வியாழன், 28 ஏப்ரல், 2016

முதலாளியின் ஆரஞ்சு ஜூஸில் சிறுநீரை கலந்த பணிப்பெண்: தீயாக பரவிய வீடியோ

குவைத்தில் பணிப்பெண் ஒருவர் தனது முதலாளிக்காக தயார் செய்யப்பட்ட ஆரஞ்சு ஜூஸில் சிறுநீரை கலந்தது சமையல் அறையில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. குவைத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டில் இரண்டு பெண்கள் பணியாற்றி வருகிறார்கள்.


அதில் ஒரு பணிப்பெண் மீது முதலாளியின் குடும்பத்தாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் உணவில் எதையோ கலப்பதாக அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

ஒரு நாள் ஜூஸ் குடிக்கையில் அது ஏதோ போன்று இருந்து குமட்டிக் கொண்டு வந்ததால் தான் அவர்களுக்கு பணிப்பெண் மீது சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து சமையல் அறையில் ரகசியமாக கேமரா வைக்கப்பட்டது. இது தெரியாத அந்த பெண் மற்றொரு பணிப்பெண் முதலாளிக்காக ஆரஞ்சு ஜூஸ் தயார் செய்து வைத்துவிட்டு வெளியே செல்ல அந்த நேரத்தில் இவர் ஒரு டம்ப்ளரில் சிறுநீர் கழித்து அதை ஜூஸில் ஊற்றிவிட்டார்.

இந்த வீடியோவை பார்த்த முதலாளி அவரை பணிநீக்கம் செய்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. பணிப்பெண்களிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு அந்த முதலாளி பிறரை கேட்டுக் கொண்டுள்ளார்.



Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல