வியாழன், 9 ஜூன், 2016

விண்டோஸ் டிபண்டர்

விண்டோஸ் இயக்க முறைமையில், அதன் இயக்கத்தினைப் பாதுகாக்கும் வகையில் தரப்பட்ட செயலியே 'விண்டோஸ் டிபண்டர்'. நம் கம்ப்யூட்டருக்குள், நமக்குத் தெரியாமல் நுழைந்து நம் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் புரோகிராம்களின் வருகையையும், செயல்பாட்டினையும் கண்காணிக்கும் புரோகிராம், விண்டோஸ் டிபண்டர். இந்த புரோகிராம், விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை, ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்துத் தரப்பட்டது.விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10ல், விண்டோஸ் டிபண்டர் செயலி, மால்வேர் புரோகிராம்களையும் தடுக்கும் வகையில் விரிவு படுத்தப்பட்டுத் தரப்பட்டது.

வாள்வெட்டுடன் தொடர்புபட்டவர்கள் குறித்து தகவல் தரக் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட தேவா, சன்னா, பிரகாஷ் ஆகியோர் தொடர்பாக தகவலறிந்தால் உடனடியாக தம்மை தொடர்புகொள்ளுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த தெரிவித்துள்ளார்.

புதன், 8 ஜூன், 2016

வெளிநாடு சென்ற எனது மகளை மீட்டுத் தாருங்கள்!

கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தானுக்குச் சென்ற எனது மகள் திரும்பி வரவுமில்லை. இப்போது எதுவித தொடர்புகளும் இல்லை. ஜோர்தானில் தடுத்து வைக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தனது மகளை எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என யுவதியின் தாய், அக்கறையுள்ள எல்லாத் தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செவ்வாய், 7 ஜூன், 2016

இது வீரப்பனின் கதை அல்ல... வீரப்பன் சொன்ன கதை...!

அது 1997 ம் ஆண்டு. ஒரு முறை சந்தனக் கடத்தல் வீரப்பன், தவறுதலாக கானுயிர் புகைப்படக்காரர்கள் குருபகர் மற்றும் செனானியையும், வங்காளப் பேராசிரியர் மைத்தியையும்அரசு உயரதிகாரிகள் என்று தவறுதலாக நினைத்து கடத்திவிடுகிறான். இரண்டு வாரங்கள் கழித்து இருவரையும் விடுவிக்கிறான். சில மாதங்கள் கழித்து, வீரப்பனுடன் இருந்த 14 நாட்கள் அனுபவங்களை ‘சுதா’ என்னும் கன்னட வார இதழில் தொடராக எழுதுகிறார்கள். பின், “Birds, Beasts Bandits 14 Days With Veerappan” என்ற தலைப்பில்  2011 ம் ஆண்டு புத்தகமாக வருகிறது.

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் புலிகளின் பிரதிநிதிகளால் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை முன்வைத்துப் பேச்சுக்களில் ஈடுபடுவதை இயக்கம் தவிர்த்துக்கொண்டது.

திங்கள், 6 ஜூன், 2016

அமெரிக்க நகரில் செல்பீ சிலை

அமெரிக்க நகரமொன்றில் செல்பீ சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. செல்பீ படப்பிடிக்கும் முயற்சிகளின்போது விபத்துக்குள்ளாகும் அபாயம் குறித்து அதிகாரிகள், நிபுணர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

ஞாயிறு, 5 ஜூன், 2016

கிராமத்து மீன் குழம்பு

கிராமப்புறங்களில் சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருப்பதற்கு, மண்சட்டிகள் தான் காரணம். ஆம், மண் பாத்திரங்களில் உணவை சமைத்து சாப்பிடும் போது, உணவின் சுவை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது நாம் கிராமப்பகுதியில் செய்யப்படும் மீன் குழம்பை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம். இந்த சமையலின் ஸ்பெஷலே மண்சட்டியில் சமைப்பது தான். எனவே உங்களுக்கு கிராமத்து மீன் குழம்பை சுவைக்க விருப்பம் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மண்சட்டியில் சமைத்து சுவையுங்கள்.

சனி, 4 ஜூன், 2016

புலம்பெயர் தமிழர்கள் சிலரால் தமக்கு உயிராபத்து- தமிழினியின் கணவர்

 தமிழினி, ஜெயகுமார் மகாதேவன்
விடுதலைப் புலிகளின் மகளிர் அணி முன்னாள் பொறுப்பாளரான காலஞ்சென்ற தமிழினியின் கணவர் ஜெயகுமார் மகாதேவன், தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழினியின் பார்வையில், கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு எல்.ரீ.ரீ.ஈ விரைவாகச் சரிந்தது 2

(பகுதி – 2)

கேணல் தமிழினி மார்ச் 2009ல், வன்னி கிழக்கு போர்முனையில் ஈடுபட்டிருந்த எல்லா அமைப்புகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்களும் சமூகமளித்திருந்த கடைசிக் கூட்டத்தை கையாண்டிருந்தார். அது ஒருகாலத்தில் வடக்கில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு வலயமாகக் கருதப்பட்ட புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு முகாமில் நடைபெற்றது, இந்தக் கூட்டம் இயக்கத்தின் மரபுவழி போராடும் திறன் உடனடி வீழ்ச்சி அடைந்திருப்பதை நன்கு வெளிப்படுத்தியது. தனது மூத்த சகாக்களை கலந்து கொள்ளும்படி அழைப்பனுப்பிய ஒரு இறுதி மாநாட்டில், பொட்டு அம்மான் ஒரு அதிசயத்தின் ஊடாகவே யுத்தகளத்தில் எல்.ரீ.ரீ.ஈ வெற்றியை அடைய முடியும் என்பதை ஏற்றுக்கொண்டார்.

தமிழினியின் பார்வையில், கிளிநொச்சியின் வீழ்ச்சிக்குப் பிறகு எல்.ரீ.ரீ.ஈ விரைவாகச் சரிந்தது 1

 image source: google   Col. Vithusha
(பகுதி - 1

சரணடையும் பொதுமக்களைச் சுட விதுஷா உத்தரவிட்டார்

மாலதி படைப்பிரிவின் தளபதி விதுஷா, கேணல் தமிழினி தன்னை நோக்கி நடந்து வருவதைக் கண்ட உடனேயே அழ ஆரம்பித்தார். இந்தச் சந்திக்கும் வாய்ப்பு கண்டி – யாழ்ப்பாணம் ஏ9 வீதிக்கு கிழக்கே எஞ்சியிருந்த எல்.ரீ.ரீ.ஈ யின் கடைசிக் கோட்டைகளில் ஒன்றான சுகண்டிபுரத்தில் இடம்பெற்றது. கேணல் தமிழினி, விதுஷாவை மேற்கோள் காட்டி அவள் தன்னிடம் தெரிவித்ததாகச் சொல்லியிருப்பது, இயக்கத்தின் நடவடிக்கைகளைப் பற்றிச் சிந்திக்கும்போது தனக்கு சங்கடமாக இருக்கிறது என்று. இராணுவத்திடம் சரணடைய விரும்புவோரை முங்காலுக்கு கீழே சுடும்படி உயர்மட்ட தலைமையிடம் இருந்து தனக்கு உத்தரவுகள் கிடைத்து வருவதாக விதுஷா வெளிப்படுத்தினாள். அந்த கட்டளைகளையிட்டு அவள் ஆத்திரமடைந்து இருந்தாலும் நிலமையைப் பற்றி சில அங்கத்தவர்களுக்கு உத்தரவு பிறப்பித்தாள். அவர்கள் அவளிடம் எப்படி தங்கள் சொந்தங்களைச் சுட முடியும், அதைவிட நாங்களே எங்களைச் சுட்டுவிடுவது சிறந்தது என்று சொன்னார்கள்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல