சனி, 22 ஆகஸ்ட், 2020

கைலாசா நாட்டில் ஹோட்டல் தொடங்க நித்யானந்தாவிடம் அனுமதி கேட்கும் மதுரை தொழிலதிபர்!

 
கைலாச நாட்டில் தனது ஹோட்டலின் கிளையை நிறுவ அனுமதி தரவேண்டும் என மதுரையின் பிரபல டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளர் குமார் நித்தியானந்தாவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.கைலாஷா என்ற தனது நாட்டிற்கு பெயர் வைத்ததோடு விநாயகர் சதுர்த்தியான இன்று தனது நாட்டிற்கான நாணயங்களை நித்யானந்தா வெளியிட்டிருந்தார்.

கைலாசா எங்கு இருக்கிறது, அவர் அறிவித்த நாணயங்கள் எங்கெங்கு செல்லும் என்கிற பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாத நிலையில், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பல்வேறு கிளைகளை வைத்துள்ள மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டலின் உரிமையாளரும், மதுரை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான குமார் என்பவர் நித்யானந்தாவிற்கு ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார்.

அதில் கைலாச நாட்டில் தனது ஹோட்டலின் கிளையை நிறுவுவதற்கு நித்யானந்தா அனுமதி தரவேண்டும் என்றும், அவரைப் போன்று தங்களுடைய ஹோட்டலும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தக் கோரிக்கையை நேரடியாக நித்தியானந்தாவிடம் தெரிவிக்க முடியாத காரணத்தால் நாணய வெளியீடு உள்ளிட்ட அறிவிப்புகளை செய்திகள் மூலமாகத்தான் அறிந்து கொண்டதாகவும், அதே போல தன்னுடைய கோரிக்கையும் செய்தி மூலம் நித்யானந்தா நாளை காலை அறிந்து கொள்வார் என்றும் அந்தக் கோரிக்கை கடிதத்தில் குமார் குறிப்பிட்டுள்ளார். டெம்பிள் சிட்டி ஹோட்டல் கிளை கைலாசாவில் நிறுவப்படுமா?


நித்யானந்தாவின் முடிவை எதிர்பார்த்து குமார் காத்திருக்கிறார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல