வெள்ளி, 18 மார்ச், 2016

பொட்டு அம்மான் மீண்டும் வரவில்லை

நந்திக்கடல் விவகாரம் குறித்து பொன்சேகா விபரிப்பு
தவறுதலாகவே வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டது

புலி­களின் தலைவர் பிர­பா­கரன் மற்றும் பொட்டு அம்மான் உள்­ளிட்ட சிலர் இறுதி யுத்­தத்­தின்­போது நந்­திக்­கடல் தென் பகு­திக்கு தப்பிச்சென்­ற­தாக கே.பி.கூறி­யி­ருக்­கிறார். அத்­துடன் பிர­பா­கரன் திரும்பி வந்­த
தா­கவும் பொட்டு அம்மான் வர­வில்லை என்றும் அவர் கூறி­யி­ருக்­கின்றார். அந்த தகவல் மட்­டுமே எங்­க­ளுக்கு தெரியும்.



பொட்டு அம்மான் அந்த இடத்தில் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என்று நான் நினைக்­கின்றேன் என்று முன்னாள் இரா­ணுவ தள­ப­தியும் அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார்.

பிர­பா­க­ரனை கொழும்­புக்கு அழைத்து வந்­தி­ருந்தால் இப் போது கே.பி.யை அரச அரண்­ம­னையில் வைத்­தி­ருந்­ததைப் போன்று அவ­ரையும் பாது­காப்­பாக வைத்­தி­ருந்­தி­ருப்­பார்கள். அத்­துடன் அவ­ருக்கு வட­கி­ழக்கு முத­ல­மைச்சர் பதவி யும் கொடுக்­கப்­பட்­டி­ருக்கும் என்­பதில் எனக்கு எந்த சந்­தே­க­மு­மில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்கை மன்றக் கல்­லூ­ரியல் நேற்று இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டில் அமைச்சர் சரத் பொன்­சேகா கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

யுத்தம் முடிந்த பின்னர் மஹிந்­தவின் பிள்­ளைகள் சுக­போ­க­மாக காலத்தை கழித்­தார்கள். காலை­முதல் மாலை­வரை ரகர் விளை­யா­டினர். போட்­டியில் தோல்­வி­ய­டை­யும்­போது நடு­வர்­களை தாக்­கினர். ரசி­கர்­களை தாக்­கினர். இது­தானா அபி­வி­ருத்­தியின் பிர­தி­ப­பலன் ?்.

கடந்த அர­சாங்­கத்தில் ஊட­கங்­க­ளுக்கு உண்மை தன்­மையை வெ ளிப்­ப­டுத்த முடி­ய­வில்லை. வெ ளிப்­ப­டுத்­தினால் தொழில் அற்­றுப்­போகும். அதி­க­மான ஊட­க­வி­ய­லா­ளர்­களை பலாத்­கா­ர­மாக தங்கள் பக்கம் இழுத்­துக்­கொண்­டார்கள். ஊடக நிறு­வ­னங்கள் அர­சாங்கம் தொடர்பில் உண்மை தன்­மையை வெ ளிப்­ப­டுத்­தினால் அவர்­களின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை செய­லி­ழக்­கச்­செய்­வ­தாக பகி­ரங்­க­மாக தெரி­வித்­தனர். நாட்டின் சட்­டத்தை கையி­லெ­டுத்­துக்­கொண்­டி­ருந்­தனர். நாட்டில் அவர்­க­ளுக்கு தேவை­யா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தொடுத்­தார்கள் விரும்­பி­ய­வர்­களை விடு­வித்­தார்கள்.

அதே­போன்று நீதி­மன்­றங்­க­ளுக்கு தனக்கு தேவை­யா­ன­வர்­களை நிய­மித்­தனர். அவர்­க­ளுக்கு எதி­ராக செற்­பட்­ட­வர்­களை பதவி நீக்­கி­னார்கள். முன்னாள் பிர­தம நீதி­ய­ர­ச­ருக்கு என்ன நடந்­தது என்ற முழு­நாட்­டுக்கும் தெரியும் . இவ்­வாறு தான் அதி­கா­ரத்தை துஷ்­பி­ர­யோகம் செய்தார். மக்கள் பீதியில் வாழ்ந்­தனர். அன்­றி­ருந்த பயம் இன்று இருக்­கின்­றதா ? இன்று அந்த நிலைமை யாருக்கும் இல்லை. அந்த வித்­தி­யா­சத்தை நாட்­டுக்கு கொண்­டு­வந்தோம். நாங்கள் உயிரை பணயம் வைத்து பெற்ற சுதந்­தி­ரத்தை மீண்டும் இழக்க ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம்.

பழி­வாங்கல்

இரா­ணு­வத்தில் பல அதி­கா­ரிகள் அவர்கள் என்­னுடன் இருந்­தார்கள் என்­ப­தற்­காக எந்த குற்­றமும் சுமத்­தப்­ப­டாத நிலையில் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டார்கள். எமது காரி­யா­ல­யத்தில் சே வை செய்த ஓய்வு பெற்ற இரா­ணு­வத்­தினர் பலரை கைது­செய்­தார்கள். அதில் கெப்டன் சேனக்க எந்த குற்­றச்­சாட்­டும்­இன்றி 440நாட்கள் சிறை­யி­ல­டைக்­கப்­பட்டார். இந்த காலத்தில் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டி­ருந்த யோஷித்த ஞான­சார தேரர் போன்­ற­வர்­க­ளுக்கு இருந்த சுதந்­திரம் வச­திகள் அன்று எமக்­கி­ருக்­க­வில்லை.
மேலும் நான் இரா­ணுவ தள­பதி என்ற வகையில் அர­சாங்கம் காணித்­துண்­டொன்றை வழங்­கி­யது . அதற்கு நான் 90 இலட்சம் ரூபா செலுத்­தினேன். எனை சிறை­யி­ல­டைத்து அந்த காணியை பலாத்­கா­ர­மாக பெற்­றுக்­கொண்­டார்கள். எந்த அனு­ம­தியும் இன்றி வர்த்­த­மானி அறி­வித்தல் ஒன்றின் மூலம் அதை கைப்­பற்­றிக்­கொண்­டார்கள். கொடுத்த பணமும் எனக்கு கிடைக்க வில்லை. தற்­போது ஜனா­தி­பதி அந்த காணியை மீண்டும் எனக்கு பெற்­றுத்­தர நட­வ­டிக்கை எடுத்தார்.

2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் நான் பாரா­ளு­மன்றம் சென்றேன். பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு கார் அனு­ம­திப்­பத்­திரம் ஒன்று வழங்­கப்­படும். நான் 5மாதங்கள் பாரா­ளு­மன்­றத்தில் இருந்தேன். என்­னு­டைய அனு­ம­திப்­பத்­தி­ரத்தை தர­வில்லை. காரணம் நான் இராணு வ தள­ப­தி­யாக இருக்­கும்­போது கார் அனு­ம­திப்­பத்­திரம் பெற்­றுக்­கொ­ண­ட­தாக தெரி­வித்­தனர். ஓய்வு பெற்றுச் செல்லும் இரா­ணுவ தள­ப­திக்கு தாங்கள் பாவித்த காரை எடுத்­துச்­செல்­லலாம் என்று சட்­ட­மூலம் ஒன்றின் ஊடாக அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் எனக்கு பாரா­ளு­மன்­றத்தில் கார்­அ­னு­மதி பத்­திரம் வழங்­க­வில்­லலை.

அந்­த­ள­வுக்கு என்னை பழி­வாங்க வேண்டும் என்­ப­தற்­காக மிகவும் முறை­யற்ற வகையில் நடந்­து­கொண்டார். அந்த காலப்­ப­கு­தியில் அவர் இரா­ஜ­தந்­திர தலைவர் ஒரு­வ­ருக்கு இருக்க வேண்­டிய மன நிலையில் இருக்க வில்லை என்­பதை என்னால் உறு­தி­யாக கூற­மு­டியும்.

என்­னு­டைய கார் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை தராமல் கடந்த சில நாட்­க­ளுக்கு முன்னர் அவர் கார் அனு­ம­திப்­பத்­தி­ரத்­துக்­காக வரி­சையில் இருப்­பதை நான் கண்டேன். அத்­துடன் அந்த அனு­ம­திப்­பத்­தி­ரத்தை எடுத்­துக்­கொண்டு செல்லும் வழியில் அதை கார் வாகன விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு விற்­பனை செய்து விட்டு சென்­ற­தாக எமக்கு தகவல் கிடை­த­தது. அந்த நிலை­மைக்கு அவர் விழுந்­தி­ருப்­பதை கண்டு நான் கவ­லைப்­ப­டு­கிறேன். இவ்­வா­றான ஒரு நிலைமை இந்த நாட்டில் யாருக்கும் ஏற்­படக் கூடாது என பிராத்­திக்­கின்றேன்.

யுத்த வெற்றி

யுத்த வெற்றி தொடர்­பாக முற்­றாக பிழை­யான செய்­தி­யொன்றே கொண்டு செல்­லப்­பட்­டது. உலகில் எந்த நாட்­டிலும் யுத்த வெற்றி அடைந்­த­தற்­காக ஜனா­தி­ப­திகள் மற்றும் பாது­காப்பு அமைச்­சர்கள் தங்­க­ளது பெயர் மற்றும் பதா­தைகள் தொங்­க­வி­ட­மாட்­டார்கள். அது­தொ­டர்­பாக புத்­தகம் எழு­தவோ அல­லது மலர் மாலை அணிய மாட்­டார்கள். தெற்­கா­சிய நாடு­க­ளிலும் இந்­தியா பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளிலும் யுத்த வெற்­றிகள் அடை­யப்­பெற்­றுள்­ளன. ஆனால் இவர்கள் போன்று அவர்கள் செயல்­ப­டு­வதை நாம் ஒரு­போதும் கண்­ட­தில்லை. அமெ­ரிக்கா இஸரேல் யுத்­த­வெற்­ற­களை அடைந்­துள்­ளன. அவர்கள் அந்த வெற்­றியை நாடு­பூ­ரா­கவும் கூறிக்­கொண்டு தேர்­தலில் வாக்கு கேட்­க­வில்லை.

ஆனால் எமது தலை­வர்கள் அவ்­வா­றுதான் செயல்­பட்­டனர். இறு­தியில் ராஜ­ப­க்ஷவும் அவ­ரது சகோ­த­ரரும் தான் இரா­ணு­வத்தை வழி நடத்­தி­ய­தா­கவும் சொன்­னார்கள். அவர்கள் அர­சியல் வாதிகள் என்­பதை மறந்­து­விட்­டார்கள். அவர்கள் இரா­ணுவ சீருடை அணிந்து யுத்த களத்­தில்­இ­ருப்­ப­து­போன்ற மன­நி­லையில் செயல்­பட ஆரம்­பித்­தனர். யுத்­தத்தின் உண்மை நிலையை எதிர்­கா­லத்தில் வெ ளிப்­ப­டுத்­துவோம். புத்­தகம் ஒன்­றி­னூ­டாக சரி வெ ளிப்­ப­டுத்­துவோம். அப்­போது மக்­க­ளுக்கு யுத்­த­களம் எவ்­வாறு இருந்­தது என்­பது தெரி­ய­வரும்.

யுத்­தத்தை வெற்றி கொள்ள எனக்கு சில உபா­யங்­களை செய்ய வேண்­டி­யி­ருந்­தது. அத­னால்தான் வெல்ல முடி­யாது எனறு கூறிய யுத்­தத்தை வெ ன்றோம். யுத­தத்தை வெற்­றி­கொள்ள எனக்கு புதி­தாக ஒன்றும் தர­வில்லை. நான் இரா­ணு­வத்தை பொறுப்­பேற்­கும்­போது வரு­டத்­துக்கு 820 மில்­லியன் ரூபத இரா­ணு­வத்­துக்கு கிடைத்­தது.

அந்த பணத்­தைக்­கொண்டே இரா­ணு­வத்தை வழி­ந­டத்­தினேன். 2இலட்சம் இரா­ணு­வத்­தி­ன­ருக்கு உணவு சீருடை சம்­பளம் கொடுத்தேன். 700க்ம் மேற்­பட்ட வாக­னங்­களை இரா­ணு­வத்­துக்கு பெற்­றுக்­கொண்டோம். இவற்­றை­யெல்லாம் இந்த 82 பில்­லி­ய­னி­லேயே மேற்­கொண்டேன்.

நாங்கள் 40வரு­ட­காலம் யுத்த களத்தில் தொடர்­நது இருந்­த­தால்தான் பயங்­க­ர­வா­தி­களை எவ்­வாறு தாக்க முடியும்? அவர்­க­ளுக்கு எதி­ராக எவ்­வா­றான புதிய முறை­மை­களை பின்­பற்­றலாம் போன்ற அனு­ப­வங்­க­ளைப ்பெற்றுக்­கொண்டோம். அப்­ப­டி­யில்­லாமல் நாங்­களும் டிங்­கரிங் வேலை செய்­தி­ருந்­தால இந்த அனு­பவம் வந்­தி­ருக்­காது. தொடர்­நது களத்தில் இருந்­த­மை­யினால் படை­யி­ன­ருக்கு புதி­தாக பயிற்­சி­களை பெற்­றுக்­கொ­டுக்க முடி­யு­மாக இருந்­தது. பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக புதிய அணு­கு­மு­றை­களை கையாள முடி­யு­மாக இருந்­தது. சிறந்­த­தொரு தலை­மையை கொடுக்க முடிந்­தது. இதை கொழும்பில் இருந்த கொண்டு கழுத்­துப்­பட்டி அணிந்­து­கொண்டு அல்­லது தேசிய உடை அணிந்து கொண்டு செய்ய முடி­யாது. படை­யி­ன­ருக்கு கட்­ட­ளை­யிடும் போது இரா­ணுவ சீருடை அணிந்­தி­ருந்த ஒருவர் சொல்­லும்­போ­துதான் படை­யினர் அதை கேட்டு செயற்­ப­டு­வார்கள். மாறாக சாதா­ரண நபர் ஒருவர் கூறு­வதை அவ­ரகள் நம்ப மாட்­டர்கள்.

எனவே யுத்த வெற்­றியின் முழுக் கௌர­வமும் யுத்­தத்தை களத்­தி­லி­ருந்து மேற்­கொண்ட படை­யி­ன­ருக்கே உரித்­தாக வேண்டும். அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கல்ல. நாட்டை ஆட்சி செய்த ஜனா­தி­ப­திகள் அனை­வரும் யுத்­தத்தை மேற்­கொள்ள வேண்­டா­மென்றுக் கூற­வில்லை. ஆனால் மாவி­லாறு மூடப்­பட்­ட­போது போராட்­டத்­திற்கு செல்ல முற்­பட்­ட­வேளை அர­சி­யல்­வா­திகள், பௌத்தப் பிக்­குமார் அங்கு சென்று எதைக் கொண்டு தாக்கப் போகின்­றீர்கள் என கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்­தனர். இதனை அமைச்சர் சம்­பிக ரண­வக்க ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்­றின்­போது குறிப்­பிட்­டி­ருந்தார்.

அவ்­வா­றான நிலை­மை­யி­லேயே மாவி­லாறு போராட்­டத்தை மேற்­கொண்டேன். மாவி­லாறு மூடப்­பட்­டது ஜுன் மாதம் 24 ஆம் திகதி. அப்­போது நான் சிங்­கப்பூர் வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்தேன். ஒன்­ற­ரை­மாதம் கொழும்பு வைத்­தி­ய­சா­லை­யி­ருந்தேன். ஏனென்றால் தற்­கொலை குண்­டு­தா­ரியின் தாக்­கு­த­லுக்கு நான் ஆளா­கி­யி­ருந்தேன். மூன்று மாதத்­திற்கும் 100 மில்லி லீற்றர் தண்ணீர் மாத்­தி­ரமே எனக்கு கொடுத்­தார்கள். சாப்­பாடு எதுவும் வழங்­கப்­ப­ட­வில்லை.

மாவி­லாறு மூடப்­பட்டு ஜுன் 25 ஆம் திகதி நான் இலங்­கைக்கு வந்தேன். 26 ஆம் திகதி திரு­கோ­ண­ம­லைக்குச் சென்றேன். காயங்­க­ளுக்குத் தேவை­யான மாத்­தி­ரை­க­ளையும் எடுத்துக் கொண்டே யுத்தக் களத்­திற்கு சென்றோம். அவ்­வாறே இரண்டு வரு­டமும் 9 மாதங்­களும் அர்ப்­ப­ணிப்­புடன் யுத்தம் புரிந்தோம். 24 மணி­நே­ரமும் வரு­டத்தில் 365 நாட் களும் நாங்கள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டதால் தான் என்னை தற்­போ­தைய ஜனா­தி­பதி பீல்ட் மார்சல் என்ற பத­வி­யனை வழங்கி கௌர­வித்தார்.

இது­போன்ற சம­மான அர்ப்­ப­ணிப்பு யார் வழங்­கி­னாலும் இவ்­வா­றான பத­விகள் யாருக்கு வேண்­டு­மா­னாலும் கிடைக்கும். இவ்­வா­றான அர்ப்­ப­ணிப்­பினை மேற்­கொள்­ளாத ஒரு­வ­ருக்கு முப்­ப­டை­களின் தள­பதி இவ்­வா­றான பதவி வழங்­குவார் என்று நான் நினைக்­க­வில்லை. நாங்கள் மேற்­கொண்ட அர்ப்­ப­ணிப்­பு­களை தற்­போ­தைய முப்­ப­டை­களின் தள­பதி உணர்ந்து கொண்­ட­மை­யிட்டு அவரை பாராட்­டு­கின்றேன். அதே­போன்று முன்னாள் முப்­ப­டை­களின் தள­ப­தி­யாக இருந்­த­வ­ருக்கு எம்­மு­டைய அர்­ப­ணிப்பை உணர்ந்து கொள்ள முடி­யாமல் போன­தை­யிட்டு நாங்கள் கவ­லைப்­ப­டு­கின்றோம். அத்­துடன் வெட் கப்­ப­டு­கின்றோம்.

மேலும் இந்த யுத்த வெற்­றிக்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்ட அதா­வது இரா­ணுவ வீரர்­க­ளுக்கு தேவை­யான அனைத்து வச­தி­க­ளையும் உரிய நேரத்­திற்கு வழங்­கிய மிகவும் திற­மை­யான அதி­கா­ரிகள் 35 பேர் 2010 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பின்னர் எந்த விசா­ர­ணை­யு­மன்றி சேவை­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டார்கள். அவர்­க­ளுக்கு கடந்த ஜன­வரி 8 ஆம் திக­தியின் பின் மீண்டும் தொழிலைப் பெற்றுக் கொடுத்தோம். அவர்கள் செய்த தவறு எனன்­வெ­ன­வெனில் நான் கட்­ட­ளை­யிட்ட பொறுப்­பு­வாய்ந்த இடத்தில் பொறுப்­புடன் செயற்­பட்­ட­தாகும். அதனால் அவர்­க­ளிடம் பழி­வாங்­கினர். அவர்­களை வீட்­டுக்கு அனுப்­பினர்.

அப்­ப­டி­யென்றால் யுத்­தத்தை வெற்­றி­கொண்­ட­தாக சொல்லும் நபர் யுத்­தத்­துக்கு கட்­ட­ளை­யிட்டார் என்றால் பொறுப்­பு­வாய்ந்த இடத்தில் இருந்­த­வர்­களை ஏன் பழி­வாங்க வேண்டும். அப்­ப­டி­யென்றால் அவர்கள் சேவை செய்­தி­ருப்­பது கோத்­த­பா­ய­வுக்கும் முப்­ப­டை­களின் தள­ப­திக்­கு­மாகும்.
கோத்­தாவின் இரா­ணுவ வாழ்க்கை"

கோத்­த­பாய ராஜ­பக்ஷ இரா­ணு­வத்தில் நான்கு ரெஜி­மன்ட்­களில் பணி­பு­ரிந்­துள்ளார். சைகை ரெஜி­மன்ட்டில் ஆரம்­பித்து சிங்ஹ ரெஜி­மன்ட்­டுக்கு வந்து பின்னர் ரஜ­ரட்ட றைபள் ரெஜி­மன்­டி­லி­ருந்து இறு­தி­யாக கஜபா ரெஜி­மன்டில் பணி­பு­ரிந்தார். அங்­கி­ருந்து அமெ­ரிக்­காவில் டின்­கரின் ரெஜி­மன்ட்­டுக்கு சென்றார். இரா­ணு­வத்தில் நான்கு ரெஜி­மன்ட்­டு­களில் சேவை செய்த ஒரே நபர் இவர்தான்.

நான் சிங்ஹ ரெஜி­மன்டில் சேவை செய்தேன். அதற்­கா­கவே எனது உயி­ரையும் தியாகம் செய்­யு­ம­ள­விற்கு பணி­பு­ரிந்தேன். ஒரு ரெஜி­மன்­டி­லி­ருந்து வேறு ரெஜி­மன்­டு­க­ளுக்கு இரா­ணு­வத்­தி­னரை அனுப்­பும்­போது சில இரா­ணுவ வீரர்கள் இரா­ணுவ சேவையில் வெறுப்­ப­டைந்து விலகிச் செல்­வார்கள்.

கோத்­த­பாய ராஜ­பக்ஷ ரைபள் ரெஜி­மன்டில் இருக்­கும்­போது கோத்தா மற்றும் மேலும் சில இரா­ணு­வத்­தி­னரின் செயற்­பா­டுகள் கார­ண­மாக யாழ்ப்­பா­ணத்தில் பயங்­க­ர­வா­தி­க­ளிடம் தோல்­வி­யுற்­றதால் மக்­க­ளுக்கு நெருக்­க­டி­களை கொடுத்­தனர். இதனால் அந்த ரெஜி­மன்டை கலைத்­து­விட்­டார்கள். சிங்ஹ ரெஜி­மன்டில் அவர் இணைந்­த­போது அவ­ருக்­கென்று ஒரு­கூட்­டத்தை உரு­வாக்கிக் கொண்டார்.

ஒரு­முறை பதவி உயர்வு பயிற்சி நட­வ­டிக்­கைக்­காக மின்­னே­ரியா காட்­டுக்கு படை­யினர் 50 பேரை அழைத்துக் கொண்டு சென்­றனர். அந்த 50 பேருக்கும் கோத்­த­பா­யவின் தலை­மையின் கீழ் நான்கு சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் இருந்­தனர். அந்த நேரத்தில் ஒரு இரா­ணுவ வீர­ருக்கு நெஞ்­சு­வலி ஏற்­பட்­டது. அந்த வீரரை இழுத்துக்
கொண்டு செல்­லு­மாறு கோத்தா கட்­ட­ளை­யிட்டார். அவரை இழுத்துச் செல்­லும்­போது கோத்தா காலால் உதைத்துக் கொண்டு சென்றார். அந்­நே­ரத்தில் அவர் உயி­ரி­ழந்தார்.

அப்­போது அந்த 50 பேரும் இணைந்து கோத்தா மற்றும் சிரேஷ்ட நான்கு பேரையும் சுற்­றி­வ­ளைத்து தாக்க முற் பட்­டனர். அப்­போது இவர்கள் அங்­கி­ருந்து தப்பிச் சென்று ஒரு­மா­த­ம­ளவில் மறைந்­தி­ருந்­தனர். கோத்­த­பாய பணிக்கு வராமல் நுகே­கொ­டை­யி­லுள்ள வீட்டில் மறைந்­தி­ருந்தார். சிங்ஹ ரெஜிமன்ட் படை­யினர் நுகெ­கொட வீட்­டுக்கு சென்று அங்கும் தாக்­கி­யுள்­ளனர்.

பின்னர் மஹிந்த ராஜ­பக்ஷ பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­த­மை­யினால் அவ­ரு­டைய சிபா­ரிசில் கோத்­த­பாய மாத்­திரம் இரா­ணு­வத்தில் இணைந்து கொண்டு அங்­கி­ருந்து வெ ளியில் சென்­று­விட்டார். ஏனைய நான்கு பேரும் விலக்­கப்­பட்­டார்கள். நான் சொல்­வது பொய்­யாக இருந்தால் கோத்­த­பாய ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்­றினை நடத்தி உண்­மை­யினை தெரி­விக்­கலாம்.

யுத்­த­க­ளத்தில்

மண்­டைத்­தீ­வினை கைப்­பற்­று­வ­தற்கு செல்­லும்­போது சரத்­பொன்­சேகா தனக்­குக்கீழ் செயற்­பட்­ட­தாக கோத்­த­பாய ஊட­க­மொன்­றிற்கு தெரி­வித்­தி­ருந்தார். ஆனால் சிங்ஹ ரெஜிமன்ட் படை­ய­ணியை கோத்­தா­வுக்கு உதவி செய்­யு­மாறு பென்சில் கோப்­பே­க­டுவ தெரி­வித்­தி­ருந்தார். அந்த வகையில் நான் அவ­ருக்கு அந்தக் களத்தில் உத­வி­பு­ரிந்தேன். மாலை 5.00 மணி­ய­ள­வி­லேயே இந்த கட்­டளை எமக்கு கிடைக்கப் பெற்­றது.

5.30 மணி­ய­ளவில் கோத்­த­பாய மண்­டைத்­தீவு கைப்­பற்­று­வ­தற்கு தனது படை­ய­ணி­யுடன் மண்­டைத்­தீவின் கீழ் பகு­திக்கு வந்­தி­ருந்தார். அந்தப் பகுதி களப்பு பகு­தி­யாக இருந்­தது. படை­ய­ணியில் கோத்­தாவும் சவேந்­திர சில்­வாவும், சுமேந்­திர பெரே­ராவும் கரை­யி­லி­ருந்­தார்கள். ஏனை­ய­வர்கள் தண்­ணீரில் இறங்­கி­னார்கள். அந்தப் பகு­தி­யி­லி­ருந்து தெற்கு திசையில் வயல் நிலம காணப்­பட்­டது. படை­யினர் அவ்­வ­ழி­யினால் சென்­றி­ருந்தால் அவர்கள் திரும்பி வந்­தி­ருக்க மாட்­டார்கள்.

இதனை நாங்கள் உணர்ந்து கொண்டு மேல்­தி­சை­யினால் சென்று தாக்­குதல் நடத்­தினோம். அவ்­வாறே தாக்­குதல் நடத்திக் கொண்டு முன்­ன­நோக்கி சென்றோம். இவ்­வாறு மண்­டைத்­தீவை முற்­றாக கைப்­பற்­றினோம். ஆனால் கோத்­த­பாய தொடர்ந்து களப்­புக்­குள்­ளேயே இருந்தார். இந்­த­போ­ராட்த்தில் 60 பயங்­ர­வா­திகள் கொல்­லப்­பட்­டனர்.

மறுநாள் அமைச்சர் ரஞ்சன் விஜே­ரத்ண இதனை பார்க்க வந்தார். உயி­ரி­ழந்த சட­லங்கள் வரி­சை­யாக வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அந்தப் பகு­தியில் கஜபா என்று பெரிய எழுத்தில் பதா­கை­யொன்று வைக்­கப்­பட்டு கோத்தா உள்­ளிட்ட அந்தப் படை­ய­ணி­யினர் ஊட­கங்­க­ளுக்கு காட்சிக் கொடுத்துக் கொண்­டி­ருந்­தார்கள். ஆனால் மண்­டைத்­தீ­வினை கைப்­பற்­றி­யது சிங்ஹ ரெஜிமன்ட் என்­பது யாருக்கும் தெரிந்­தி­ருக்­க­வில்லை. அதன்பின் கோத்­த­பாய இரா­ணு­வத்­தி­லி­ருந்து சென்­று­விட்டார். அதன்பின் அவ­ருடன் எந்த தொடர்பும் இருக்­க­வில்லை. மீண்டும் அவர் பாது­காப்பு செய­லா­ள­ரா­கவே இங்கு வந்தார். அப்­போது அவர் மாறி­யி­ருப்பார் என நான் நினைத்தேன். ஆனால் அவ­ரிடம் எந்த மாற்­றமும் இருக்­க­வில்லை.

இரா­ணு­வத்தில் இருக்­கும்­போது எவ்­வாறு மற்­ற­வர்கள் செய்யும் வேலைக்கு தனது பெயரை உள்­வாங்கிக் கொண்­டாரே அதே செய­லையே செய­லா­ள­ராக வந்­த­போதும் மேற்­கொண்டார்.
யுத்த் குற்றம்

இரா­ணு­வத்­தினர் ஒட்­டு­மொத்­த­மாக யுத்­தக்­குற்­றச்­செ­யலை மேற்­கொள்­ள­வில்லை. இரா­ணு­வத்தில் இருக்கும் ஒரு­சிலர் எமது கட்­ட­ளையை மீறி செயற்­பட்­டி­ருந்தால் அவர்கள் தொடர்பில் ஆதாரம் இருந்தால் விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும்.

40000 பேர் பலியா?

புதுக்­கு­டி­யி­ருப்பில் 40 ஆயிரம் சிவி­லி­யன்கள் கொல்­லப்­பட்­ட­தாக கூறும் செய்தி முற்­றிலும் தவ­றா­ன­தாகும். யுத்தம் முடி­வ­டை­வ­தற்குள் 2 மாதங்­க­ளுக்கு முன்னர் செஞ்­சி­லுவை சங்கம் நாளாந்தம் அங்கு காயப்­ப­டு­ப­வர்­களை கொண்டு வந்து கடற்­ப­டை­யிடம் ஒப்­ப­டைப்­ப­பார்கள். இந்த இரண்டு மாதத்­திற்குள் 350 பேர­ள­வி­லேயே சிவி­லி­யன்கள் காய­ம­டைந்த நிலையில் கொண்டு வந்­தனர். அவர்கள் எல்­லோரும் எங்­க­ளது தாக்­கு­த­லில்தான் காய­ம­டைந்­தார்கள் என சொல்ல முடி­யாது.

அத்­துடன் அவர்­களில் புலி உறுப்­பி­னர்­களும் இருந்­துள்­ளனர். அவர்­களும் சிகிச்­சைக்­காக இந்தப் பகு­திக்கு வந்­தி­ருந்­தனர். 40 ஆயிரம் பேர் அங்கு அடக்­கப்­பட்­டி­ருந்தால் சாதா­ரண ஒரு மண்­வெட்­டியால் தோண்­டி­னாலும் எலும்­புகள் தென்­படும்.

ஐக்­கிய நாடுகள் சபையின் உறுப்­பி­னர்கள் கொழும்­பி­லி­ருக்கும் எனது அலு­வ­ல­கத்­தி­லி­ருந்து வீடியோ கேம­ரா­வி­னூ­டாக புது­மாத்­தளன் பகு­தியில் உயி­ரி­ழந்த புலி உறுப்­பி­னர்­களை அவர்­க­ளு­டைய கொடி­யினால் போர்த்தி அடக்கம் செய்­வதை பார்த்­தார்கள். அந்தப் பகு­தியில் எங்­க­ளு­டைய எண்­ணிக்­கையின் பிர­காரம் 900 பேர­ளவில் ஒரே வரி­சையில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டனர்.

புதுக்­கு­டி­யி­ருப்பு வைத்­தி­ய­சா­லைக்கு மோட்டார் தாக்­குதல் மேற்­கொண்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. ஆம். ஒரு குண்டு அங்கு வெடித்தது. அந்தக் குண்டு அங்கு விழுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் செஞ்சிலுவை சங்கத்தின் அங்கிருந்த பொறுப்பாளியை எனது காரியாலயத்திற்கு அழைத்து நாங்கள் புதுக்குடியிருப்பை நெருங்கியிருக்கின்றோம். ஆயினும் அந்தப் பகுதியிலிருந்து பொதுமக்களை அப்புறப்படுத்துமாறு கூறியிருந்தோம்.

என்றாலும் தவறுகள் காரணமாகவே அந்த மோட்டார் தாக்குதல் அங்கு விழுந்தது. சட்டத்தின் பிரகாரம் நாங்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியிருந்தோம். என்றாலும் அந்தப் பகுதியிலிருந்து 2 இலட்சத்து 15 ஆயிரம் சிவிலியன்களைப் பாதுகாத்துக் கொண்டு வந்தோம். அதேபோன்று 23 ஆயிரம் பயங்கரவாதிகளை கொலை செய்தோம். 12 ஆயிரம் பேரை உயிருடன் மீட்டோம்.

பொட்டு அம்மான், ரஜுவ் காந்தி கொலையுடன் சம்பந்தப்பட்டவர். இந்தியாவுக்கு அவர் தேவைப்படுகிறார். அவர் இந்தியாவில் மறைந்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. பொட்டு அம்மானும், பிரபாகரனும் நந்திக்கடல் தெற்கினூடாக தப்பிச் செல்வதற்கு 17 ஆம்திகதி இரவு முயற்சித்தனர். சார்ள்ஸ் அன்டனி போன்றவர்கள் 17 ஆம் திகதி இரவு நந்திக்கடல் வடகிழக்குப் பகுயில் கொல்லப்பட்டார்கள்.

பிரபாகரனும் பொட்டு அம்மான் மற்றும் சிலர் நந்திக்கடல் தென் பகுதிக்கு சென்றதாக கே.பி. கூறியிருக்கின்றார். அத்துடன் பிரபாகரன் திரும்பி வந்ததாகவும் பொட்டு அம்மான் வரவில்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். அந்த தகவல் மட்டுமே எங்களுக்கு தெரியும். பொட்டு அம்மான் அந்த இடத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று நான் நினைக்கின்றேன்.

பிரபாகரனை கொழும்புக்கு அழைத்து வந்திருந்தால் இப் போது கே.பி.யை அரச அரண்மனையில் வைத்திருந்ததைப் போன்று பாதுகாப்பாக வைத்திருந்திருப்பார்கள். அத்துடன் அவருக்கு வடகிழக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. அவர் கொழும்புக்கு அழைக்கப்பட்டிருந்தால் கொல்லப்பட்டிருக்கமாட்டார் என்றார்.

(எம்.ஆர்.எம்.வஸீம்)
Virakesari
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல