ஞாயிறு, 27 மே, 2018

மகனால் கொடுமைப்படுத்தப்பட்ட சீனியர் நடிகை முதியோர் இல்லத்தில் மரணம்

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட நடிகை கீதா கபூர் முதியோர் இல்லத்தில் உயிர் இழந்தார். பகீசா பாலிவுட் படம் புகழ் கீதா கபூருக்கு ராஜா என்ற மகனும், பூஜா என்ற மகளும் உள்ளனர். வயதான தாயை பார்த்துக் கொள்ள விரும்பாத மகன் ராஜா அவரை கடந்த ஆண்டு மே மாதம் மருத்துவமனையில் அனுமதித்தார்.



மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு பணம் எடுத்து வருவதாகக் கூறி சென்ற ராஜா திரும்பி வரவே இல்லை.

கீதா கபூரின் நிலை குறித்து அறிந்த சென்சார் போர்டு உறுப்பினர் அசோக் பண்டிட் மற்றும் தயாரிப்பாளர் ரமேஷ் தாராணி ஆகியோர் மருத்துவமனை செலவை ஏற்றதுடன் அவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டனர்.

ஓராண்டு காலமாக முதியோர் இல்லத்தில் இருந்த கீதா நேற்று காலை மரணம் அடைந்தார். பிள்ளைகள் ஒரு முறையாவது வந்து தன்னை பார்க்க மாட்டார்களா என்ற ஏக்கத்திலேயே அவர் உயிர் இறந்துள்ளார்.

கீதா கபூரின் உடல் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையில் இரண்டு நாட்கள் வைக்கப்படுகிறது. அவரின் பிள்ளைகள் வந்து அவருக்கு இறுதிச் சடங்கு செய்வார்கள் என்ற நம்பிக்கையில் அவரின் உடல் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கீதா கபூர் தனது மகனுடன் வசித்தபோது நான்கு நாட்களுக்கு ஒரு முறை அவருக்கு உணவு கொடுக்கப்பட்டுள்ளது. அம்மா என்று கூட பார்க்காமல் அவரை அடித்து உதைத்து அறையில் பூட்டி வைத்திருந்திருக்கிறார் ராஜா.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல