வியாழன், 19 மே, 2016

கார் மோதி தூக்கி வீசப்பட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இளம்பெண்கள்

அகமதாபாத் அருகே சாலையைக் கடக்க முயன்ற 2 பெண்கள் மீது கார் மோதி தூக்கி வீசியபோதும், அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.



குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் 2 இளம்பெண்கள் வந்து கொண்டிருந்தனர். குறுக்கு சாலையில் இருந்து திடீரென பிரதான சாலையில் ஏறிய அவர்கள், அந்த சாலையை கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கார் அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.

இதில், அந்த 2 பெண்களும் தூக்கி வீசப்பட்டனர். கார் இடித்த வேகத்தில் அவர்களின் இருசக்கர வாகனம் சுமார் 20 அடி தூரத்தில் போய் விழுந்தது. மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது.

சாலையில் விழுந்த பெண்கள் இறந்துவிட்டதாக நினைத்து அப்பகுதி மக்கள் பதற்றத்துடன் அருகில் சென்றனர். ஆனால், அந்த பெண்களில் ஒருவர் தானாகவே எழுந்து நின்றார்.

மற்றொரு பெண்ணுக்கும் பெரிய அளவில் அடிபடவில்லை. உடனே அவர்களை பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நெஞ்சை பதற வைக்கும் இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல