புதன், 20 ஏப்ரல், 2016

நமது கல்லீரலை செயலிழக்கச் செய்யும் சில மோசமான காரியங்கள்!

உடலிலேலே மிகப்பெரிய உறுப்பு என்றால் அது கல்லீரல் தான். உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளை கல்லீரல் செய்கிறது. அதில் உடலின் மெட்டபாலிசம், செரிமானம், டாக்ஸின்களை வெளியேற்றுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. அத்தகைய கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது.



தற்போது கல்லீரல் நோய்கள் மிகவும் வேகமாக ஏற்படுகிறது. இதற்கு நமது பழக்கவழக்கங்கள் தான் முக்கிய காரணம். கல்லீரல் நோய்கள் தீவிரமானால் அதனால் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு உயிரையே இழக்க வேண்டிவரும்.

இன்று உலக கல்லீரல் தினமாக அனுசரிக்கப்பட்டுள்ளது. எனவே கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்கள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றைத் தவிர்த்து கல்லீரலை ஆரோக்கியமாக பராமரித்து வரலாம்.

மது அருந்துவது
என்ன தான் அளவாக நாள் கணக்கில் மது அருந்தினாலும், மதுவினால் கல்லீரல் நோய்களான கல்லீரல் அழற்சி/வீக்கம், கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி போன்றவை ஏற்படக்கூடும். கல்லீரல் முக்கிய பணிகளுள் ஒன்று உணவுகளை உடைத்து, ஆற்றலாக மாற்றுவது. ஆனால் மதுவை அருந்தும் போது கல்லீரல் அதை உடைக்க முயன்று பாதிப்பிற்குள்ளாகி, அதனால் கல்லீரல் நோய்களை பெற நேரிடுகிறது. அதனால் தான் மது அருந்துவோர் கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் முதலில் கஷ்டப்படுகிறார்கள்.

உடல் பருமன்
மற்றொரு முக்கியமான கல்லீரல் செயலிழப்பிற்கு காரணம் உடல் பருமன். உடல் பருமனால் உடலின் உள்ளுறுப்புக்களில் கொழுப்புக்கள் அதிகம் தேக்கமடையும். சில ஆய்வுகளில் உடல் பருமனுள்ளவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதோடு, கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

மருந்துகளை அதிகம் எடுப்பது
சிலர் எந்த ஒரு உடல் பிரச்சனைக்கும் உடனடியாக மாத்திரைகளை எடுப்பார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் மாத்திரைகளை அதிகம் எடுத்தால், முதலில் கல்லீரல் பாதிக்கப்பட்டு, அதனால் கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

நீரிழிவு
கல்லீரல் பாதிப்பிற்கு நீரிழிவும் ஓர் முக்கிய காரணமாக இருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அதற்கு இரத்தத்தில் உள்ள அதிகப்படியான இன்சுலின், அடிவயிற்றில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரித்து உடல் பருமனுக்கு வழிவகுப்பது தான் காரணம். இது அப்படியே முற்றினால் கல்லீரல் கொழுப்பு நோய்கள் வருவதோடு, கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.

ஊட்டச்சத்து மாத்திரைகள்
ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக எடுத்தால், கல்லீரல் நொதிகளின் உற்பத்தி அதிகரிக்கும். இப்படி அதிகமாக நொதிகள் உற்பத்தி செய்யப்பட்டால், அதனால் அழற்சி அல்லது வீக்கம் ஏற்டடும். எனவே அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக, காய், கனிகளை அதிகம் உட்கொண்டு சத்துக்களைப் பெறுங்கள்.

புகைப்பிடிப்பது
புகைப்பிடிப்பதால் கல்லீரல் நேரடியாக பாதிக்கப்படாவிட்டாலும், கல்லீரலின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்பட்டு, அது பாதிப்பிற்குள்ளாகும். இதற்கு அதில் உள்ள மோசமான உட்பொருட்கள் தான் காரணம். அது தான் கல்லீரல் செல்களை பாதிக்கிறது.

அதிகப்படியான உப்பு
உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பை அதிகம் சேர்த்தால், கல்லீரலில் நீர் தேக்கமடைந்து, வீக்கமடையக்கூடும். இதனால் கல்லீரல் அழற்சி ஏற்பட்டு, உறுப்பு பாதிக்கப்படும். எனவே உணவில் எப்போதும் அளவாக உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள்.

Thatstamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல