ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

ஆஹாஹாஹாஹாஹாஹாஹா.. மறக்க முடியாத குமரி முத்து!

ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கும். ஆனால் குமரிமுத்துக்கு அந்த சிரிப்புதான் அடையாளம். சிரிப்பு நடிகர்களால் மற்றவர்கள்தான் சிரிப்பார்கள். ஆனால் இவரது சிரிப்புதான் இவரது அடையாளமாகவும் மாறியது எவ்வளவு பொருத்தம் பாருங்கள்.



தனது கண்ணையும் கூட தனது பலமாக மாற்றிக் கொண்டவர் குமரி முத்து. இவரது சிரிப்பும், இவர் நடித்த காட்சிகளும் மறக்க முடியாதவை.

கடைசி வரை திமுக காரராகவே இருந்து மறைந்தவர் குமரி முத்து. தான் உண்டு, தனது வேலை உண்டு என்றும் இருந்தவர். அமைதியானவர், அன்புள்ளம் கொண்டவர்.

குமரி முத்து அடிப்படையில் நாடக நடிகர். மேடை நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் சினிமாவுக்கு வந்தார். 60களின் இறுதியில் நடிக்க அவர் அவர் நடிக்காத நடிகர்களே இல்லை என்று கூறலாம்.

எம்.ஜி.ஆர். - சிவாஜி படங்களில் ஆரம்பித்த இவரது நடிப்பு அஜீத், விஜய் வரையும் தொடர்ந்தது. நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை வகுத்துக் கொண்டு வலம் வந்தவர் குமரி முத்து.

ஆஹாஹாஹாஹா என்று இவர் சிரிக்கும் ஸ்டைலே தனி. அந்த சிரிப்புதான் குமரிமுத்துவின் அடையாளமாகவும் மாறிப் போனது.

இவரது நடிப்பில் நண்டு, கோழி கூவுது, ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களில் காமெடி பேசப்பட்டது.

பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான இது நம்ம ஆளு படத்தில் இவர் காமெடியில் கலக்கியிருப்பார். வெகுவாகப் பேசப்பட்டது இவரது கேரக்டர்.

நடிகர் குமரி முத்து, அவரது அக்மார்க் சிரிப்புக்காக புகழ் பெற்றவர். முள்ளும் மலரும், ஊமை விழிகள், இது நம்ம ஆளு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடைசி வரை தனது கொள்கையிலிருந்து இறங்காமல் திமுகவில் செயல்பட்டு வந்தவர் குமரிமுத்து. திமுகவில் மேடைப் பேச்சாளராக வலம் வந்தவர். பதவி என்று எதையும் எதிர்பார்க்காமல் செயல்பட்டவர்.
சிலரை மறக்க முடியாது... அந்த வரிசையில் குமரிமுத்துக்கும் இடம் உண்டு.

Thatstamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல