ஞாயிறு, 7 ஜூலை, 2019

23 வருஷத்துக்குமுன் ஆபரேஷனில் கத்தரிக்கோலை வயிற்றுக்குள் மறந்து வைத்த டாக்டர்... இப்ப எடுத்துருக்காங்க


ரஷ்யாவில் வடக்கு ஆஸ்டியா என்ற பகுதியில் எஸீட்டா கோபீவாவுக்கு (Ezeta Gobeeva)1996 ஆம் ஆண்டு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்து அவ்வப்போது அவருக்கு அடிவயிற்றில் ஏற்பட்டது. வலி வரும்போதெல்லாம் எலீட்டா மருத்துவர்களிடம் செல்வார்.


அவர்களும் வலி நிவாரணி மருந்துகளை அளிப்பர். அப்போதைக்கு வலி குறையுமே தவிர முற்றிலும் நிற்காது. மீண்டும் வலி வரும். எஸீட்டா மருத்துவமனைக்குச் செல்வார். அவர் வாழ்க்கையில் இது வாடிக்கையாகி விட்டது.

ஈரலில் நோய் ஏற்பட்டுள்ளதால் எஸீட்டாவுக்கு அடிக்கடி வயிற்றுவலி வந்திருக்கலாம் என்ற நோக்கிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது தரும் மருந்துகள் வலியை மரத்துப்போகச் செய்கின்றன; குணப்படுத்தவில்லை என்று எஸீட்டா தெரிவித்தார். இறுதியாக ஒரு மருத்துவர் வயிற்றுப் பகுதியை எக்ஸ்ரே எடுக்குமாறு பரிந்துரைத்தார்.

எஸீட்டாவுக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்த சிறப்பு மருத்துவருக்கு தன் கண்களையே நம்ப இயலவில்லை. எஸீட்டாவின் வயிற்றுக்குள் கத்தரி ஒன்று இருந்தது. எக்ஸ்ரே எடுக்கும் அறைக்குள் எஸீட்டா கத்தரிகோலை தவறுதலாக எடுத்துச் சென்றிருக்கூடும் என்று நினைத்தார். ஆனால், உண்மையில் வயிற்றினுள்ளேதான் கத்தரி இருந்தது. யார் வைத்தது?

வயிற்றினுள் கத்தரிகோல் எப்படி வந்திருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கேட்டபோது எலீ்ட்டாவுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. தனக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று கூறினார். அப்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கத்தரியை மறந்துபோய் எலீட்டாவின் வயிற்றுக்குள் வைத்துவிட்டது தெரிய வந்தது. 23 ஆண்டுகள் தேவையில்லாமல் வேதனைப்பட்டதற்கு எஸீட்டாவுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் சம்மந்தபட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல