செவ்வாய், 16 ஏப்ரல், 2019

தாயின் கருப்பையினுள் இரட்டை குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று குத்துச்சண்டை போடும் வீடியோ

தாயின் கருப்பையினுள் இருக்கும் இரட்டை குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று குத்துச்சண்டை போடும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.



சீனாவை சேர்ந்த 28 வயதான தாவோ என்பவர் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை கடந்த ஆண்டு ஸ்கேன் செய்து பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வயிற்றினுள் இருந்த இரட்டை பெண் குழந்தைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுவதை பார்த்து பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.உடனே அதனை வீடியோவாக எடுத்த அவர், இணையதளத்தில் வெளியிட ஆரம்பித்தார். இந்த வீடியோவை பார்த்த இணையதளவாசிகள் பலரும் பெரும் ஆச்சர்யத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது 2.5 மில்லியன் லைக்ஸ் மற்றும் 80,000 கருத்துகளை பெற்றுள்ளது. வயிற்றினுள் சண்டையிட்ட குறும்பான அந்த இரட்டை பெண் குழந்தைகள் சமீபத்தில் பிறந்துள்ளன. அவர்களது தாய் விரும்பி சாப்பிடும் பழங்களான 'செர்ரி' மற்றும் 'ஸ்டிராபெரி' என்பனவற்றின் பெயரை தன்னுடைய மகள்களுக்கு சூட்டி மகிழ்ந்திருக்கிறார்.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல