சுதன் ரமேஸ் பிரச்சினையும் என் நிலைப்பாடும்
எனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக ரெலோவில் நடந்த பிரச்சினையும் அந்தப் பிரச்சினையில் நான் எடுத்துக் கொண்ட நிலைப்பாடுமே இன்று வரையும் என்னை மனிதனாக வாழ வைக்கிறது. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் ஒருநாள் இரவு சில பொறுப்பாளர்கள் எமது அறைக்கு வந்தனர். எமது தலைவரான சிறி சபாரெத்தினத்தை அடுத்த கட்டத்திலுள்ள உபதலைவர்களான அரசியல் பிரிவை சேர்ந்த சுதன் மற்றும் இராணுவபிரிவைச் சேர்ந்த, ரமேஸ் என்பவர்கள் புலிகளிடம் ஆயுதம் வாங்கிக் கடத்திச் செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் இருவரும் தம்மிடம் தான் உள்ளனர் என்றும் சொன்னார்கள். அதனால் புலிகள் ஆத்திரப்பட்டு சிலவேளைகளில் எமது பாதுகாப்பிற்கே ஆபத்துக்கள் கொண்டு வரலாம், ஆகவே எவரும் வெளியே போக வேண்டாம் என்றும் கூறினார்கள்.