செவ்வாய், 17 ஜனவரி, 2017

எக்ஸெல் டிப்ஸ்.. டாஸ்க் பாரில் விடைகள்.. செல்களைச் சுற்றி கோடுகள்

எக்ஸெல் டாஸ்க் பாரில் விடைகள்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டைப் பொறுத்த வரை, நாம் அதில் உள்ள நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையில் உள்ள செல்களைத் தேர்ந்தெடுத்தால், அதன் மதிப்புகள் நமக்கு டாஸ்க் பாரில் காட்டப்படும்.



Average, Count, Sum ஆகிய மதிப்புகள் காட்டப்படும்.
எவற்றைக் காட்ட வேண்டும் என்பதனை நாம் தான் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். எண்களின் கூட்டல் மட்டுமின்றி, மேலும் பல முடிவுகளையும் பெறலாம். ஸ்டேட்டஸ் பாரில், ரைட் கிளிக் செய்திடவும். இதில் ஒரு காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். இதில் Average, Count, Sum போன்ற இன்னும் பிற காட்டப்படும். இவற்றில் நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம்.

செல்களைச் சுற்றி கோடுகள்
நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில், செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளை மேற்கொள்ளவும்.

1. நீங்கள் பார்டர் அமைக்க விரும்பும் செல் அல்லது செல்வரிசையை முதலில் தேர்ந்தெடுக்கவும்.

2. Format மெனுவிலிருந்து Cells என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.

3. இதில் Border டேப்பில் கிளிக் செய்திடவும்.

4. டயலாக் பாக்ஸில், Border என்னும் பிரிவில், நீங்கள் எந்த இடத்தில் பார்டர் அமைக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Outline என்பது தேர்ந்தெடுக்கப்பட்டால், செல் முழுவதுமாக பார்டர் அமைக்கப்படும்.

5. Style பிரிவில், எந்தவிதக் கோட்டில் பார்டர் அமைக்கப் பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

6. அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

இன்னொரு வழியும் உள்ளது. டூல்பாரில் உள்ள Borders என்னும் டூலைப் பயன்படுத்தியும் பார்டர் கோடுகளை அமைக்கலாம்.

கீழே குறிப்பிட்டுள்ளபடி, இந்த டூலைப் பயன்படுத்த வேண்டும்.

1. பார்டர் அமைக்கப்பட வேண்டிய செல் அல்லது செல் வரிசையத் தேர்ந்தெடுக்கவும்.

2. நீங்கள் அமைக்க விரும்பும் பார்டர் வகை பார்டர்ஸ் டூலில் இருந்தால், அதில் கிளிக் செய்திடவும். இத்துடன் உங்கள் வேலை முடிந்துவிடும். இல்லை எனில், இங்கு குறிக்கப்பட்டுள்ளபடி தொடரவும்.

3. பார்டர்ஸ் டூலின் வலது புறம் உள்ள கீழ் நோக்கிய சிறிய முக்கோணத்தில் கிளிக் செய்திடவும். பலவகையான பார்டர் வகைக் கோடுகள் அடங்கிய கட்டம் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் பார்டர் வரியைத் தேர்ந்தெடுக்கவும். அவுட்லைன் பார்டரைப் பயன்படுத்தி, நீங்கள் அமைக்க விரும்பும் செல் வரிசையைத் தேர்ந்தெடுக்கலாம். இது பார்டர் கட்டத்தில், கீழாக வலது புறம் கிடைக்கும்.

பார்டர் கோடுகளை செல் அல்லது செல் வரிசைகளில் அமைக்க, ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருந்தாலும், இவற்றை நீக்க விரும்பினால், மிக எளிய வழி ஒன்று நமக்குக் கிடைக்கிறது. கண்ட்ரோல் கீயுடன், அண்டர் ஸ்கோர் கீயை (underscore) அழுத்த வேண்டும் (Ctrl+_) அமைக்கையில் ஷிப்ட் கீயையும் அழுத்த வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளவும்). செல்களில் உள்ள பார்மட் கூறுகளில், பார்டர்கள் மட்டுமே, இந்தக் கட்டளையால் நீக்கப்படும். மற்றவை அப்படியே இருக்கும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல