ஞாயிறு, 29 மார்ச், 2020

வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்பை உங்கள் டிவி திரையில் எப்படி பார்ப்பது ?

பெரிய திரையில் வாட்ஸ்அப் பயன்படுத்த சிறிய ட்ரிக்
வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் பெரும்பாலும் ஸ்மார்ட்போனில் மட்டுமே செய்யப்படுகின்றன, அதற்கு மட்டும் தான் வாட்ஸ்அப் பயன்பாடும் அனுமதிக்கிறது. ஆனால், சிறிய திரையில் மணிக்கணக்கில் வெறித்துப் பார்ப்பதற்கு வசதியாக இல்லாத நபர்களுக்கு இந்த நிலையை மாற்ற ஒரு சிறிய ட்ரிக் இருக்கிறது.



Chromecast முறை
வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை நேரடியாக உங்கள் டிவி திரைக்கு மாற்றிப் பயன்படுத்தலாம் என்று எப்போதாவது யோசித்தீர்களா? அப்படி யோசித்திருந்தால், Chromecast முறைப்படி அது சாத்தியமே என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். பெரும்பாலான ஆண்ட்ராய்டு சாதனங்களில் கிறோம்காஸ்ட் பயன்படுத்தப்படுகிறது. Cast என்ற சேவை கொண்டு உங்களின் வாட்ஸ்அப் வீடியோ கால்லிங் அழைப்புகளை காஸ்ட் செய்துகொள்ள முடியும்.

cast என்றால் என்ன?
cast என்பது உங்கள் போனில் உள்ள செயல்பாட்டை அப்படியே அருகில் உள்ள உங்கள் பிற சாதனங்களில் பிரதிபலிக்கச் செய்யும் ஒரு சேவையாகும். இந்த சேவையைப் பயன்படுத்தி உங்களின் வாட்ஸ்அப் வீடியோ கால்லிங் அழைப்புகளை எப்படி நேரடியாக உங்கள் ஸ்மார்ட் டிவியில் பிரதிபலிக்கச் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

செயல்முறை

முதலில், HDMI கேபில் கொண்டு உங்கள் Chromecast சாதனத்தை உங்கள் டிவியுடன் இணைக்கவும்.

செட்டிங்ஸ் சென்று Connected Devices/Connectivity என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

பின் Connection Preferences என்ற விருப்பத்திற்குச் செல்லவும், பட்டியலிலிருந்து "cast" என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யவும்.

உங்கள் Chromeecast சாதனம், உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் தோன்றும் வரை சிறிது வினாடிகள் காத்திருக்கவும்.

அருகில் கிடைக்கக்கூடிய சாதனங்களின் பட்டியலிலிருந்து உங்கள் "Chromecast " சாதனத்தின் பெயரைத் தேர்வு செய்யுங்கள்.

Start Now என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்கள் போன் திரையை அப்படியே டிவி திரைக்குப் பிரதிபலிக்கச் செய்து பயன்படுத்தத் துவங்கவும்.

இப்போது உங்கள் ஆண்ட்ராய்டு திரை, உங்களின் டிவியுடன் வெற்றிகரமாக காஸ்ட் செய்யப்பட்டிருக்கும். இப்போது நீங்கள் விரும்பும் வீடியோ, போட்டோஸ், கேம் அல்லது உங்கள் வாட்ஸ்அப் சாட் அல்லது உங்கள் வாட்ஸ்அப் வீடியோ கால் போன்று அனைத்து விஷயங்களையும் டிவி திரைக்கு மாற்றி நீங்கள் பயன்படுத்திகொள்ளலாம்.

முக்கிய குறிப்பு
இந்த காஸ்டிங் சேவை இணைப்பை வெற்றிகரமாக நிகழ்த்த, உங்கள் Chromecast சாதனம் மற்றும் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சாதனம் என இரண்டும் ஒரே வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் ஆண்ட்ராய்டு திரை பயன்பாட்டை உங்கள் டிவியில் பிரதிபலிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல