சனி, 10 ஜூன், 2017

உணவை சிந்திய சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண் அடிவாங்கும் காணொளி : திடுக்கிடும் உண்மை தகவல்கள் வெளியாகின

உணவை சிந்தியதற்காக 6 வயது சிறுமியை ஒருவரை வயோதிப பெண் ஒருவர் கடுமையாக தாக்கும் வீடியோ ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.



தற்போது மலேசியா, கோலாலம்பூர், புக்சோவ் என்ற பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது தெரிய வந்தது.

குழந்தையை தாக்கிய அந்த பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

அந்த குழந்தையின் வீட்டில் வேலை பார்த்த அப்பெண் அந்த வீட்டில் இருந்து நகைகளை திருடியது தெரிய வந்ததுள்ளது.

மேலும் அந்த குழந்தையை ஈவு இரக்கமில்லாமல் கொடூரமாக தாக்கியும் உள்ளார்.

அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தும் வீடியோவும் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இவ்வாறு விசாரணை நடத்திய போது தான் அந்த வீட்டில் நகைகள் திருடியதையும் அந்த பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

நகையை திருடியதும் இல்லாமல் தாய் தந்தையற்ற அனாதை சிறுமியை தாக்கிய குற்றத்திற்காக அவருக்கு தற்போது சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான சிறுமிக்கு தற்போது ஒரு நல்ல தத்துப்பெற்றோருடன் வாழும் வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக...

சாப்பிடும் போது உணவை சிந்தியதற்காக, 6 வயது சிறுமியை கண்மூடித்தனமாக மரத்தினால் ஆன தடியால் 30க்கும் மேற்பட்ட தடவைகள் வயோதிப பெண் ஒருவர் தாக்குவதும், சிறுமி கதறி அழுவதுமான காணொளியொன்று அடையாளம் தெரியாத நபர் சமூக தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்த காட்சி ‘வைரலாக’ பரவியது. மலேசியாவின் தமன் புசங் பெர்டானா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளமை பின்னர் தெரியவந்தது. 2 நிமிடம், 50 செக்கன்கள் ஓடும் இந்த வீடியோவில் ஒரு சிறுமி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.



சிறுமிக்கு முன்பாக ஒரு பெண் உட்கார்ந்து கொண்டிருந்தார். சிறுமியை எழுந்து போகுமாறு அப்பெண் கூற, அச்சிறுமி எழுந்து செல்லும் போது சில உணவுப் பொருட்கள் சிந்துகின்றன.

இதைப் பார்த்த அப்பெண்மணி தடியால் சிறுமியை பலமாக அடிக்கிறார். சிறுமி கதறி அழுதும், நிறுத்தாமல் தொடர்ந்து தாக்குகின்றார்.

தொடர்ந்து அடித்துக் கொண்டே, "எத்தனை முறை அடித்தாலும் உனக்கு ஒழுங்காக சாப்பிடுவது எப்படி என்று தெரியவில்லை. செத்துப்போ, எங்காவது போய்விடு, எங்காவது போய் செத்துவிடு. எப்படி சாப்பிடுவது என்று கூட தெரியவில்லை" என்று கத்துகிறார்.

பிறகு அடிப்பதை நிறுத்திவிட்டு வேறு அறைக்குச் செல்லும் பெண், மீண்டும் வந்து அந்த சிறுமியை அடிக்கிறார். அப்போது இந்த வீடியோவை எடுப்பவர், ‘‘குழந்தையை அடிக்காதீர்கள், ஏன் அடிக்கிறீர்கள், இதைப் புகைப்படம் எடுத்து செய்தியில் வெளியிடுவேன்’’ என்று எச்சரிக்கிறார்.

இதன் பின்னர் குறித்த பெண் அயலவர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல