சனி, 24 செப்டம்பர், 2016

பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் அடித்தேன். தாய் நீதிமன்றில் விளக்கம்!

நீர்வேலி பகுதியில் சிறுமியை தாக்கிய தாயாரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் க. அரியநாயகம் உத்தரவு இட்டுள்ளார்.



நீர்வேலி பகுதியை சேர்ந்த தாய் ஒருவர் சிறுமியை தாக்கியமை தொடர்பிலான வீடியோ காட்சி நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப் பட்டு இருந்தன.

அதனைத் தொடர்ந்து கோப்பாய் பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரி கோப்பாய் பொலிசாரிடம் முறைப்பாடு செய்ததை அடுத்து தாயார் நேற்று இரவு கோப்பாய் பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் க.அரியநாயகம் முன்னிலையில் முற்படுத்திய போது , தாக்குதல் மேற்கொண்ட பெண்ணை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட தாயின் மூன்று பிள்ளைகளையும் சிறுவர் இல்லத்தில் சேர்க்குமாறும் பதில் நீதிவான் உத்தரவு இட்டார்.

அதேவேளை தாக்குதல் மேற்கொண்ட பெண்ணிடம் எதற்காக சிறுமியை தாக்கினீா் என பதில் நீதிவான் வினாவிய போது , நேற்றைய தினம் பாடசாலைக்கு செல்ல மாட்டேன் என சிறுமி கூறியதால் தான் அடித்தேன் என கூறினார். அத்துடன் தான் இதற்கு முன்னர் பிள்ளையை கை நீட்டி அடித்தது இல்லை எனவும் தாய் கூறினார்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல