வியாழன், 8 டிசம்பர், 2016

உலகின் உய­ர­மான நத்தார் மரத்தை அமைக்கும் பணிகள் இடை­நி­றுத்தம்

கர்­தினால் மல்கம் ரஞ்­சித்தின் அதி­ருப்­தி­யை­ய­டுத்து நட­வ­டிக்கை

நத்தார் பண்­டி­கையை முன்­னிட்டு காலிமுகத்­தி­டலில் உல கின் உய­ர­மான நத்தார் மரத்தை அமைக்கும் பணிகள் கர்­தி னால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையின் அதி­ருப்­தியை அடுத்து கைவி­டப்­பட்­டன.

இந்­நி­லையில் இலங்­கைக்­கான புகழும் கின்னஸ் சாத­னைக்­கான கனவும் பலிக்­காமல் போனமை வருத்­த­ம­ளிப்­ப­தாக நத்தார் மர ஏற்­பாட்­டுக்­கு­ழு­வினர் கவலை வெளி­யிட்­டுள்­ளனர்.



துறை­மு­கங்கள் மற்றும் சுற்­று­லாத்­துறை அமைச்சின் நத்தார் மர ஏற்­பட்­டுக்­கு­ழு­வினால் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பு அமைச்சின் கேட்­போர்­கூ­டத்தில் நடை­பெற்­றது. இதில் கருத்­தது தெரி­வித்த குழுவின் தலைவர் மங்­கள குண­சே­கர மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்

இம்­முறை நத்தார் பண்­டி­கையை முன்­னிட்டு எமது முயற்­சியில் உலகின் மிகப்­பெ­ரிய நத்தார் மரம் ஒன்றை உரு­வாக்க சகல நாவ­டிக்­கைக்­ளையும் முன்­னெ­டுத்து வந்தோம். அர­சாங்கம் மற்றும் சகல தரப்­பி­னதும் ஆத­ரவில் இந்த முயற்­சி­களை நாம் முன்­னெ­டுத்தோம். குறிப்­பாக நாம் பௌத்­தர்கள் என்­றாலும் மத நல்­லி­ணக்கம் மற்றும் நாட்டின் ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்தும் வகையில் இந்த முயற்­சி­களை முன்­னெ­டுத்தோம். அதேபோல் இந்த மரம் உரு­வாக்­கப்­ப­டு­வ­தனால் இலங்­கைக்கு மிகப்­பெ­ரிய புகழும் சாதனை வாய்ப்­பு­களும் கிடைக்­க­வி­ருந்­தன. உலகின் மிகப்­பெ­ரிய நத்தார் மரத்தை உரு­வாக்­கு­வதன் மூலம் கின்னஸ் சாதனை ஒன்றை படைக்­கவும் அதன் மூலம் எமக்கு என்று ஒரு தனி அடை­யா­ளத்தை வைத்­துக்­கொள்­ளவும் விரும்­பினோம். மேலும் டிசம்பர் மாதம் இலங்­கையின் சுற்­று­லாத்­துறை அதி­க­ரிக்கும் மாத­மாகும். அவ்­வா­றான நிலையில் எமது இந்த முயற்சி இன்னும் நாட்டின் சுற்­றுலாத் துறையை அதி­க­ரிக்கும் வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுத்­தி­ருந்­தது.

மேலும் காலி முகத்­தி­டலை அண்­மித்­துள்ள சகல ஹோட்­டல்­க­ளிலும் முன்­ப­தி­வுகள் செய்­ய­பட்­டுள்­ள­துடன் மக்­களின் எதிர்ப்­பார்ப்பு அதி­க­ரித்­துள்­ளது என தெரிய வரு­கின்­றது. இதனால் நாட்டின் வருவாய் அதி­க­ரித்­துள்­ளது. மேலும் இவ்­வாறு வரும் வரு­மா­னத்தின் மூலம் சிறு­நீ­ரக நோயா­ளர்­க­ளுக்கு உதவும் எண்ணம் எமக்கு இருந்­தது. அதற்­கான ஆயத்­தங்­களை நாம் மேற்­கொண்டு வந்தோம். அதேபோல் 120 இலட்சம் ரூபாய் செலவில் இந்த மரம் உரு­வாக்­கப்­ப­ட­வி­ருந்­தது. எனினும் இந்த மரத்தை உரு­வாக்கும் செலவில் அதி­க­மா­னவை நிவா­ர­ண­மாக பெறப்­பட்­டுள்­ளன. வர்­ணப்­பூச்சு மற்றும் இரும்பு ஆகி­யவை நிவா­ர­ண­மாக கிடைத்­துள்­ளன. இவ்­வா­றான முயற்­சி­களை நாம் எடுத்­தி­ருந்த போதிலும் யாரும் எதிர்­பார்க்­காத நிலையில் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ள­மையை அடுத்து எமது இந்த முயற்­சிகள் அனைத்தும் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. இன்றில் இருந்து எமது இந்த வேலை­கள அனைத்தும் நிறுத்­தப்­படும்.

ஆரம்­பத்தில் அமைச்சர் மற்றும் சகல தரப்­பி­னரின் ஆத­ரவும் எமக்கு கிடைத்­தது. கர்­தினால் மெல் கம் ரஞ்சித் ஆண்­ட­கையை எம்மால் ஆரம்­பத்தில் இருந்து சந்­திக்க முடி­யாது போன­போதும் அவ­ரது பிர­தி­நி­தி­களை சந்­தித்து அனு­ம­தியை பெற்றோம். அதேபோல் உலக கின்னஸ் சபைக்கும் அறி­வித்தோம். பாப்­ப­ர­ச­ருக்கும் கூட அறி­விப்பை வழங்கும் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்ளோம். அவ்வாறு இருக்கையில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அறிவிப்பை அடுத்து நாம் உடனடியாக எமது முயற்சிகளை கைவிடுகின்றோம். இதனால் நாம் எந்த முரண்பாடுகளையும் ஏற்படுத்த விரும்பவில்லை. அவரது வார்த்தைகளுக்கு பூரணமான மதிப்பை வழங்கி எமது இந்த முயற்சிகள் அனைத்தையும் கைவிடுகினோம் என்றார்.

Virakesari
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல