வியாழன், 26 மே, 2016

குழந்தைவரம் தருவதாக பெண்களை மயக்கி, ஆபாச வீடியோ எடுத்த போலி பாபா கைது

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி ஆசிரமத்திற்கு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.உத்தரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஹராய் கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வருபவர் ராம் சங்கர் திவாரி.



இவர் தனது பெயரை பரமானந்த பாபா என்று கூறிக்கொண்டு ஆசிரமம் நடத்தி வந்தார். பெண்கள் மீது மோகம் கொண்ட வயது முதிர்ந்த இந்த சாமியார், அதற்காக தேர்ந்தெடுத்தது குழந்தையில்லாத பெண்களையாகும்.

வசீகர பேச்சு
குழந்தையின்றி மனமுடைந்து வரும் பெண்களை வசீகரிக்கும் வகையில் பேசி, குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பரிகார பூஜை செய்ய ஒப்புக்கொள்ள வைப்பாராம், திவாரி.

சம்மதிக்க வைத்து இதன்பிறகு, தன்னோடு பாலியல் உறவு வைத்துக்கொண்டால் குழந்தை கிடைக்கும் என்று அந்த பெண்களை நம்ப வைத்து, அவர்கள் சம்மதத்தோடு உறவு வைத்துக்கொள்வாராம்.

சிசிடிவி கேமரா
வீட்டு மேற்கூரையில் ரகசிய கேமராவை பொருத்திக்கொள்ளும், திவாரி, விதவிதமான பெண்களுடன், தான் உடலுறவு கொள்ளும் காட்சிகளை பிறகு வீடியோவாக பார்த்து ரசிப்பது வழக்கமாம்.

மூச் விடக்கூடாது
உடலுறவு கொண்ட பெண்களிடம் இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறி சத்தியம் வாங்கிக்கொண்டே வெளியே அனுப்பி வந்துள்ளார் திவாரி. ஆனால் சில பெண்கள் பின்னர் இதுகுறித்து, வெளியே கூறினர்.

வெளியான வீடியோ
ஆனால், அந்த புகார்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் திவாரியின் பித்தலாட்டம் வெளியுலகுக்கு தெரியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், சில பெண்களுடன் இவர் ஆபாசமான நிலையில் உள்ள வீடியோ காட்சிகள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

கைது
இதுதொடர்பான ஆதாரத்துடன் போலீசாரிடம் உள்ளூரை சேர்ந்த சிலர் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அந்த போலி சாமியாரை இன்று கைது செய்துள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பலான சிடிகள் பறிமுதல்
ஆசிரமத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஆபாச வீடியோக்களும், ஆபாச புத்தகங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில், அவர் 100க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளது தெரியவந்துள்ளது.

படம் பார்த்து
பலாத்காரம் தான், Basic Instinct என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் பெரிய விசிறி என்று போலீஸ் விசாரணையில் திவாரி தெரிவித்துள்ளார். அந்த படத்தின் பாதிப்பில் பல பலாத்காரங்களை செய்ததாகவும் கூறியுள்ளார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல