செவ்வாய், 27 மார்ச், 2018

உங்களுடைய டேட்டாபேஸ் விவரங்களை ஃபேஸ்புக்கில் பார்ப்பது எப்படி?

பேஸ்புக் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு தகவல்களை நம்மால் எளிமையாக பார்க்க முடியும், அதற்கு சில வழிமுறைகள்உள்ளன. குறிப்பாக உங்களுக்கு வழங்கப்படும் விளம்பரங்கள், நீங்கள் ஷேர் செய்த போஸ்ட் விவரங்கள், அப்லோடு செய்த புகைப்படங்கள் மற்றும் மெசேஜ்கள் போன்றவற்றை பார்க்க முடியும்.



விளம்பரம்:

வழிமுறை-1: முதலில் விளம்பரம் சார்ந்த தகவல்களை பார்க்க உங்கள் ஃபேஸ்புக் லாக் இன் செய்ய வேண்டும்.

வழிமுறை-2: அடுத்து ஃபேஸ்புக்கில் இடம்பெற்றுள்ள செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்து உள்நுழைய வேண்டும்.

வழிமுறை-3: பின்பு ஆட்ஸ்-எனும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-4: அதன்பின்பு நீங்கள் பதிவிட்ட விவரங்கள் மற்றம் ஃபேஸ்புக் பேஜ், ஆப்ஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றிருக்கும். குறிப்பாக விளம்பரதாரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்களின் தகவல்களை பார்க்க முடியும்.

வழிமுறை-5: அடுத்து நீங்கள் பேஸ்புக் பயன்படுத்த உபயோகிக்கும் சாதனம், பயனம் செய்த இடம் போன்ற அனைத்து தகவல்களையும் இந்தப் பகுதியில் பார்க்க முடியும். நீங்கள் குறிப்பிட்ட தகவல்களில் பிழை இருந்தாலோ அல்லது தவறாக பதிவிடப்பட்டு இருந்தாலோ அவற்றை அழிக்க ஃபேஸ்புக் அனுமதிக்கிறது.

பயனர்களின் தகவல்கள்:

வழிமுறை-1: ஃபேஸ்புக் வைத்திருக்கும் பயனர்களின் தகவல்கள் பார்க்க குறிப்பிட்ட வழிமுறை இருக்கிறது. முதலில் உங்கள் ஃபேஸ்புக் லாக் இன் செய்து,செட்டிங்ஸ் பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-2: அடுத்து ஃபேஸ்புக் டேட்டாவை டவுன்லோடு செய்யக்கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்பு ஸ்டார்ட் மை ஆர்ச்சிவ் எனும் விருப்பத்தை தேர்வு செய்யவேண்டும்.

வழிமுறை-3: பின்னர் உங்களின் பாஸ்வேர்டினை பதிவிட்டால், உங்களுடைய டேட்டா அனைத்தும் மின்னஞ்சல் வழியே அனுப்பப்படும். குறிப்பாக மெசேஜ்கள், வீடியோக்கள், நண்பர்கள், விளபம்ரங்கள், புகைப்படங்கள், போன்ற அனைத்து தரவுகளும் இடம்பெற்றிருக்கும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல