ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

கொசுவை அடித்து டுவிட்டரில் புகைப்படம் போட்ட ஜப்பானியரின் கணக்கை நீக்கிய டுவிட்டர் நிறுவனம்

கொசுவை அடித்து டுவிட்டரில் புகைப்படம் பதிவேற்றம் செய்த ஜப்பானியரின் கணக்கை டுவிட்டர் கணக்கை அந்த நிறுவனம் நீக்கி உள்ளது.



ஜப்பானை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி அன்று கொசுவை அடித்து அதனை புகைப்படம் எடுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார்.

பதிவு செய்து மட்டும் அல்லாமல் ”நான் ரிலாக்ஸாக டிவி பார்க்கும் போது அந்த கொசு என்னை கடித்து விட்டு எங்கே போற? சாவு! என பதிவிட்டுள்ளார்.

உடனே அவரது டுவிட்டர் கணக்கிறகு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் உங்களது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது என அதில் கூறப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து புதிய டுவிட்டர் கணக்கை தொடங்கிய அந்த ஜப்பானியர் அதில் ஒரு கொசுவை நான் கொன்றதாக கருதி எனது டுவிட்டர் கணக்கை முடக்கி விட்டனர்.

அந்த டுவிட்டர் பதிவை 31,000 தடவை டுவீட் செய்யப்பட்டுள்ளது. சுமார் 27,00 பேர் அதனை லைக் செய்துள்ளனர் என புதிய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அமெரிக்க வணிக இதழ் பார்ச்சூன் வெளியிட்ட செய்தியில் டுவிட்டர் நிறுவனம் பயனர்கள் அவர்கள் பக்கத்தில் பதிவிடும் தவறான மற்றும் பிரச்சனைக்குரிய வார்த்தைகளை கண்டறியும் வழிமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அது ஒரு தானியங்கு நிரல் . நாம் தவறான வார்த்தைகளை பதிவிட்டால் அதுவாகவே தடை செய்துவிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல