வியாழன், 13 அக்டோபர், 2016

கேலக்ஸி நோட் 7 கருவிகளைப் பத்திரமாக திரும்பப் பெற சாம்சங் வித்தியாச முயற்சி!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 7 கருவிகளை திரும்பப் பெற ஃபயர்ப்ரூஃப் எனப்படும் தீப்புகாத பெட்டிகள் மற்றும் கையில் தீக்காயம் ஏற்படாதளவு பாதுகாப்பான கையுறை போன்றவற்றை அனுப்பி வருகின்றது.


உலகம் முழுக்க அந்நிறுவனம் விற்பனை செய்த கேலக்ஸி நோட் 7 கருவிகள் வெடித்துச் சிதறிய சம்பவத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 கருவியின் தயாரிப்பு பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அந்நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட சரி செய்யப்பட்ட கேலக்ஸி நோட் 7 கருவிகளின் பேட்டரிகளும் வெடித்ததால் அந்நிறுவனம் கடும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது.

கேலக்ஸி நோட் 7 கருவிகளை இணையதளம் மூலம் வாங்கிய பனர்களுக்கு ஃபயர்ப்ரூஃப் ரிட்டன் கிட் அனுப்பி வருகின்றோம் என சாம்சங் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் சார்பில் அனுப்பப்பட்ட ஃபயர்ப்ரூஃப் ரிட்டன் கிட் குறித்த வீடியோவினை கீழே பாருங்கள்..



Thatstamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல