புதன், 1 பிப்ரவரி, 2017

எக்ஸெல் டிப்ஸ்... குறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் அச்சிட.. ஒரே நேரத்தில் பல பைல்களைத் திறக்க

ஒரே நேரத்தில் பல பைல்களைத் திறக்க
எக்ஸெல் புரோகிராம் பைல்களை நிர்வகிப்பதில் சிறந்த இயக்க முறையைக் கொண்டுள்ளது. அதில் ஒன்று, ஒரே முயற்சியில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளைத் திறப்பதாகும். இதனை மேற்கொள்ள கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.



முதலில் Ctrl+O அழுத்தவும். இதனால், Open Dialogue Box திறக்கப்படும்.
பைல் ஒன்றைத் திறப்பதற்கு, பைல் பெயரின் மீது டபுள் கிளிக் செய்வதற்குப் பதிலாக, பைல் தேர்ந்தெடுக்கும் பணியினை மேற்கொள்ளவும். தொடர்ச்சியாக பைல் தேர்ந்தெடுக்க, முதல் பைலைத் தேர்ந்தெடுத்துப் பின், Shift அழுத்தியவாறே, இறுதி பைலையும் தேர்ந்தெடுக்கவும். தொடர்ச்சியாக இல்லை என்றால், Ctrl கீயை அழுத்தியவாறே, பைல்களைத் தேர்ந்தெடுக்கவும்.

பைல்கள் அனைத்தும் தேர்ந்தெடுத்து முடித்த பின்னர், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், Open என்பதில் கிளிக் செய்திடவும்.
அனைத்து ஒர்க் புக்குகளும் திறக்கப்படுவதைப் பார்க்கலாம்.

கண்ட்ரோல் கீ அழுத்தி பல பைல்களைத் தேர்ந்தெடுத்த பின்னர், எந்த ஒரு பைலையாவது இந்த தேர்விலிருந்து நீக்க வேண்டும் என்றால், கண்ட்ரோல் கீ அழுத்தியவாறு, மவுஸால் அதன் மீது கிளிக் செய்திடவும். பைல் தொகுப்பிலிருந்து அந்த குறிப்பிட்ட பைல் மட்டும் நீக்கப்படும். பைல்கள் திறக்கப்படுகையில், அந்த பைல் மட்டும் திறக்கப்பட மாட்டாது.

குறிப்பிட்ட பக்கங்கள் மட்டும் அச்சிட
சில ஒர்க் ஷீட்கள் பல பக்கங்கள் அடங்கியதாக வடிவமைக்கப்படும். ஆனால், அச்சிடுகையில், சில பக்கங்கள் மட்டும், அதுவும் தொடர்ச்சியாக இல்லாமல், தேவைக்கேற்ப அச்சிட வேண்டியதிருக்கும். இது போன்ற வேளைகளில் எப்படி அவற்றை அச்சிடுவது எனப் பார்க்கலாம்.

நாம் தயாரித்த ஒர்க் ஷீட் ஒவ்வொன்றும் ஒரே தாளில் அச்சிட முடியும் என்றால், இந்த பிரச்னைக்குத் தீர்வினை எளிதாக மேற்கொள்ளலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், எந்த பக்கங்களை அச்செடுக்க வேண்டுமோ, அவற்றை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, பக்கங்கள் 4,8,10 அச்சடிக்க வேண்டும் என்றால், முதலில் ஒர்க் ஷீட் 4 தேர்ந்தெடுத்து, பின்னர், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஒர்க் ஷீட் 8, பின் 10 எனத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், நாம் அச்சிடுகையில், இந்த பக்கங்கள் மட்டுமே அச்சாகும்.

இதற்குப் பதிலாக, ஒரே ஒர்க் ஷீட்டில் உள்ள வெவ்வேறு பக்கங்களை அச்செடுக்க வேண்டுமெனில், சற்று சிக்கலான வழிகளைக் கடைப்பிடிக்க வேண்டியதிருக்கும். அச்செடுக்க விரும்பாத பக்கங்களை மறைத்து (hide) வைத்து, பின் மறைக்கப்படாத பக்கங்களை அச்செடுப்பதாகும். இன்னொரு எளிய வழியையும் இங்கு பார்க்கலாம். ரிப்பனில் வியூ டேப் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து Workbook Views குரூப்பில், Page Break Preview டூலின் மீது கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் உங்கள் ஒர்க் ஷீட்டினைக் காட்டும். அதன் அனைத்து பேஜ் பிரேக் இடங்களும் தெரியும். இப்போது எந்த பக்கத்தினை அச்செடுக்க வேண்டுமோ, அதன் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, அச்சடிக்க விரும்பும் அடுத்த பக்கத்தில் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும். இப்படியே, அச்செடுக்க விரும்பும் அனைத்து பக்கங்களிலும் உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும்.

தொடர்ந்து, கண்ட்ரோல் -+ பி (Ctrl+P) அழுத்தவும். எக்ஸெல் 2007 பிரிண்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும். நீங்கள் எக்ஸெல் 2010 பயன்படுத்தினால், ரிப்பனில் பைல் டேப்பினைக் காட்டும். அதில் அச்செடுப்பதற்காண கண்ட்ரோல் கட்டளைகளைக் காணலாம்.

எக்ஸெல் 2007ல், Print What ஏரியாவில், Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2010ல், தலைப்பின் கீழ் உள்ள பட்டனை அழுத்தி, Print Selection என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

ஓகே அல்லது பிரிண்ட் கிளிக் செய்தால், தேர்ந்தெடுத்த பக்கங்கள் அச்சாகும். தொடர்ந்து அச்சான பின்னர், Page Break Preview டிஸ்பிளேயை மூடவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல