சனி, 27 ஏப்ரல், 2019

39 வயதில் 44 குழந்தைகளுக்கு தாயான உகண்டா நாட்டு பெண்

உகண்டாவில் 12 வயதில் திருமணம் செய்துகொண்ட 39 வயது மரியம் நபடன்ஸிக்கு என்ற பெண் மொத்தம் 44 குழந்தைகளை பெற்றுள்ளார்.



இதில் 6 பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள், 4 முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள், 5 முறை ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள் அடங்கும். அதில் 6 குழந்தைகள் இறந்துவிட்டன. தற்போது மரியம் 38 பிள்ளைகளை சிரமப்பட்டு வளர்த்துவருகிறார்.

முதல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தவுடன் மரியம் மருத்துவரைப் பார்க்கச் சென்றுள்ளார். மரியமின் கருப்பைகள் பெரிதாக இருந்ததால், கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டால் உடல்நலப் பிரச்சினைகள் வரலாம் என்று மருத்துவர் கூறினார்.

3 வருடங்களுக்கு முன், மரியமை அவரின் கணவர் கைவிட்டுவிட்டார். மரியம் தனது 38 குழந்தைகளை தனி ஆளாக வளர்க்க பல வேலைகளைச் செய்யத் ஆரம்பித்தார். அதிலிருந்து வரும் சிறிதளவு பணம் பிள்ளைகளின் அடிப்படை தேவைகளுக்கே சரியாகப் போய்விடுகிறது என்று புலம்புகிறார் மரியம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல