செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

முகக்கவசம் அணிந்தவாறே உணவருந்தக் கூடிய புதிய முறை அறிமுகம்!

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாத் தொற்றுக்காரணமாக பெரும்பாலான நாடுகளில் மக்கள் வெளியே செல்லும் போது முகக் கவசம் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும் உணவகங்களுக்குச் செல்வோர் முகக்கவசத்தைக் கழற்றி விட்டு உணவருந்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில் இதனை தவிர்க்கும் வகையில் வாய் மற்றும் மூக்கை மறைத்தபடி உணவருந்தும் முகக்கவசத்தை ஜப்பானிய உணவகமொன்று  அறிமுகப்படுத்தியுள்ளது.
 
இம் முகக் கவசத்தைப் பயன் படுத்துவதன் மூலம் எளிதாகவும், பாதுகாப்பாகவும் உணவருந்த முடியுமென இதன் வடிவைமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


முகக்கவசம் அணிந்தவாறே உணவருந்த முடிவதால் மக்களிடையே  குறித்த முகக் கவசம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல