சனி, 26 நவம்பர், 2016

"சோரியாசிஸ்" விடை தெரியா நோய்..!

சோரியாசிஸ் என்ற வார்த்தையை அடிக்கடி விளம்பரத்தில் கேள்விபட்டிருக்கலாம். இந்த சோரியாசிஸ் வர என்னகாரணம் என்பதை  இன்று வரை ஆராய்ச்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஒன்றும் பிடிபடவில்லை. சோரியாசிஸை தமிழில் ‘காளான் சான்படை என்று அழைக்கிறார்கள்.

சோரியாசிஸில் நிறைய வகைகள் உண்டு. இருந்தாலும் பொதுவாக சொல்வது இது வந்தால் தோல் சிவந்து தடித்துப் போவதுடன், தாக்கிய இடத்தில் வெள்ளித் தகடுகள் போல செதில் செதிலாக உதிர்ந்து வரும். இதை பெயர்த்து எடுத்தால் ஒரு சின்னத்துளியாக ரத்தம் எட்டிப் பார்க்கும். உடலில் எங்கு வேண்டுமானாலும் இது வரலாம். பிறப்புறுப்புகளில் வந்துவிட்டால் உடலுறவு கொள்வது சிரமம். மீறி ஈடுபட்டால் துணைக்கு மிகுந்த வேதனையை தரும்.

இதற்கு வைத்தியம் பார்த்தாலும் சரி, பார்க்காவிட்டாலும் சரி, ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருந்துவிட்டு தானாக மறைந்து குணமாகி விடும். குணமான பின் சோரியாசிஸ் வந்து போன சுவடு கூட தெரியாது.
நோய் வந்து போன சுவடே இல்லை

ஆனாலும் குணமாகிவிட்டது என்று சந்தோஷப் பட்டுக்கொள்ள முடியாது. இது குணமாவதே மறுபடியும் வருவதற்குத்தான். வெயில் காலத்தில் இது ஒருவரை தாக்கினால் அடுத்த வெயில் காலத்துக்கு மீண்டும் வந்துவிடும். குளிர்காலம் என்றால் மீண்டும் அடுத்த குளிரில் தவறாமல் ஆஜராகிவிடும். இதை கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானிகள் எவ்வளவோ முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதுவரை பலன் கிடைக்கவில்லை.

எப்படி வருகிறது என்பதற்கு விடை கிடைத்தால்தானே குணப்படுத்தும் வழியும் கிடைக்கும். வருவதற்கு காரணம் பூச்சிகளா? வைரஸ்ஸா? பாக்டீரியாவா? சாப்பிடும் உணவா? பரம்பரை நோயா? எதுவும் பிடிபடவில்லை, ஆராய்ச்சியாளர்களுக்கு.
சோரியாசிஸ்

சோரியாசிஸால் அரிப்பு, எரிச்சல் போன்ற தொந்தரவுகள் ஏற்படுவதில்லை. இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற உள் உறுப்புகளும் பாதிக்கப்படுவதில்லை. உலகத்தில் இந்த நோய் இல்லாத இடம் என்று எதுவும் கிடையாது. உலகம் முழுவதும் இருக்கிறது. இருந்தாலும் ஏனோ நீக்ரோக்கள், செவ்விந்தியர்கள், ஜப்பானியர்களை அதிகமாக தாக்குவதில்லை. உலக மக்களில் 2 சதவீதம் பேர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரு கோடியே 60 லட்சம் பேருக்கு உள்ளது. உலகில் எந்த நாடும் இந்த நோய்க்கு தப்பவில்லை. ஸ்வீடனில் இது அதிக அளவில் இருக்கிறது.

சோரியாசிஸில் ‘சோரியாடிக் ஆர்த்ரிடீஸ்’ என்று ஒருவகை உண்டு. இது வந்தால் உள்ளங்கை, உள்ளங்கால் விரல்கள் கோணிக்கொள்ளும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் சோரியாசிஸ் சரியானாதும் விரல்களின் கோணலும் சரியாகிவிடும்.

இந்த நோய் தொற்று நோயல்ல. உடலுறவு மூலமும் பரவக் கூடியதும் அல்ல. ஆனால், மரபு ரீதியாக வாரிசுகளுக்கு தொடர வாய்ப்பிருக்கிறது. சில சமயம் இது மூன்றாவது நான்காவது தலைமுறையையும் விட்டுவைப்பதில்லை. சிவந்த நிறம் கொண்டவர்களுக்கு இந்த நோய் வந்திருந்தால், அவர்கள் கருத்த நிறம் கொண்டவர்களை மணந்து கொண்டால் வாரிசுகளுக்கு இந்த நோய் வராது என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.

பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை

சோரியாசிஸ் உடலுக்கு எந்தவித வேதனையையும் கொடுப்பதில்லை. உடலின் வெளித்தோற்றம் பாதிக்கப்பட்டு மற்றவர்களின் அருவருக்கதக்க வகையான பார்வைகள் இவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன. யோகா, தியானம் போன்றவற்றால் நோயை கட்டுப்படுத்தலாம் என்கிறார்கள்.

சோரியாசிஸ் நோய் ரோடு போட பயன்படுத்தப்படும் தாரை மூலப் பொருளாகக்கொண்டு தயாரிக்கப்படும் மருந்து மூலமே ஓரளவுக்கு குணமாகிறது. விடை தெரியா ஒரு சில நோய்களில் இதுவும் ஒன்று!
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல