வியாழன், 24 நவம்பர், 2016

ஒரே ஒரு காலி பாட்டிலை வைத்து ரூ.32 லட்சம் சம்பாதித்த பலே கில்லாடி

காலி பாட்டிலொன்றை வைத்து ரூ.32 லட்சத்தை ($47,000) ஒருவர் சம்பாதித்த சம்பவம் ஜெர்மனி நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டில் குளிர்பானத்தை குடித்து விட்டு காலி பாட்டிலை மறுசுழற்சிக்கான தானியங்கி இயந்திரத்தில் செலுத்தினால் அதற்கான பணமும் ரசீதும் கிடைக்கும்.

அதே நாட்டை சேர்ந்த 37 வயது குளிர்பான வியாபாரி ஒருவர் இந்த தொழில் நுட்ப இயந்திரத்தை சற்று மாற்றி அமைத்தார். அதன்படி மாற்றி அமைக்கப்பட்ட தானியங்கி இயந்திரத்தில் காலி பாட்டிலை செலுத்தினால் பாட்டிலுக்கான பணமும் ரசீதும் கிடைத்தது. ஆனால் காலி பாட்டில் இயந்திரத்தின் இன்னொரு வழியாக வந்து விழுந்தது.

அந்த ஒரே ஒரு காலி பாட்டிலை சுமார் 1,77,451 முறை அந்த தானியங்கி இயந்திரத்தில் செலுத்தி 32,35,831 ரூபாய் பணத்தை குளிர்பான வியாபாரி பெற்றிருக்கிறார்.

தானியங்கி மறுசுழற்சி செய்யும் எந்திரம் மிகவும் தாமதமாகத் தான் இந்த மோசடியைக் கண்டறிந்தது. குளிர்பான பாட்டில்கள் விற்பனையை விட மிக மிக அதிகமாக காலி பாட்டில்கள் செலுத்தப்பட்டிருப்பதைக் தெரிந்து கொண்ட நிறுவனம் அந்த வியாபாரி மீது வழக்குப் போட, தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த கில்லாடி வியாபாரி.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல