திங்கள், 4 ஜூன், 2018

கூகுள் அசிஸ்டண்ட் புதிய குரல்களை பெறுவது எப்படி?

கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட புதிய குரல்களை ஆன்ட்ராய்டு சாதனங்களில் பெறுவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.



அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்ற கூகுள் I/O 2018 நிகழ்வில் கூகுள் அசிஸ்டண்ட்-இல் புதிதாக ஆறு குரல்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரபல குரல் வல்லுநரான ஜான் லெஜன்ட் குரலும் ஒன்றாகும்.

அசிஸ்டண்ட் சேவையில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய குரல்கள் வேவ்நெட் எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்து இயங்குகிறது. இது இயந்திர குரலினை மனித குரல் போன்று ஒலிக்க செய்யும் திறன் கொண்டுள்ளது. முதற்கட்டமாக ஜான் லெஜன்ட் குரல் சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் மற்றவர்களின் குரல்களும் சேர்க்கப்பட இருக்கிறது.

இந்த தொழில்நுட்பம் கூகுள் ஹோம் ஸ்பீக்கர்கள் மற்றும் மொபைலில் உள்ள கூகுள் அசிஸ்டண்ட் சேவைகளில் இயங்கும். கூகுள் அசிஸ்டண்ட் சேவையில் வழக்கமான இயந்திர குரலை கேட்டு சலித்து விட்டதா? இனி இவ்வாறு தோன்றும் போதெல்லாம் கூகுள் அசிஸ்டண்ட் குரலினை மாற்ற முடியும். இதை எவ்வாறு செய்ய வேண்டுமென தொடர்ந்து பார்ப்போம்.

கூகுள் அசிஸ்டண்ட் செயலியை ஆன்ட்ராய்டு சாதனத்தில் ஓபன் செய்ய வேண்டும்.

இனி திரையின் மேல்புறம் காணப்படும் மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து செட்டிங்ஸ் -- ப்ரிஃபரன்சஸ் -- அசிஸ்டண்ட் வாய்ஸ் ( Settings > Preferences > Assistant Voice) உள்ளிட்ட ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.

இங்கு காணப்படும் ஆறு குரல்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்ய முடியும். இத்துடன் குரல்களை செட் செய்யும் முன் ஒவ்வொரு குரலையும் பிரீவியூ ஆப்ஷன் மூலம் கேட்க முடியும். பிரீவியூ செய்ய குரலின் அருகில் உள்ள ஸ்பீக்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த ஆப்ஷனில் நீங்கள் தேர்வு செய்யும் குரலில் கூகுள் அசிஸ்டண்ட் உங்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும். ஒவ்வொரு பயனரும் வெவ்வேறு குரல்களை தேர்வு செய்ய முடியும் என்பதால் வீட்டில் உள்ள ஸ்பீக்கரில் வெவ்வேறு குரல்களை ஒலிக்க செய்யலாம்.

புதிய அம்சத்தை பயன்படுத்த நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தில் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை அப்டேட் செய்ய வேண்டும். இதுவரை இந்த அப்டேட் பெறாதவர்கள் கூகுள் அசிஸ்டண்ட் செயலியை அப்டேட் செய்து பின் முயற்சிக்கலாம்.

லெஜன்ட் குரல் இன்னும் சேர்க்கப்படவில்லை. இதற்கான அப்டேட் இந்த ஆண்டிற்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று உங்களது லேங்குவேஜ் செட்டிங்ஸ்-க்கு ஏற்ப நீங்கள் பயன்படுத்தும் சில சாதனங்களில் சில குரல்கள் வழங்கப்படாமல் இருக்கலாம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல