ஹெடர் மற்றும் புட்டர்: எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்களை அமைத்த பின்னர், நாம் மேற்கொள்ளும் நகாசு வேலைகளில் ஒன்று, அதன் ஹெடர்களையும் புட்டர்களையும் (headers and footers) அமைப்பது. ஒன்று அல்லது இரண்டு ஒர்க்ஷீட்களை ஒரு ஒர்க்புக்கில் அமைத்திருந்தால், இது மிகவும் எளிமையான வேலையாக இருக்கும். அதுவே, பல ஒர்க் ஷீட்கள் அடங்கிய ஒர்க்புக்காக அமைந்து, அவை அனைத்திலும் ஒரே மாதிரியான ஹெடர் மற்றும் புட்டர் அமைப்பதாக இருந்தால், அந்த வேலை சற்று நேரம் எடுக்கும் செயலாக அமையும். இதனை எப்படிச் சந்திப்பது எனப் பார்க்கலாம்.
இது ஒன்றும் கடினமான வேலை அல்ல. அனைத்து ஒர்க் ஷீட்களையும் ஒரு குழுவாக எண்ணி செயல்பட்டால், இது மிகவும் எளிதாக அமையும்.
1. முதலில் எந்த ஒர்க் ஷீட்களில் ஒரே மாதிரியான ஹெடர் மற்றும் புட்டர் அமைப்பது என்பதனை முடிவு செய்து கொள்ளவும்.
2. அந்த வரிசையில் உள்ள முதல் ஒர்க் ஷீட்டினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர், கடைசி ஒர்க் ஷீட்டினைத் தேர்ந்தெடுக்கும் வரை ஷிப்ட் கீயை அழுத்திப் பிடிக்கவும். இப்போது பல ஒர்க்ஷீட்கள் தேர்ந்தெடுக்கப்படும். இதனை உணர்த்திக் காட்ட, எக்ஸெல் புரோகிராம், Group என்ற சொல்லை தன் டைட்டில் பாரில் காட்டும்.
4. இனி, நீங்கள் விரும்பியபடி, ஹெடர் அல்லது புட்டரை அமைக்கவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த ஒர்க் ஷீட்கள் அனைத்தும் அதே போல் அமைக்கப்படுவதனைக் காணலாம்.
டேட்டாவின் கீழே கோடு: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டாவைத் தேர்வு செய்து, பின்னர் அடிக்கோடுக்கான U ஐகான் மீது அழுத்தினால், அல்லது கண்ட்ரோல் + U அழுத்தினால், டேட்டாவின் கீழாக ஒரு கோடு அமைக்கப்படும். இது அடிக்கோடு அமைத்தலாகும். ஒரு அடிக்கோடுக்குப் பதிலாக, இரண்டு கோடுகள் அமைக்க வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு Underline டூலை அழுத்தவும். இரு கோடுகள் அமைக்கப்படும். இதே போல பலவகைக் கோடுகள் அமைக்க, Format=>Cells கட்டளையை கொடுத்து, பின்பு Font டேபை அழுத்திப் பாருங்கள். பலவித அடிக்கோடுகளை Underline பகுதியில் காணலாம்.
எக்ஸெல் டாஸ்க் பாரில் விடைகள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டைப் பொறுத்த வரை, நாம் அதில் உள்ள நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையில் உள்ள செல்களைத் தேர்ந்தெடுத்தால், அதன் மதிப்புகள் நமக்கு டாஸ்க் பாரில் காட்டப்படும். Average, Count, Sum ஆகிய மதிப்புகள் காட்டப்படும். எவற்றைக் காட்ட வேண்டும் என்பதனை நாம் தான் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். எண்களின் கூட்டல் மட்டுமின்றி, மேலும் பல முடிவுகளையும் பெறலாம். ஸ்டேட்டஸ் பாரில், ரைட் கிளிக் செய்திடவும். இதில் ஒரு காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். இதில் Average, Count, Sum போன்ற இன்னும் பிற காட்டப்படும். இவற்றில் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக