ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

ஈபேயில் (Ebay) விற்பனைக்கு விடப்பட்ட நவாஸ் ஷெரீப்

ஆரம்ப விலை 62 இலட்சம் ரூபா

 பிரபல வணிக இணையத்தளத்தில் ( eBay) பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விற்பனைக்கு விடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



நவாஸ் ஷெரீப் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக லண்டனில் தங்கியுள்ள நிலையில், அவரை விற்பனைக்கு விடுவதாக அந்த இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டிருந்ததுடன் அவரது ஆரம்ப விற்பனை விலை 62 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

விற்பனைப் பொருள் குறித்த விளக்கத்தில் நவாஸ் ஷெரீப் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.

இந்தப் பொருள் தற்போது பயன்பாட்டில் இல்லை. பொருள் தயாரிப்பின்போது ஏற்பட்ட சில குறைபாடுகளால் இது எப்போதுமே வேலை செய்தது இல்லை.

இந்த (நவாஸ் ஷெரீப்) பொருளை வாங்குபவர்களுக்கு ஷாபாஸ் ஷெரீப் (நவாஸின் சகோதரர், பஞ்சாப் மாகாண முதல்வர்) இலவசமாக வழங்கப்படுவார்.

இந்த ஷாபாஸ் பொருள் நாடகம், சொற்பொழிவு ஆற்றுவதில் சிறந்தது. ஆனால் அந்தப் பொருளால் வேறு எந்த உபயோகமும் இல்லை. இரண்டு பொருட்களின் பிறப்பிடமும் பாகிஸ்தான். ஆனால் அவற்றை பிரிட்டன், அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில்தான் அதிகமாகக் காண முடியும். தற்போது நவாஸ் பொருள் லண்டனில் உள்ளது

இந்த விற்பனை விளம்பரம் குறித்த இணையத்தளத்தில் இருந்து பின்னர் நீக்கப்பட்டுள்ளது
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல