சனி, 7 மே, 2016

கோண்டாவிலில் உண்மையில் நடந்தது என்ன…?

கோண்டாவில்‬ ‪‎புகையிரத_விபத்தில்‬ உயிரிழந்த இருவரும் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாகவே அங்கிருந்தவர்கள் கூறினார்கள்.




அப்படி படுத்து இருந்தாலும் ‪ரெயின்‬ வரும் போது தண்டவாள அதிர்வுக்கும் , ரெயின் சத்தம் மற்றும் கோர்ன் சத்தம் ஆகியவற்றுக்கும் அவர்கள் ஏன் எழும்பவில்லை ?

அருகிலேயே புகையிரத நிலையம் இருக்ககூடிய நிலையில் எதற்காக அவர்கள் தண்டவாளத்தில் படுக்க வேண்டும்.

அவ்வாறு தண்டவாளத்தில் தான் படுக்க வேண்டும் என ஆசைப்பட்டாலும் அருகில் ரெயின் வராத தண்டவாளம் இருக்க கூடிய நிலையில் எதற்காக ரெயின் வாற தண்டவாளத்தில் படுக்க வேண்டும். ?

தண்டவாளம் என்ன சொகுசு பஞ்சு மெத்தை மீதா இருக்கின்றது. நிம்மதியாக படுத்து உறங்க ? அந்த கல்லுக்குள் படுத்து எப்படி நிம்மதியாக ஆழ்ந்த உறக்கம் உறங்க முடியும். ?

மற்றது இருவரும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல. ஒருவர் கோப்பாய் மற்றவர் திருநெல்வேலி. இவர்கள் இருவரும் எதற்கு கோண்டாவிலில் வந்து தண்டவாளத்தில் படுக்க வேண்டும் ?

அவர்களின் சடலம் இருந்த இடத்திற்கு அருகில் மது அருந்தியமைக்கான மற்றும் புகைத்தமைக்கான சான்றுகள் எவையும் காணப்படவில்லை.

தற்கொலையாக இருந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து சாகிற அளவுக்கு என்ன பிரச்சனை ?

ஒரு வேளை எவனாவது கொலை செய்துவிட்டு கொண்டு வந்து போட்டு இருப்பாங்களோ ? என எனக்கு டவூட்டு என ஒரு முகநூல் பதிவு இவ் இரு இளைஞர்களின் சாவை அலசி, சிந்திக்க வைத்துள்ளது.‬

பார்ப்போம் ‪‎கோப்பாய்‬ ‪பொலிசார்‬ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். விசாரணையில் என்ன தெரிய வருகுது என்று …….!

சிந்திக்க வைக்கும் அலசல் தான்….!

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல