திங்கள், 8 ஆகஸ்ட், 2016

எக்ஸெல் டிப்ஸ்... ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க: ஷார்ட்கட் வழிகள்:

ஷார்ட்கட் வழிகள்:

Ctrl+-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல்களின் வடிவமைப்பை மாற்றலாம்

Ctrl+-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl- +Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம்.

Ctrl-+Shift+-”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.

Ctrl-+': இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும்.

Ctrl+-R: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.

Ctrl+-D: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து கீழே உள்ள செல்களிள் தேர்ந்தெடுக்கப்படும் செல்களில் காப்பி செய்து பதியும்.

Ctrl-+': செல்லின் மதிப்பு மற்றும் அதன் பார்முலாக்களை மாற்றி மாற்றி காட்ட இந்த சுருக்கு வழியைப் பயன்படுத்தலாம்.

Ctrl-+$: கரன்சி மதிப்பை இரண்டு தசம ஸ்தானங்களுக்கு தரும் வகையில் பார்மட் செய்திட இந்த சுருக்கு வழி பயன்படுகிறது.

காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட

கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.

Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.

ஷிப்ட் + ஆரோ கீ (Shft+Arrow key)) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத்தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இருக்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப்படுகையில் படுக்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+Home) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்படும்.

கண்ட்ரோல்+ஷிப்ட் + எண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செலக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.

என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப்பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.

ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமில், ஏதேனும் டூல் சார்ந்த ஐகான் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய மஞ்சள் நிறக் கட்டத்தில், அந்த ஐகான் எதற்காக, என்ன செயல்பாட்டினைத் தரும் என்ற உதவிக் குறிப்பு கிடைக்கும். இது நமக்குப் பல வழிகளில் உதவிடுவதாய் இருக்கும். நாம் நன்கு தெரிந்து பயன்படுத்தும் ஐகான் மீதாகச் செல்கையிலும் இதே குறிப்பு கிடைக்கையில், நமக்கு விருப்பமில்லாததாக இருக்கும். இந்த ஸ்கிரீன் டிப்ஸை தோன்றாமல் மறைத்திட, எக்ஸெல் புரோகிராமில் என்ன செய்திட வேண்டும் என இங்கு பார்க்கலாம்.

1. எக்ஸெல் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். எக்ஸெல் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின்னர் கிடைப்பவற்றில், எக்ஸெல் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 தொகுப்பில், ரிப்பனில் பைல் டேப் தேர்ந்தெடுத்து அதில் Options என்பதனைக் கிளிக் செய்திடுக.

2. டயலாக் பாக்ஸில், இடது பக்கம், Popular (Excel 2007) அல்லது General (Excel 2010) தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்திடுக.

3. இங்கு கிடைக்கும் ScreenTip Style கீழ்விரி பட்டியலைத் திறந்திடுக. இங்கு Don't Show ScreenTips என்பதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கொடுத்து வெளியேறவும். இனி ஸ்கிரீன் டிப்ஸ் தோன்றாது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல