செவ்வாய், 2 ஜூன், 2015

சினிமாவைப் பார்த்துட்டு போய்ட்டே இருங்க, பாலோ பண்ணாதீங்க..

சினிமாவை வெறும் படமாக மட்டும் பாருங்கள் அதனை வாழ்க்கையோடு முடிச்சுப் போட்டு, சினிமாவில் நடிப்பவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று அவர்களை அரியணையில் வைத்துக் கொண்டாடாதீர்கள் என்று நடிகை ரோகினி சுள்ளென்று கூறியுள்ளார். பச்சை மிளகாயைக் கடித்தது போன்ற உணர்வு அவரின் பேச்சைக் கேட்டவர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

சனி, 30 மே, 2015

மறைக்கப்பட்ட நீதியின் மேல் நீதிக்கான பயணம்: வித்யா மீதான பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பான ஒரு பார்வை

கடற்பரப்பின் ஒளிப்புனலிலும் மௌன அலைகளின் வரவேற்பிலும் vithya-5புங்குடுதீவினை நோக்கி கடலை ஊடறுத்தவாறான எமது பயணத்தில் வித்யாவின் நினைவுகளுடன் நீண்டு சென்றது பாதை. பரந்து நீண்டிருந்த கடலின் ஆழத்தில், உப்புக்காற்றின் ஈரத்தில், எம்மவர் கதைகள் புதைந்திருப்பதனை உணர முடிந்தது. நீதிமன்றக் கட்டடத்தைத் தாண்டிய போதே வழமைக்கு மாறான இராணுவம் மற்றும் பொலிஸாரின் பிரசன்னத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

பஞ்சாப் வந்த பாகிஸ்தான் புறா… விஸ்வரூபம் பட பாணியில் உளவு?

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் மாவட்டத்தில், பிடிபட்ட புறாவின் இறகில் பாகிஸ்தான் மாவட்டத்தின் பெயர் முத்திரை மற்றும் உருது எழுத்துகள் பதிக்கப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஸ்வரூபம் சினிமா பாணியில், காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பினர் உளவு பார்க்க புறாவை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

புதன், 27 மே, 2015

சிறுமி சரண்யா பாலியல் வன்புணர்வினால் இறக்கவில்லை – மருத்துவர்களின் அறிவிப்பால் அதிர்ச்சி!

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரபலமான செய்திகளில் ஒன்று சரண்யா என்ற சிறுமியைக் குறித்தது. இந்த நாட்களில் எப்படி வித்தியா தலைப்புச் செய்தியோ அதே போல அந்த நாட்களில் சரண்யா. ஆனால் வித்தியா அளவிற்கு சரண்யாவின் மரணம் பரபரப்பான போராட்டங்களை, திடீர் கைதுகளை நிகழ்த்தவில்லை.

அவளும் கூட்டு பாலியல் வன்புணர்வின் மூலம் கொலை செய்யப்பட்டவள் என்றே சொல்லப்பட்டது. ஆனால் சரண்யாவின் குடும்பப் பின்னணியும், வறுமையும், வெறும் அப்பாவித்தனமான அவளின் உறவுகளும், வாழ்ந்த இடமும் அவளின் மரணத்துக்கான நீதிகோரலைத் தடுத்தன.

வித்தியா கொலையாளியை கைகழுவிய சுவிஸ் நாடு

மாணவி வித்தியாவை வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார், தமது நாட்டு பிரஜை இல்லையென சுவிஸ் தூதரகம் அறிவித்துள்ளது.

வித்தியாவின் கொலையாளிகள் முழுமை விபரம் அம்பலம்

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதன் மீதான வன்கொடுமை மற்றும் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருக்கும் நபர்களின் விபரங்கள்…..

1. பூபாலசிங்கம் இந்திரகுமார் – புங்குடுதீவு, பத்தாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 13.04.1976

2. பூபாலசிங்கம் உதயகுமார் – புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்தவர். பிறந்த திகதி 14.08.1981

செவ்வாய், 26 மே, 2015

ரஜினி படங்களுக்கு ரெட்?- விநியோகஸ்தர்கள் புது வியூகம்

நடிகர் ரஜினிகாந்த். | படம்: கே.பாக்கிய பிரகாஷ்.
'லிங்கா' படத்தின் பிரச்சினை இன்னும் தீராதக் காரணத்தால் ரஜினி படங்களுக்கு ரெட் போடுவதற்கான ஆலோசனையில் விநியோகஸ்தர்கள் இறங்கி இருக்கிறார்கள்.

டிசம்பர் 12, 2014 அன்று ரஜினி நடிப்பில் வெளியானது 'லிங்கா'. அத்திரைப்படம் மக்களிடையே வரவேற்பு பெறாமல் தோல்வியை தழுவியது. பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விநியோகஸ்தர்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

நடுரோட்டில் நடந்த நடிகர் ஜீவா படத்தின் ஷூட்டிங் – ஆம்புலன்சிற்கு வழிவிடாததால் இளைஞர் பலி

திருச்சியில் நடிகர் ஜீவா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் நடுரோட்டில் நடைபெற்றபோது ஆம்புலன்ஸிற்கு படக்குழு வழிவிடாத காரணத்தினால் விபத்தில் சிக்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தஞ்சை மாவட்டம் செங்கிபட்டி அருகே உள்ள பாளையபட்டியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் கடந்த 22 ஆம் தேதி மாலை மோட்டார் சைக்கிளில் தஞ்சாவூரில் இருந்து செங்கிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

திங்கள், 25 மே, 2015

அன்டன் பாலசிங்கம் இராணுவ சீருடை அணிந்ததில்லை காரணம்…..

விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அமரர் அன்டன் பாலசிங்கம் அவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் இராணுவ சீருடை அணிந்ததில்லை அதற்கான காரணம், பாலசிங்கம் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அங்கத்தவர் அல்ல என்பதே அதற்கான சரியான பதில்.
Share |
Image Hosted by ImageShack.us

புதன், 20 மே, 2015

மணமகளுக்கு திடீரென தாலி கட்ட முயன்ற சு.சுவாமி.. கையைத் தட்டி தடுத்த சந்திரலேகா!!

திருநெல்வேலியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகள் கழுத்தில் தாலி கட்ட முயன்ற சுப்பிரமணியன் சுவாமியை அருகில் இருந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா, கையைத் தட்டி தடுத்து நிறுத்தியதால் மணமகனிடம் தாலியை கொடுத்துவிட்டார் சுப்பிரமணியன் சுவாமி.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல