ஜூலை மாதம் வரை குரு பகவான் பஞ்­ச­மஸ்­தா­ன­மா­கிய 5ஆம் இடம் அமை­கின்றார். 09.01.2016 முதல் சர்ப்ப கிர­ஹங்­க­ளான ராகு உங்­களின் ராசி நிலைக்கு 5ஆம் இடமும், கேது உங்கள் ராசிக்கு 11ஆம் இடமும் அமை­கின்­றது. எனவே இந்த 2016ஆம் ஆண்டு உங்­க­ளுக்கு ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான நற்­ப­லன்கள் கொடுக்கும் நிலை இருக்கும். 2016 ஆம் ஆண்டின் முற்­ப­கு­தியில் ஓர­ள­விற்கு உங்­களின் எண்­ணங்கள் ஈடேறும் நிலை­யி­ருக்கும். தொழில் நிலை­களில் அலைச்சல் நிலை சற்று அதி­க­மா­கவே இருக்கும்.

எடுக்­கின்ற முயற்­சி­களில் சிறு சிறு தடை தாமத நிலைகள் ஏற்­பட்டு மறையும் நிலை இருக்கும். எந்த விட­யத்­திலும் பொறு­மையும் நிதா­னமும் கொண்டு செயற்­பட வேண்டும். திரு­மணம் போன்ற சுப­கா­ரி­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­பலன் நிறை­வாக அமையும் நிலை உண்டு. அட்­ட­மத்து சனி திடீ­ரென உடல்­நிலை சுக­வீனங்கள், மருத்­துவ செல­வுகள், சத்­திர சிகிச்­சைகள் போன்ற பலா­ப­லன்­களை கொடுக்கும் நிலை இருக்கும். ராகுவின் 5ஆம் இடத்து சஞ்­சாரம் சொத்து விவ­கா­ரங்­களில் பிரச்­சி­னை­களை கொடுக்கும். கேதுவின் 11ஆம் இடம் சஞ்­சாரம் ஓர­ள­விற்கு நல்ல தல­யாத்­திரைப் பலன் ஏற்­ப­டுத்தும். 2016ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தியின் மேல் எந்த விடயம் என்­றாலும் சற்று பிரச்­சி­னைகள் கொடுக்கும் நிலை இருக்கும்.

பெண்­க­ளுக்கு மனச்­சஞ்­சல நிலைகள் அதி­க­மாக அமையும். உற­வி­னர்­க­ளுடன் கருத்து வேறு­பா­டுகள் ஏற்­படும். மாண­வர்கள் சற்­றுக்­கூ­டு­த­லான முயற்சி எடுக்க வேண்டும். எனவே 2016 ஜூலை மாதத்தின் மேல் சனீஸ்­வரன் குரு வழி­பாடு மேற்­கொள்­வது மிகவும் நல்­லது.

அத்­தோடு அம்மன் வழி­பாடும் அனு­கூலம் தரு­வதாய் அமையும். எனவே அதற்கு ஏற்ப பொறு­மையும் நிதா­னமும் கொண்டு செயற்­ப­டு­வது உங்­க­ளுக்கு மிகவும் நல்­லது. மொத்­தத்தில் இந்த 2016ஆம் ஆண்டு உங்­க­ளுக்கு நூற்­றிற்கு 55% நன்­மைகள் கொடுக்கும்.

இடப ராசி
(கார்த்­திகை 2, 3, 4ம் பாதம், ரோகிணி, மிரு­க­சீ­ரிடம்)

இறுக்­க­மான இத­யமும் இன்சொல் இல்­லாத பேச்சும் கொண்ட இடப ராசி அன்­பர்­களே உங்­க­ளுக்கு என சில வரை­ய­றைகள் வைத்­துக்­கொண்டு செயற்­படும் நீங்கள் மற்­ற­வர்­களின் மனதை புரிந்து கொள்ள மாட்­டீர்கள். யாருக்­கா­கவும் எதையும் எளிதில் விட்­டுக்­கொ­டுக்­க­மாட்­டீர்கள். உங்கள் ராசி நிலைக்கு 2016ஆம் ஆண்டு எப்­படி இருக்க போகின்­றது. ராசி நிலைக்கு சனீஸ்­வரன் களத்­திர ஸ்தான­மா­கிய 7ஆம் இடம் அமை­கின்றார். வருடம் முழு­வதும் இதே நிலை அமை­வதால் குடும்ப நிலை­யிலே சற்­றுக்­கு­ழப்­ப­மான நிலைகள் தொடரும் நிலை இருக்கும். 2016 நடுப்­ப­குதி வரை குருவின் பலன் சுகஸ்­தா­ன­மா­கிய 4ஆம் இடம் அமை­வதும் 09.01.2016 முதல் ராகு 4ஆம் இடமும் கேது 10ஆம் இடமும் அமை­கின்­றது. எனவே ஆண்டின் முற்­ப­குதி பல வகை­யிலும் அலைச்சல் இழு­பறி நிலையைக் கொடுக்கும். தொழில் நிலை­களில் தேவை­யற்ற பிரச்­சி­னை­களை சந்­திக்க வேண்டி வரும். வழக்கு விவ­கா­ரங்­களில் சிக்கல் இழு­பறி நிலை­யி­ருக்கும். எதையும் நிதா­னத்­தோடும் பொறு­மை­யோடும் செயல்­பட வேண்டும். உடல் நிலை உபா­தைகள் திடீ­ரென அமை­கின்ற நிலைகள் ஏற்­படும். 2016 நடுப்­ப­கு­தியின் மேல் குருவின் கோசார பலன் பஞ்­சமஸ் தான­மா­கிய 5ம் இடம் அமை­வது ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான நன்­மைகள் அமையும். திரு­மணம் போன்ற சுப­கா­ரி­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­பலன் அனு­கூ­ல­மா­ன­தாக அமையும் நிலை இருக்கும். ராகுவின் 4 ம் இடத்து சஞ்­சாரம் திடீர் சுக­வீ­னங்கள், மருத்­துவ செல­வுகள், தாயா­ருடன் மனச்­சஞ்­சல நிலைகள் இடை­யி­டையே ஏற்­ப­டுத்தும். கேதுவின் 10 ம் இடத்து சஞ்­சாரம் தொழில் நிலையில் அலைச்சல், வேலைப்­பளு, மேல் அதி­கா­ரி­க­ளுடன் வாக்­கு­வாதம் போன்ற பலா­ப­லன்­களை கொடுக்கும். எனவே உங்­களின் அசட்­டைத்­த­னத்தை விடுத்து சற்று நிதா­ன­முடன் காரி­யங்­களில் ஈடு­பாடு கொள்ள வேண்டும். பெண்­க­ளுக்கு ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன்கள் அமை­கின்ற நிலை இருக்கும். மாண­வர்­களின் கல்வி நிலையில் முன்­னேற்­ற­க­ர­மான பலன்கள் அமையும் நிலை இருக்கும். 2016ஆம் ஆண்டு உங்கள் ராசி நிலைக்கு ஆண்டின் முழு­வதும் சனி ராகு கிர­ஹங்­களின் பலன்கள் சுமா­ரா­ன­தா­கவே அமை­கின்­றது. எனவே இவ்­விரு கிரஹ வழி­பாடும் மேற்­கொள்­வது மிகவும் நல்­லது. அத்­தோடு முருகன் வழி­பாடும் நன்மை தரும். எதையும் சகித்­துக்­கொள்­ளு­கின்ற மனப்­பக்­குவம் கொண்ட உங்­க­ளுக்கு இந்த 2016ஆம் ஆண்டில் அமையும் பலன்­களை சமா­ளிக்க கூடி­ய­தா­கவே இருக்கும். உங்கள் ராசி நிலைக்கு நூற்­றிற்கு 60% நன்­மைகள் 2016 இல் உண்டு.

மிதுன ராசி
( மிரு­க­சீ­ரிடம் 3,4 ம் பாதம், திரு­வா­திரை, புனர்­பூசம் 1,2,3 ம் பாதம்)

அமை­தி­யாக பேசி அடக்­க­மாக நடந்து ஆளு­மை­யோடு செயல் ஆற்றி வெற்­றிகள் பெறும் மிதுன ராசி அன்­பர்­களே யாராலும் உங்­களின் செயல்­பா­டு­களை கணிக்க முடி­யாது. எதையும் ரக­சியம் காத்து உங்கள் விட­யங்­களில் மட்டும் பயன்­ப­டுத்தி வெற்றி பெற்­றுக்­கொள்ளும் சாணக்­கி­யர்கள் நீங்கள். உங்­களின் ராசிக்கு 2016ஆம் ஆண்­டிலே சனீஸ்­வ­ரனின் சஞ்­சாரம் மிகவும் சிறப்­பா­ன­தாக 6ஆம் இடத்தில் அமை­கின்றார் வருடம் முழு­வ­து­மாக.
எனவே எந்த விட­யத்­தையும் வெற்றி கொள்ள கூடிய ஆளு­மைத்­திறன் சிறப்­பாக அமையும். குருவின் கோசார பலன் 2016 நடுப்­ப­குதி வரை ஜெயஸ்­தா­ன­மா­கிய 3ஆம் இடம் அமை­வது அலைச்சல் நிலை சற்று அதி­க­மாக இருக்கும். 09.01.2016 முத­லாக ராகு 3ஆம் இடமும் கேது 9ஆம் இடமும் அமை­வது மிகவும் அனு­கூ­ல­மான நன்­மைகள் அமையும் நிலை இருக்கும். எந்த விட­யத்­தையும் வெற்றி கொள்­ளக்­கூ­டிய அனு­கூ­லப்­ப­லன்கள் அமையும். இருப்­பினும் குருவின் பலன் நடுப்­ப­குதி வரை 3ஆம் இடமும் அதன் பின்னர் 4ஆம் இடமும் அமை­வது தேவை­யற்ற பிரச்­சி­னை­களில் சிக்க வேண்­டிய நிர்ப்­பந்­தங்கள் அமையும். வழக்கு விவ­கா­ரங்­களில் சிக்க வேண்­டிய நிலை­களும் ஏற்­ப­டலாம். குடும்­பத்தில் மனச்­சஞ்­சல நிலையும் உற­வி­னர்­க­ளுடன் வாக்கு வாதங்­களும் கருத்து வேறு­பா­டு­களும் அமையும் நிலை இருக்கும். திரு­மணம் போன்ற விட­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­பலன் சற்று இழு­பறி தாமத நிலை­களை கொடுக்கும். பண­வ­ரவு மந்த கதி­யி­லேயே அமையும். புதிய முயற்­சிகளில் அவ­சரம் காட்­டாமல் நிதா­னத்­தோடு செயற்­பட வேண்டும். பெண்­க­ளுக்கு மன நிலை­யிலே அதி­க­மான சஞ்­சல நிலை அமையும். மாண­வர்­க­ளுக்கு கல்­வியில் அனு­கூ­ல­மான பலன்கள் அமையும் நிலை இருக்கும். 2016ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தியின் மேல் அமையும் குருவின் பலன் சிறு சிறு சிர­ம­மான பலன்­களை கொடுத்­தாலும் எதிர்­பா­ராத வகை நற்­ப­லன்­களும் இடை­யி­டையே கொடுக்கும் நிலை இருக்கும். ராகுவின் ஜெயஸ்­தா­ன­மா­கிய 3ஆம் இட சஞ்­சாரம் மற்றும் கேதுவின் பாக்­கி­யஸ்­தா­ன­மா­கிய 9ம் இட சஞ்­சாரம் என்­பன எதிர்­பா­ராத வகை பிர­யா­ணங்கள், தல­யாத்­திரை போன்ற அனு­கூ­ல­மான பலன்களை கொடுக்கும் நிலையும் ஏற்­படும். எனவே இந்த 2016ஆம் ஆண்டு உங்­க­ளுக்கு ஓர­ள­விற்கு நன்­மைகள் தரும் ஆண்­டா­கவே அமையும். எனவே அதற்கு அமைய உங்­களின் செயற்­பா­டு­களை நீங்கள் மேற்­கொள்­வது நல்­லது. இந்த 2016இல் நூற்­றிற்கு 60% நன்­மைகள் அமையும்.

கடக ராசி
( புனர்­பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயி­லியம்)

காரி­ய­வா­தி­க­ளாக உங்­களின் செயற்­பாட்டில் கண்ணும் கருத்­துமாய் இருக்கும் கட­க­ராசி அன்­பர்­களே உங்­களின் கல­க­லப்­பான நடை­முறை அனை­வ­ரையும் கவர்ந்து விடும். ஆனால் அது உங்­களின் காரிய வெற்­றிக்­கான செயல்­பாடு என்­பது பின்­புதான் தெரிய வரும். எதையும் சமா­ளிக்கும் ஆற்றல் அதி­க­மாக கொண்ட உங்­க­ளுக்கு இந்த 2016 ஆம் ஆண்டில் சனீஸ்­வ­ரனின் சஞ்­சா­ர­மா­னது பஞ்­ச­மஸ்­தா­ன­மா­கிய 5ஆம் இடத்தில் அமை­கின்­றது. எடுக்­கின்ற முயற்­சி­களில் பொறு­மையும் நிதா­னமும் மிகவும் முக்­கியம். பூர்­வீக சொத்­துக்­களின் மூலம் வழக்­குகள் அமையும். தொழில் நிலை அலைச்சல் சற்று அதி­க­மா­கவே அமையும் நிலை இருக்கும். 2016 ஜூலை மாதம் வரை குருவின் சஞ்­சா­ர­மா­னது தனஸ்­தா­ன­மா­கிய 2ஆம் இடம் அமை­வது குடும்ப நிலையில் அனு­கூ­ல­மான பலன்கள் கொடுக்கும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் அமையும் நிலை இருக்கும். பண வரவு மிகவும் திருப்­தி­க­ர­மாக அமை­கின்ற நிலை கொடுக்கும். 09.01.2014முத­லாக ராகுவின் சஞ்­சாரம் தனஸ்­தா­ன­மா­கிய 2ம் இடமும் கேதுவின் சஞ்­சாரம் அட்­ட­மஸ்­தா­ன­மா­கிய 8ஆம் இடமும் அமை­கின்­றமை சிறப்­பான நிலை அல்ல. உடல் நிலையில் உபா­தை­களும் எடுக்­கின்ற முயற்­சி­களில் அலைச்சல் நிலை­களும் தொடரும். தேவை­யற்ற வீண் பிரச்­சி­னை­களை சந்­திக்க வேண்­டிய நிலை வரும். எதிலும் நிதானம் வேண்டும். 2016ஆண்டு நடுப்­ப­கு­தியின் மேல் குருவின் பலன் ஜெயஸ்­தா­ன­மா­கிய 3ம் இடம் அமை­வது சிறப்­பான நிலை­யாக இருக்­காது. எனவே ஆண்டின் நடுப்­ப­கு­தியின் மேல் எந்த விடயம் எடுத்­தாலும் அலைச்சல் பிரச்­சினை தொடரும் நிலை இருக்கும். பெண்­க­ளுக்கு மனச்­சஞ்­சல நிலை­களும் குடும்­பத்தில் பல­வி­த­மான நெருக்­கடி நிலை­களும் ஏற்­ப­டு­கின்ற பலன் இருக்கும். மாண­வர்கள் கல்வி நிலையில் சற்­றுக்­கூ­டு­த­லான முயற்சி எடுக்க வேண்டும். உழைப்பும் முயற்­சியும் அதிகம் கொண்ட உங்­க­ளுக்கு உங்­களின் சொத்­துக்­களின் மூல­மாக ஏதா­வது ஒரு பிரச்­சினை அடிக்­கடி ஏற்­ப­டு­கின்ற நிலை இருக்கும். எனவே அதற்கு ஏற்ப உங்­களின் முயற்சி செயல்­பாடு போன்ற விட­யங்­களில் மிக நிதா­ன­மாக காரியம் ஆற்ற வேண்டும். சனீஸ்­வரன் குரு கிர­ஹங்­க­ளுக்கு வழி­பாடு மேற்­கொள்­வது மிக­மிக நல்­லது.
அத்­தோடு அம்மன் வழி­பாடும் மேற்­கொள்­ளவும் அதி­க­மான உய­ரத்தை தொட வேண்டும் என்­கின்ற எண்­ணப்­பாங்கு மிகவும் அதி­க­மாக கொண்ட உங்­க­ளுக்கு அதற்­கேற்ப உழைப்பும் முயற்­சியும் அதிகம் இருக்கும். எனவே தேவை­யற்ற விட­யங்­களைத் தவிர்த்து நீங்கள் உண்டு உங்கள் பாடு உண்டு என இருப்­பதே நல்­லது. இந்த ஆண்டு நூற்­றிற்கு 55% நன்­மைகள் அமையும்.

சிம்ம ராசி
( மகம், பூரம், உத்­தரம் 1ஆம் பாதம்)

மன­தை­ரி­யமும் தீர்க்­க­மான செயற்­பாடும் நினைத்­ததை சாதிக்கும் குணமும் கொண்ட சிம்­ம­ராசி அன்­பர்­களே யாருக்­கா­கவும் உங்­களின் நிலையில் இருந்து இறங்கி வர­மாட்­டீர்கள். எதையும் உங்­களின் எண்­ணப்­ப­டியே செய்து முடிப்­பீர்கள். பிடி­வா­தமும் முயற்­சியும் உங்­க­ளோடு என்றும் ஒட்டி நிற்­பவை. உங்கள் ராசி நிலைக்கு இந்த 2016 ஆம் ஆண்டில் சனீஸ்­வரன் சஞ்­சாரம் கண்­டார்த்த சனி­யாக 4ம் இடத்தில் அமைந்து வருடம் முழு­வதும் சஞ்­ச­ரிப்­பதால் எதிர்­பா­ராத பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும். அத்­தோடு குருவின் சஞ்­சாரம் ஆண்டின் நடுப்­ப­குதி வரை ஜென்­மக்­கு­ரு­வாக அமை­வது அலைச்சல், குடும்­பப்­பி­ரிவு, வழக்கு விவ­காரம், சிறை­வாசம் போன்ற நிலை­க­ளுக்கு ஒப்­பான பலன்கள் அமையும் நிலை இருக்கும். 09.01.2016 முதல் ராகுவின் சஞ்­சாரம் உங்­களின் ராசி நிலையில் கேதுவின் சஞ்­சாரம் களத்­தி­ரஸ்­தா­ன­மா­கிய 7ஆம் இடத்தில் அமை­வது பல வகை­யிலும் அலைச்சல் நிலை இருக்கும். தொழில் நிலை­களில் வேலைப்­ப­ளுவும் மேல­தி­கா­ரி­க­ளுடன் கருத்து வேறு­பா­டு­களும் அமையும் நிலை இருக்கும். எதிர்­பா­ராத பண­வி­ரயம் பொருள்­வி­ரயம் என்­பன அமையும் பலன் இருக்கும். ஆண்டின் நடுப்­ப­கு­தியின் மேல் குரு­ப­கவான் தனஸ்­தா­ன­மா­கிய 2ம் இடம் அமை­வதன் மூல­மாக ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான நன்­மைகள் அமையும். குடும்­பத்­திலே சுப­கா­ரிய பலன்கள் ஏற்­படும். எதையும் சமா­ளிக்­கக்­கூ­டிய தெம்பும் ஆற்­றலும் இருக்கும். பெண்­க­ளுக்கு ஆண்டின் முற்­ப­குதி பல­வி­த­மான பிரச்­சி­னை­களை கொடுத்­தாலும் பிற்­ப­குதி ஓர­ள­விற்கு இடை­யி­டையே நன்­மை­யான பலன்கள் கொடுக்கும். மாண­வர்கள் கல்வி நிலையில் முன்­னேற்­ற­க­ர­மான பலன்கள் பெற முடியும். பொது­வாக சனீஸ்­வரன் வழி­பாடு மேற்­கொள்­வது மிகவும் நல்­லது. எதிர்­பா­ராத வகை சுக­வீ­னங்கள் மருத்­துவ செல­வுகள் என்­பன ஏற்­படும். மன­நி­லையில் அதி­க­மான யோச­னைகள் அமையும். எனவே சனீஸ்­வரன் வழி­பாட்­டுடன் உங்­களின் ராசி­நாத தெய்வம் அம்மன் வழி­பாடும் மேற்­கொள்­ளவும். எனவே எதையும் சாதித்து வெற்றி கொள்ள வேண்டும் என்­கிற துடிப்பும் ஆர்­வமும் கொண்ட உங்­க­ளுக்கு 2016ஆம் ஆண்டு ஓர­ள­விற்கு நன்­மைகள் கொடுக்கும். இந்த ஆண்­டிலே உங்­க­ளுக்கு நூற்­றிற்கு 60% நன்­மைகள் உண்டு.

கன்னி ராசி
(உத்­தரம் 2 ,3, 4 ம் பாதம், அஸ்தம், சித்­திரை 1, 2ம் பாதம்)

எப்­போதும் மன­திலே ஏதேனும் ஒரு சிந்­தனை கொண்­ட­வ­ராக குழப்ப நிலை அதிகம் கொண்ட கன்னி ராசி அன்­பர்­களே, உங்­க­ளைப்­பற்­றிய பிரச்­சினை அல்­லது உற­வினர் நண்­பர்கள் பற்­றிய பிரச்­சினை என்­ப­ன­வற்றை உங்­க­ளுக்குள் வாங்கி அதி­க­மான போராட்ட நிலை­களை கொண்டு சிர­மப்­ப­டு­வீர்கள். இந்த 2016ஆம் ஆண்டு உங்­க­ளுக்கு வருடம் முழு­வ­து­மாக சனீஸ்­வ­ரனின் சஞ்­சாரம் ஜெயஸ்­தானம் எனப்­படும் 3ஆம் இடம் அமை­வது சிறப்­பான நிலையே. குருவின் சஞ்­சாரம் ஆண்டின் நடுப்­ப­குதி வரை விர­யஸ்­தா­ன­மா­கிய 12ஆம் இடம் அமை­வதால் எதிர்­பா­ராத சுபச்­செ­ல­வுகள் அமை­கின்ற நிலை இருக்கும். 09.01.2016 முத­லாக ராகு 12ம் இடமும் கேது 6 ம் இடமும் அமை­வது சிறப்­பான அனு­கூ­ல­மான பலன்கள் கொடுக்கும் நிலை­யி­ருக்கும். எனவே முற்­ப­கு­தியில் ஓர­ள­விற்கு உங்­களின் எதிர்­பார்ப்­புக்­களை நிறை­வேற்­றக்­கூ­டி­ய­தான நிலைகள் அமைந்­தி­ருக்கும். தொழில் நிலை­களில் ஓர­ள­விற்கு நன்­மை­யான நிலைகள் இருக்கும். சனீஸ்­வரன் ராகு கேது பலன்கள் இந்த 2016ஆம் ஆண்டு முழு­வதும் உங்­க­ளுக்கு அனு­கூலம் தரு­வ­தா­கவே அமையும் நிலை­யுண்டு. எனவே தொழில்­நிலை குடும்­ப­நிலை என்­பன ஏற்­பு­டைய நற்­ப­லன்­களை கொடுக்கும். இருப்­பினும் ஆண்டின் நடுப்­ப­கு­தியின் மேல் 2016 ஜூலை மாதத்தின் பின் குருவின் கோசார சஞ்­சாரம் ஜென்­மஸ்­தா­ன­மா­கிய முதலாம் இடம் அமை­வது சற்­றுப்­பி­ரச்­சி­னைகள் சிக்கல் நிலை­களை கொடுக்கும். எடுக்கும் முயற்­சி­களில் சிறு சிறு தடை தாமத நிலைகள் இருக்கும். உடல்­நி­லையில் திடீர் சுக­வீனம், மருத்­துவ செல­வுகள் என்­பன ஏற்­படும். தொழில் நிலைச்­சிக்­கல்­களும் அமையும். பெண்­க­ளுக்கு ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன்கள் அமைய இட­முண்டு. பிற்­ப­கு­தியில் நிதானம் தேவை. மாண­வர்கள் கல்வி நிலையில் சற்று இறுக்­க­மான நிலைகள் இருக்கும். கூடு­த­லான முயற்­சியும் நிதா­னமும் வேண்டும். எனவே 2016ம் ஆண்டு முற்­ப­குதி உங்­களின் பலா­பலன் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான நிலை­களை கொடுக்கும். எந்த விட­யத்­தையும் ஒன்­றுக்கு பல­முறை ஆலோ­சித்து செயற்­ப­டு­கின்ற உங்­க­ளுக்கு அதற்கு ஏற்ப காரி­யங்­களை நகர்த்தி செயல்­ப­டவும் முடியும். எனவே அதை தெரிந்து செயற்­ப­டுங்கள். இந்த ஆண்டு உங்­க­ளுக்கு நூற்­றிற்கு 55% நன்மை தரும்.

துலாம் ராசி
( சித்­திரை 3, 4 ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

எதைச்­செய்­தாலும் அதை சரி­யாக நேர்­மை­யாக செய்ய வேண்டும் எனும் மன­நிலை கொண்ட துலா ராசி அன்­பர்­களே, ஒரு தவறைச் செய்­தாலும் அதற்கு ஏற்ப பிரா­யச்­சித்தம் செய்து கொள்­ளு­கின்ற உங்­களின் மனச்­சாட்­சிக்கு பயம் கொள்ளும் குண­யி­யல்பு உங்­க­ளுக்கு உரிய தனித்­து­வ­மான குண­மாகும். 2016ஆம் ஆண்­டிலே உங்கள் ராசி நிலைக்கு ஏழ­ரைச்­சனி கடைக்­கூற்றுச் சஞ்­சாரம் வருடம் முழு­வதும் அமை­கின்­றது. எனவே சிறு சிறு காரி­யத்­த­டை­களும் குடும்ப நிலையில் மந்­த­மான மத்­தி­ம­மான பலன்­களும் அமை­கின்ற நிலை இருக்கும். குருவின் கோசார சஞ்­சாரம் ஜூலை மாதம் வரை லாபஸ்­தா­ன­மா­கிய 11ம் இடம் அமை­வது தொழில் நிலைச்­சி­றப்பும், நல்ல பண­வ­ரவும் அமையும் நிலை­யி­ருக்கும்.

புதிய முயற்­சிகள் அனு­கூ­ல­மான நன்­மை­களை கொடுக்கும்.
திரு­மணம் போன்ற சுப­கா­ரி­யங்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­பலன் அனு­கூ­ல­மா­ன­தாக அமையும் நிலை இருக்கும். மற்றும் ஜன­வரி 09 முத­லாக ராகு 11ஆம் இடமும் கேது 5ஆம் இடமும் அமை­வதும் ராகுவின் 11ஆம் இடச்­சஞ்­சாரம் ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன்கள் கொடுக்கும். தொழில் நிலைச்­சி­றப்­புக்கள் அமை­கின்ற நிலை இருக்கும். கேதுவின் 5ஆம் இடச்­சஞ்­சாரம் பூர்­வீக சொத்து விட­யங்­களில் சிக்கல் நிலை புத்­தி­ரர்­களால் மனச்­சஞ்­சல நிலை போன்ற பலன்­களை ஏற்­ப­டுத்தும். 2016 ஜூலை மாதத்தின் மேல் குருவின் கோசார பலன் விர­யஸ்த்­தானம் எனப்­ப­டு­கின்ற 12 ம் இடம் அமை­வது எதிர்­பா­ராத செல­வீ­னங்கள் ஏற்­ப­டு­கின்ற நிலை இருக்கும்.
மன­நி­லையில் சிறு சிறு குழப்ப நிலை இருக்கும். இருப்­பினும் பெரும் சிர­மங்கள் ஏற்­ப­டக்­கூ­டிய நிலைகள் இருக்­காது. ஏழ­ரைச்­சனி நிறைவு பெறு­கின்ற காலத்தை இவ்­வ­ருடம் எட்­டு­வதால் எதிர்­பா­ராத வகை திடீர் நன்­மைகள் அமையும் நிலை இருக்கும். பொது­வா­கவே பெண்­க­ளுக்கு திடீர் அனு­கூ­ல­மான பலன்கள் அமையும் நிலை இருக்கும். மாண­வர்­க­ளுக்கு கல்வி நிலைச்­சி­றப்­புக்கள் நன்மை தரு­வ­தாக அமையும். எதையும் சமா­ளிக்­கக்­கூ­டிய நிலை அமையும்.

எதையும் மிகவும் நேர்த்­தி­யாக செய்யும் உங்­க­ளுக்கு எதி­ரி­களும் பிரச்­சி­னை­களும் மிகவும் அதி­க­மாக இருக்கும் நிலை உண்டு. எனவே அதற்கு ஏற்ப செயல்­ப­டவும். நூற்­றிற்கு 70% உங்­க­ளுக்கு நன்மை உண்டு. (தொடரும்)

விருட்­சிக ராசி
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

தயக்­க­மின்றி எதையும் துணி­வோடு செய்யும் ஆற்­றலும் அய­ராத முயற்­சியும் கொண்ட விருட்­சிக ராசி அன்­பர்­களே! உங்­களின் குண இயல்­பா­னது எந்த விட­யத்­தையும் ஆராய்ந்து அதிலே உங்­க­ளுக்கு உரிய வெற்றி நிலையை தெளி­வாக பெற்­றுக்­கொள்­ளு­கின்ற நடை­மு­றை­யாகும். அந்த வகையில் பல விட­யங்­க­ளிலும் நீங்கள் சுய­ந­லத்­தோடு தெளி­வாக செயற்­ப­டு­வீர்கள். இந்த 2016 ஆம் ஆண்டு உங்­க­ளுக்கு ஜென்­மச்­சனி எனப்­படும் ஏழ­ரைச்­ச­னியின் நடுச்­சுற்று சஞ்­சாரம் நடை­பெ­று­கின்­றது.

எனவே எதிர்­பா­ராத திடீர் பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்க வேண்­டிய நிலை இருக்கும். தொழில் நிலை­களில் தேவை­யற்ற பிரச்­சி­னைகள் உங்­க­ளைச்­சூ­ழு­கின்ற பலன் அமையும். மருத்­துவ செலவு சத்­திர சிகிச்சை போன்ற பலன்­களும் அமையும். பொறுமை நிதா­ன­முடன் செயற்­பட வேண்டும். அத்­தோடு குருவின் கோசார நிலை ஜீவ­னஸ்­தா­ன­மா­கிய 10ம் இடம் அமை­வதால் தொழில் நிலை­களில் அலைச்­சலும் திடீர் இட­மாற்­றங்­களும் தொழில் சார்ந்த பிர­யா­ணங்­களும் அமையும் நிலை இருக்கும்.

எனவே பொறுமை நிதா­ன­முடன் செயற்­பட வேண்டும். ஜன­வரி 9 முதல் ராகுவின் சஞ்­சாரம் 10ம் இடமும் கேதுவின் சஞ்­சாரம் 4ம் இடமும் அமை­கின்­றன. எனவே இவ்­விரு சஞ்­சா­ரமும் சற்று சிக்கல் நிலை­க­ளையே கொடுக்கும். 2016 ஆண்டு நடுப்­ப­கு­தியின் மேல் குருவின் சஞ்­சாரம் லாபஸ்­தா­ன­மா­கிய 11ம் இடம் அமை­வது ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன்கள் அமையும் நிலை­யுண்டு. தொழில் சார்ந்த முன்­னேற்­றங்கள் அமையும் நிலை­யுண்டு. இருப்­பினும் வருடம் முழு­வதும் ஏழ­ரைச்­ச­னியின் ஜென்ம சஞ்­சாரம் சிக்கல் நிலைகள் போராட்ட நிலைகள் கொடுத்த வண்­ணமே இருக்கும். எனவே அதற்கு ஏற்ப நிதா­ன­மான செயற்­பாடு கொள்­வதே மிக நல்­லது. பெண்­க­ளுக்கு ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான நன்­மைகள் ஆண்டின் நடுப்­ப­கு­தியின் மேல் அமையும். மாண­வர்கள் நிதா­ன­முடன் செயற்­பட்டால் நல்ல வெற்றி கிடைக்கும். எனவே பொது­வாக இந்த 2016ம் ஆண்டு போராடி ஜெயிக்க வேண்­டிய நிலையே அதி­க­மாக அமை­கின்­றது.

குடும்ப நிலை­களில் திடீ­ரென பிரச்­சி­னைகள் ஏற்­படும் நிலை இருக்கும். பொருள் நஷ்டம், பண விரயம், வழக்கு விவ­காரம் போன்ற பலன் திடீ­ரென உங்­க­ளைச்­சூ­ழு­கின்ற பலன்கள் அமையும். எனவே அதற்கு ஏற்ப செயற்­பாடு கொள்­ளவும். உங்­களின் காரி­யங்­களில் அதி­க­மான ஆர்­வமும் ஊக்­கமும் கொண்டு செயற்­பட்டு எந்த நிலை­யிலும் வெற்றி பெறும் அய­ராத முயற்சி கொண்­ட­வர்கள் நீங்கள். இந்த ஆண்டு நூற்­றிற்கு 55% நன்­மைகள் தரும் நிலை­யுண்டு.

தனுசு ராசி
(மூலம், பூராடம், உத்­த­ராடம், 1ம்பாதம்)

தன்­னம்­பிக்­கையும் விடா முயற்­சியும் துணிவும் அதி­க­மாக கொண்ட தனுசு ராசி அன்­பர்­களே! எதை எங்கே எப்­படி செய்ய வேண்டும் என்­கின்ற சூட்­சுமம் தெரிந்­த­வர்கள் நீங்கள். உங்­க­ளுக்கு தெரி­யாத சம்­பந்தம் இல்­லாத விட­யங்­களில் கூட உங்­களின் தலை­யீடு அமைய நேரிட்டால் அதிலும் ஏதோ ஒரு வகையில் வெற்­றி­களை பெற்று விடு­கின்ற ஆளுமை கொண்­ட­வர்கள் நீங்கள். உங்­க­ளுக்கு 2016ஆம் ஆண்டு ஏழ­ரைச்­சனி சஞ்­சாரம் முதற்­கூற்று நிலை வருடம் முழு­வதும் அமை­கின்­றது. குருவின் சஞ்­சாரம் பாக்­கி­யஸ்­தா­ன­மா­கிய 9ம் இடம் அமைந்­தி­ருக்­கின்­றது.

எனவே ஆண்டின் நடுப்­ப­கு­தி­வரை அனு­கூ­ல­மான நன்­மைகள் அமையும். தொழில் நிலைச்­சி­றப்­புகள் நல்ல மேன்மை தரும். குடும்­பத்தில் மகிழ்வும் சுப­கா­ரிய பலன்­களும் அமை­கின்ற நிலை இருக்கும். எந்த விடயம் என்­றாலும் வெற்­றி­க­ளாக அமையும் நிலை இருக்கும். 09.01.2016 முதல் ராகு 9ம் இடமும் கேது 3ம் இடமும் அமை­வதும் சிறப்­பான நிலையே. உங்­களின் எதிர்­பார்ப்­புக்­களை வெற்றி கொள்­ளக்­கூ­டிய வாய்ப்­புக்கள் அதி­க­மி­ருக்கும். 2016 ஜுலை மாதத்தின் மேல் குருவின் சஞ்­சாரம் ஜீவஸ்­தா­ன­மா­கிய 10ம் இடம் அமை­வது தொழில் நிலை­களில் மறை­முக எதிர்ப்­புக்­களும் வேலைப்­ப­ளுவும் அதி­க­மி­ருக்கும். தொழில் சார்ந்த வெளி­நாட்­டுப்­பி­ர­யா­ணங்­களும் அமையும் நிலை இருக்கும். இருப்­பினும் தொழில் நிலையில் பெரும் சிர­மங்கள் அமைய இட­மில்லை. ஏழ­ரைச்­ச­னியின் சஞ்­சார பலன் இடை­யி­டையே உடல் நிலை உபா­தைகள் திடீர் செல­வீ­னங்கள் போன்ற நிலை­க­ளைக்­கொ­டுக்கும். குடும்ப நிலை­யிலும் புத்­தி­ரர்கள் மூலம் சஞ்­ச­ல­மான நிலை­களை ஏற்­ப­டுத்தும். பெண்­க­ளுக்கு அனு­கூ­ல­மான நன்­மைகள் அமையும் நிலை உண்டு. மன­திலே மகிழ்வும் எதிர்­பார்ப்­புக்­களில் நிறைவும் அமையும் நிலை உண்டு. மாண­வர்­க­ளுக்கு கல்வி நிலையில் அனு­கூ­ல­மான வெற்­றிகள் அமையும். பரீட்­சை­களில் நல்ல பெறு­பே­று­களை பெறக் கூடிய நிலை இருக்கும். பொது­வாக உங்­களின் ராசி நாதன் குரு­ப­க­வா­னாக இருப்­பது எதையும் சிந்­தித்து செயல்­ப­டு­கின்ற குண இயல்பு அதி­க­மாக அமைந்­தி­ருக்கும். நீங்கள் நினைக்கும் விட­யங்­களை எப்­ப­டியும் தொட்டு விடு­கின்ற முயற்சி ஆளுமை உழைப்பு என்­பன உங்­களின் தனித்­து­வ­மாகும். எனவே அதற்கு ஏற்ப உங்­களின் செயற்­பா­டு­களை அமைத்­துக்­கொள்க. இந்த 2016ம் ஆண்டு உங்­க­ளுக்கு நூற்­றிற்கு 65% நன்மை தரும்.

மகர ராசி
(உத்­த­ராடம் 2 ,3, 4 பாதம் திரு­வோணம், அவிட்டம் 1, 2 பாதம்)

மன­திலே படும் விட­யங்­களை முகத்­திற்கு நேரே பேசி விடு­கின்ற குண இயல்பு கொண்ட மகர ராசி அன்­பர்­களே!
உங்­களின் தைரி­ய­மான செயற்­பாடு பல விட­யங்­க­ளிலும் உங்­க­ளுக்கு வெற்றி தரு­கின்­றதாய் அமை­கின்­றது. எதையும் சாதிக்கக் கூடிய துணிவு கொண்­ட­வராய் செயற்­ப­டு­கின்­றீர்கள். உங்­களின் ராசிக்கு 2016ஆம் ஆண்டு சனீஸ்­வரன் சஞ்­சாரம் லாபஸ்­தா­ன­மா­கிய 11ம் இடம் அமை­வது மிகவும் சிறப்­பான அனு­கூ­ல­மான பலன்­களை வருடம் முழு­வதும் கொடுக்கும் நிலை இருக்கும். குருவின் கோசார சஞ்­சார நிலை­யா­னது 2016 ஜுலை மாதம் வரை அட்­ட­மஸ்­தா­ன­மா­கிய 8ம்இடம் அமைந்­தி­ருப்­பது எடுக்­கின்ற முயற்­சி­களில் சிறு சிறு தடைகள் தாமத இழு­பறி நிலைகள் இருக்கும். எதையும் திட்­ட­மிட்டு செய்ய முடி­யாத நிலை இருக்கும். உடல் நிலை உபா­தை­களும் மருத்­துவ செலவும் அமையும். அத்­தோடு ராகுவின் சஞ்­சாரம் 8ம் இடமும் கேதுவின் சஞ்­சாரம் 2ம் இடமும் அமை­வது சற்று மந்­த­மான பல­னா­கவே இருக்கும். இருப்­பினும் 2016 ஜுலை மாதத்தின் மேல் குருவின் பலன் பாக்­கி­யஸ்­தா­ன­மா­கிய 9ம் இடம் அமை­வது எடுக்கும் முயற்­சி­களில் நல்ல வெற்­றி­களும் தொழில் நிலைச் சிறப்­புக்­களும் அமையும் நிலை இருக்கும். குடும்­பத்தில் மகிழ்­வான பலன்­களும் உற­வி­னர்­க­ளுடன் நல்ல அணுகு முறை­யான நிலை ஏற்­படும். திரு­மணம் போன்ற சுப­கா­ரிய பலா பலன்­களை எதிர்­பார்க்­கின்­ற­வர்­க­ளுக்கு அப்­பலன் நிறை­வா­ன­தாக அமையும். எனவே ஆண்டின் பிற்­ப­கு­தி­யா­னது மிக மிக சிறப்­பா­ன­தாக அமையும். சனீஸ்­வ­ரனின் லாபஸ்­தான சஞ்­சாரம் குருவின் பாக்­கி­யஸ்­தான சஞ்­சாரம் என்­பன மிகவும் அனு­கூ­ல­மான நிலையைக் கொடுக்கும். பண­வ­ரவு மிகவும் திருப்­தி­க­ர­மான நிலையில் அமையும். பெண்­க­ளுக்கு மன மகிழ்வும் எதிர்­பார்ப்­புக்­களில் வெற்­றியும் கிடைக்கும் நிலை இருக்கும். மாண­வர்­களின் கல்வி நிலை நல்ல முன்­னேற்­ற­க­ர­மா­ன­தாக இருக்கும். பரீட்­சை­களில் நல்ல பெறு­பே­று­களை பெறலாம். எனவே உங்­களின் எண்­ணங்­களை நிறை­வேற்றும் நிலை­யாக 2016ஆம் ஆண்டு நடுப்­ப­கு­தியின் மேல் உங்­க­ளுக்கு மிகச் சிறப்­பான பலன் அமையும். எதையும் வெற்றி கொள்ள முடியும். 2016ஆம் ஆண்டு நூற்­றிற்கு 75% நன்­மைகள் தரும்.

கும்ப ராசி
(அவிட்டம் 3, 4ம் பாதம் சதயம் பூரட்­டாதி 1, 2, 3ம் பாதம்)

உங்­களின் உயர்வு நிலையை எப்­படி மேலோங்க செய்­யலாம் எனும் எண்­ணமும் செயலும் கொண்ட கும்ப ராசி அன்­பர்­களே பல விட­யங்­க­ளிலும் உங்­களின் நலத்­திற்கு முக்­கி­யத்­துவம் கொடுத்து இடம் பொருள் ஏவல்­க­ளுக்கு ஏற்ப வெற்­றி­க­ளையும் பெற்றுக் கொள்ளும் உங்­களின் சாணக்­கியம் அற்­பு­த­மா­னது. 2016ஆம் ஆண்டு முழு­வதும் சனீஸ்­வரன் உங்கள் ராசி நிலைக்கு ஜிவ­னஸ்­தா­ன­மா­கிய 10 ம் இடம் அமை­வது தொழில் நிலை­களில் சிக்­கல்­களும் வேலைப்­ப­ளுவும் திடீர் இட­மாற்­றமும் அமையும் நிலை இருக்கும். ஜன­வரி 9முத­லாக ராகுவின் சஞ்­சாரம் களஸ்­தி­ரஸ்­தா­ன­மா­கிய 7ம் இடமும் கேதுவின் சஞ்­சாரம் ஜென்­மஸ்­தா­ன­மா­கிய 1 ஆம் இடமும் அமை­வது குடும்ப நிலையில் பல­வி­த­மான குழப்­பங்கள் அமையும். கணவன் மனை­விக்கு இடையே வாக்கு வாதம் உற­வி­னர்­க­ளுடன் மனச் சஞ்­சலம் தேவை­யற்ற வீண் பிரச்­சி­னைகள் என்­பன ஏற்­பட்டு மறையும் நிலை இருக்கும். ஜூலை மாதம் வரை குருவின் பலன் 7ஆம் இடம் அமை­வது இடை­யி­டையே சிறு சிறு நன்­மை­யான பலன்கள் அமையும் நிலை இருக்கும். 2016 ஜூலை மாதத்தின் மேல் குருவின் பலன் அட்­ட­மஸ்­தானம் எனும் 8ம் இடம் அமை­வது பல­வி­த­மான பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்டி வரும். எதையும் தீர்க்­க­மாக செய்ய முடி­யாத நிலை இருக்கும். வழக்கு விவ­கா­ரங்­களில் சிக்கல் நிலை இருக்கும். உடல் நிலை உபா­தை­களும் மருத்­துவ செலவு என்­பன அமையும் நிலை இருக்கும். பெண்­க­ளுக்கு மனச்­சஞ்­சல நிலையும் தேவை­யற்ற உற­வி­னர்­களின் பிரச்­சி­னை­களும் எதிர்­கொள்ள வேண்டி வரும். குடும்ப நிலையில் சிக்கல் இருக்கும். மாண­வர்கள் கல்வி நிலையில் கூடு­த­லான முயற்சி எடுக்க வேண்டும். பரீட்­சை­களில் நிதா­ன­மான முயற்சி மேற்­கொள்ள வேண்டும். இந்த ஆண்டிலே அமையும் கோசார பலா பலன்களின்படி எந்த விடயம் என்றாலும் பொறுமை நிதானமுடன் செயற்பட வேண்டும். உங்களின் மன நிலையில் பலவிதமான பிரச்சினைகள் சூழும் நிலையும் இந்த 2016 ஆண்டு உங்களுக்கு நூற்றிற்கு 45% நன்மையுண்டு.

மீன ராசி
(பூரட்டாதி 4ம் பாதம் உத்தரட்டாதி ரேவதி)

எல்லா இடங்களிலும் உங்களின் பதிவுகளை நிலை நிறுத்தி விட வேண்டும் எனும் எண்ணம் கொண்ட மீனராசி அன்பர்களே உங்களின் மனநிலை தைரியம் அதிகமானது. நீங்கள் எதைச் செய்தாலும் அதிலே உங்களின் செயல்பாட்டை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் எண்ணம் உங்களிடம் அதிகமாக இருக்கும். மிடுக்கான குணமும் கோபமும் அதிகம் கொண்டவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 2016ம் ஆண்டு சனீஸ்வரன் பாக்கியஸ்தானமாகிய 9ம் இடம் அமைந்திருப்பது மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும் நிலையுண்டு. தொழில் நிலைகளில் நல்ல முன்னேற்றம் அமையும். பணவரவு மிகவும் திருப்திகரமாக அமையும். குடும்ப நிலை மகிழ்வும் இருக்கும். உங்களின் ராசிக்கு குருபகவான் சஞ்சாரம் ரோகஸ்தானமாகிய 6ம் இடம் அமைவது சற்று சிறு சிறு மந்தமான பலன்கள் அமையும். மறைமுகமான எதிர்ப்புகள் தொழில் நிலையில் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் சிக்கல் நிலைகள் கொடுக்கும் நிலையுண்டு. அத்தோடு ராகு 6ம் இடமும் கேது 12ம் இடமும் அமைவது சிறு சிறு நன்மைகளும் அதிர்ஷ்ட பலன்களும் அமைகின்ற நிலையுண்டு. ஜூலை மாதத்தின்பின் குருவின் பலன் களத்திரஸ்தானமாகிய 7ம் இடம் அமைவது அனுகூலமான பலன்களை கொடுக்கும். குடும்ப நிலையில் மகிழ்வான பலன்கள் ஏற்படும். திருமணம் போன்ற சுபகாரியங்களை எதிர்பார்க்கின்றவர்களுக்கு அப்பலன் அனுகூலமாக அமையும் நிலை உண்டு. எனவே ஆண்டின் பிற்பகுதி உங்களுக்கு மிகவும் சிறப்பான பலன் கொடுக்கும். புதிய முயற்சிகள் நல்ல வெற்றிகளைத் தரும். பணவரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். பெண்களுக்கு மிகவும் மன மகிழ்வும் அனுகூலமான நிலைகளும் ஏற்படும் நிலை இருக்கும். மாணவர்களின் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றகரமான நிலைகள் அமையும். பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளை பெறும் நிலையிருக்கும். புதிய முயற்சிகளில் அனுகூலமான வெற்றிகள் அமையும். எனவே உங்களுக்கு 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதி பலவகையிலும் நன்மைகளை வாரி வழங்கும் நிலைகள் இருக்கும். வெளிநாட்டு பிரயாணங்கள் அமையும் பலாபலனும் உண்டு. நிறைவான நிலை அமையும். இந்த ஆண்டு நூற்றிற்கு 70% நன்மையுண்டு.

துன்னையூர் கலாநிதி ராம் தேவலோகேஸ்வரக்குருக்கள்

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல