வடக்கு மாகாணத்தில் கணவனை இழந்த பெண்களிடம் இராணுவத்தினர் மட்டுமன்றி தமிழ் அரச ஊழியர்களும் பாலியல் இலஞ்சம் கோரும் ஈனச் செயல்கள் நடப்பதாகத் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க. நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் அலுவலகத்தின் பணிகள் தொடர்பில் ஊடகவிலாளர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் நேற்று நடத்திய செயலமர்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
'நீண்டகாலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் பொற்காலம் உதயமாகியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து செயற்படும் இந்த தருணத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படலாம். ஆனால் இன மத ரீதியில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரிவினை, முரண்பாடுகள் மீண்டும் ஏற்படாத வகையில் நிரந்தர நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும்.
கடந்த தசாப்தத்தில் முன்னைய அரசாங்கமும் அதிகாரிகளும் இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார். 30 வருடப் போரையும் அதனை ஆரம்பித்த விடுதலை புலிகளையும் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் தோற்கடித்த போதிலும் போராட்டம் ஏற்பட அடிப்படை காரணிகளாக இருந்த பிரச்சினையை தீர்ப்பதற்கும் அது சார்ந்த மக்களின் உரிமைகளை வழங்குவதற்கும் தவறியுள்ளது.
எனவே உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற பொறுப்பு புதிய அரசாங்கத்திற்கு இருக்கின்ற காரணத்தால் அதற்கான செயலணி உருவாக்கப்பட்டது. இதற்கான பணிகளை முன்னெடுக்க ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும். நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்க விரும்பம் தெரிவித்துள்ள புலம்பெயர் அமைப்புக்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அவர்களின் ஒத்துழைப்பும் எமக்கு அவசியம் என தெரிவித்தார்.
valampurii

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக