சனி, 4 மே, 2019

மலைப்பாம்பை வைத்து வேடிக்கை காட்டிக்கொண்டிருந்த போது வாலிபர் கழுத்து இறுக்கி பலி (காணொளி, படங்கள் இணைப்பு)

ரஷ்யாவில் டாக்ஸ்டன் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் மேடையில் நின்றுகொண்டு மலைப்பாம்பினை தனது உடலில் சுற்றிக்கொண்டு வேடிக்கை காட்டினார்.


இதனை கீழே இருந்த குழந்தைகள் உட்பட பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, இளைஞரின் உடலை இறுக்கிய மலைப்பாம்பு அடுத்தபடியாக அவரது கழுத்தை இறுக்கியது.

மலைப்பாம்பு கழுத்தை இறுக்கியவுடன் அதிலிருந்து மீளமுடியாத இளைஞர் நொடிப்பொழுதில் தரையில் விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இதனை பார்வையாளர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதையடுத்து, டாக்ஸ்டன் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், இப்படி ஒரு சம்பவம் எங்கள் பகுதியில் நடந்ததாக எவ்வித பதிவும் இல்லை என போலீசார் மறுத்துள்ளனர்.



Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல