சனி, 28 மே, 2016

இரண்டு லாரிகளுக்கு நடுவில் சிக்கி அப்பளம் போல நொறுங்கிய கார்!! அதிர்ச்சி வீடியோ!!

தெலுங்கானாவின் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு லாரிக்கு நடுவில் கார் சிக்கி நசுங்கி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள், ஒரு பெண் உட்பட ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

நிஜாமாபாத்- ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்து விபத்தின் போது கார் ஓட்டுனர், தான் முன் சென்ற லாரியை முந்திச் சென்று, பைபாஸ் சாலை வளைவில் நுழைய முயன்றுள்ளார். எனினும் காரின் பின் பகுதி லாரியில் இடித்து இழுத்து செல்லபட்டு உள்ளது

அப்போது எதிர்சாலையில் வந்த மற்றொரு லாரி காரின் மீது மோதியுள்ளது, இதில் கார் இரண்டு லாரிக்கு இடையில் சிக்கி நசுங்கியுள்ளது. காரில் பயணித்த ஐந்து பேரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

போலீசா ஜேசிபி உதவியுடன் உடல்களை மீட்டுள்ளனர். மேலும், குறித்த கொடூர விபத்தின் காட்சிகள் சாலையில் நிறுவப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல