சனி, 17 செப்டம்பர், 2016

சுடுகாடாகி காட்சியளிக்கும் கிளிநொச்சி சந்தை!!: கண்ணீர் வடிக்கும் வர்த்தகர்கள் - (படங்கள்)

கிளிநொச்சி, பொது சந்தைத் தொகுதியில் நேற்றிரவு (16) திடீரென பரவிய தீயினால் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் எரிந்துபோயின.

தீயினால் 90 கடைகள் முற்றாகவும் சுமார் 20 க்கும் அதிகமான கடைகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



கடையொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கின் காரணமாக தீ பரவியுள்ளமை பூர்வாங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

தீயினால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் கூறினர்.

இராணுவ தீயணைப்பு வாகனம், பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் நள்ளிரவு அளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தீயினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களைத் திரட்டும் பணிகள் கரைச்சி பிரதேச செயலாளர் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி பொதுச் சந்தை தொகுதியில் சுமார் 120 கடைகள் இருந்ததுடன், தீயினால் பழங்கள் மற்றும் ஆடை, அலங்காரப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் பகுதியிலுள்ள 100 கடைகளே பெரிதும் சேதமடைந்துள்ளன.

யுத்தத்தினால் உடைமைகளை இழந்து மீண்டெழுந்த கிளிநொச்சி வர்த்தகர்கள் இன்று செய்வதறியாத நிலையிலுள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்துவதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் தீயணைப்புப் பிரிவு இன்மையால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்திற்கும் – கிளிநொச்சிக்குமான தூரம் சுமார் 60 கிலோமீற்றராகும்.

இந்தத் தீ சம்பவம் 9 மணிக்கு ஏற்பட்டபோதிலும், 11.45 மணியளவிலேயே தீயணைப்புப் பிரிவு சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.










 ilakkiya

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல