புதன், 3 ஏப்ரல், 2019

இந்த பெண்ணை தெரிந்தால் உடன் அறிவிக்கவும்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிய சென்ற தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.



சந்தனம் ராமலிங்கம் கலைச்செல்வி என்ற பெண் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

கலைச்செல்வி கடந்த 2010 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 7 ஆம் திகதி சவுதி அரேபியா சென்ற கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இலங்கையில் உள்ள வீட்டாருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

இதன் பின்னர் கலைச்செல்வி பற்றிய எந்த தகவல்களும் அவரது குடும்பத்தினருக்கு கிடைக்கவில்லை.

இந்த பெண் பற்றி தகவல்களை அறிந்திருந்தால், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் 111 என்ற அவசர அழைப்பு எண் மற்றும் 0114-374384, 0112- 864112, 0112880500 ஆகிய தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொண்டு அறிய தருமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல