திங்கள், 15 ஜூன், 2015
ஞாயிறு, 14 ஜூன், 2015
பேனாவிற்கு பிரம்படி மாறுமா சவூதி அரேபியா?
அவனது பெயர் ரயிப் பதாவி. பதாவியின் பெயர் சர்வதேச அரசியலில் பேசுபொருளாக மாறியிருக்கிறது என்றால், அவன் மீதான பார்வைக் கோணங்கள் இதற்குக் காரணமாகும். இந்த மனிதன் இஸ்லாத்தை அவமதித்தான் என்பது முதற்கோணம். கருத்துச் சுதந்திரம் பேசி, சமயம் தொடர்பான கருத்தாடல்களை ஊக்குவித்தான் என்பது இரண்டாவது கோணம்.
Labels:
அரபு நாட்டு அராஜகங்கள்,
இஸ்லாம்,
கட்டுரைகள்,
வீரகேசரி
புலனாய்வுப் போரின் இரகசியங்கள் வெளிவருமா?
தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவை புதிய அரசாங்கம் குறிவைத்திருக்கிறது.
அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்கு, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திடம் கடந்த வாரம், அனுமதியைப் பெற்றிருக்கிறது.
அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்கு, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திடம் கடந்த வாரம், அனுமதியைப் பெற்றிருக்கிறது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
வீரகேசரி
அரசியலில் விசுவாசம் -ஓ. பன்னீர் செல்வம்
நம்பிக்கைத் துரோகம், ஏமாற்று, மோசடி என்பவை இன்றைய அரசியலில் அடிப்படை பாலர்பாடமாகி விட்டன. நம்பிக்கை மோசடியும், ஏமாற்றுதலும் மனிதனோடு பிறந்த இரட்டைகள் என்று சொல்லலாம். சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினால் நம்பிக்கைத் துரோகம் பற்றிய சம்பவங்கள் ஏராளமாகக் குவிந்துகிடக்கின்றன.
Labels:
இந்தியா,
கட்டுரைகள்,
தமிழ்நாடு,
வீரகேசரி
"காமுகன் கவர்ந்த பூவை கசங்காது காத்த மக்கள்"
"ஒவ்வொரு தாய்மார்கள் சார்பிலும் நான் இதை உங்களிடம் கேட்கின்றேன். இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மரணதண்டனை வழங்குங்கள். அதனை விடுத்து இவர்களைக் கைது செய்து, மீண்டும் பிணையில் வெளியில் விடுவதால் தான், இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்ந்து எமது நாட்டில் நடைபெற்ற வண்ணமே இருந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களினால் இந்நாட்டிலுள்ள தாய்மார்களுக்கு இனிமேலும், இவ்வாறு தங்கள் பெண்பிள்ளைகளுக்காக கண்ணீர் சிந்தும் நிலைமைகள் தொடராதிருக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குங்கள்.” என்று கண்ணீர் விட்டவாறு சிறுமியின் தாயார் தெரிவித்தார்.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்,
பாலியல்,
வீரகேசரி
சொந்த உறவுகளுக்குள் திருமணங்கள் பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்குமா? ...
காலங்காலமாக பார்த்தால் நம்மவர்கள் பலர் தமது குடும்ப சொந்தங்களில் இருக்கும் உறவினர்களை திருமணம் செய்யும் வழமை இருந்து வருகின்றது. இதனை பலரும் சமூக கலாசார ரீதியாக சிறந்தது என நினைத்து மகிழ்ந்தாலும் மருத்துவ ரீதியான கண்ணோட்டத்தில் பார்த்தால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருந்து வருகின்றது. எனவே, சமூகங்கள் குடும்பங்கள் உறவினர்களுக்குள் திருமணங்களை காலம் காலமாக ஏற்றுக்கொண்டு அதனை செய்து வரும்போது, எமது மருத்துவ ஆலோசனை ரீதியாக இவ்வாறு செய்ய வேண்டாம். இதனை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? நாம் சொல்ல வந்த கருத்துகளை சரியாக விளங்கிக் கொள்வார்களா ? என்ற பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆகையால் இந்த விடயம் குறித்து மக்கள் மத்தியில் சரியான கருத்துக்களை விளக்க வேண்டிய அவசியம் உள்ளது.
Labels:
கட்டுரைகள்,
கேள்வி - பதில்,
வீரகேசரி
உங்களுக்கும் இப்படி ஏற்படலாம்
அவளது கழுத்தின் குரல்வளை மிதப்பின் சற்றுக் கீழே ஒரு அடையாளம். பிறப்பு மச்சம் அல்ல. நெற்றியில் பொட்டு இட்ட பெண்ணின் கழுத்திலும் மற்றொரு பொட்டா என மயங்காதீர்கள். பல பெண்களின் வழக்கம்தானே இது என்கிறீர்களா?
Labels:
மருத்துவம்,
வீரகேசரி
பச்சை குத்திக் கொள்வதில் காட்டும் ஆர்வம் புற்றுநோய், எயிட்ஸூக்கு வழிவகுத்து விடக்கூடாது
எப்பொழுது மனிதன் நாகரிகத்தின்பால் தன்னுடைய நாட்டத்தினைக் காண்பிக்க ஆரம்பித்தானோ அக்கணமே பச்சை குத்துதல் என்னும் கலையும் வளர ஆரம்பித்துவிட்டதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் சான்று பகர்கின்றனர். பண்டைய காலத்தில், இறந்தவர்களின் தோல், மம்மிகளின் உதடுகள் போன்றவை பச்சை குத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்ற வரலாறு எண்ணற்றுக் கிடக்கின்றது. அந்த வகையில் பச்சை குத்துதலானது, உடலில் பச்சை வண்ணத்தில் ஊசி கொண்டு குத்தி பல்வேறு வடிவங்களை வரைந்து அழகுபடுத்திக் கொள்வது என சொல்லலாம். ஆனால், நவீன காலத்தில் உடலில் தோலின் கீழாக அழியாத மையினை உட்செலுத்துவதன் மூலம் அல்லது தோலின் நிறக்காரணிகளை மாற்றக்கூடிய பதார்த்தங்களால் எழுத்துக்களையும் உருவங்களையும் வரைந்து கொள்வது என கூறப்படுகின்றது.
Labels:
கட்டுரைகள்,
வீரகேசரி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







