புதன், 20 மார்ச், 2013
பைல் எக்ஸ்டன்ஷன் என்பது என்ன?
கம்ப்யூட்டர் பைல் பெயர்களுடன், பைலின் தன்மை குறித்த கூடுதல் தகவல்களைத் தரும் வகையில் அமைக்கப்படுவதே பைல் எக்ஸ்டன்ஷன் பெயர் ஆகும். இவை ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் போது, பைலின் தன்மை மற்றும் வடிவமைப்பு குறித்து கூறுகளைக் காட்டும். இதனை அறிந்தே, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எந்த புரோகிராமில் இந்த பைலைத் திறப்பது என்பதனை அறிந்து உடன் திறக்கும். .txt என இருந்தால் அதனை நோட்பேடிலும், doc என இருந்தால் மைக்ரோசாப்ட் வேர்ட் புரோகிராமிலும், exe என இருந்தால் அதனை அப்ளிகேஷன் புரோகிராம் என அறிந்து அந்த வகையிலும் திறக்கும்.
Labels:
கணணி மையம் (Files)
கார்ட்டூன் போட்டோ
கதை மாந்தர்களைச் சித்திரங்களாக வைத்து, சிறுவர்களுக்குக் கதைகள் வந்தது ஒரு காலம். பின்னர், அனைத்து வகைக் கதைகளுமே சித்திரங்களுடன் வந்தன. அவை பேசுவதை கட்டங்கள், நீர்க்குமிழிகள் என அமைத்து அவற்றில் காட்டப்பட்டன. இவற்றைப் பார்க்கையில், படிக்கையில், நாமும், நம் போட்டோக்களில், நாம் விரும்பும் வாசகத்தை இதே போல நீர்க்குமிழிகளில் அமைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என எண்ணலாம்.
Labels:
கணணி மையம் (Images),
கணணி மையம் (Online)
பயர்பாக்ஸ் பிரவுசரில் அதிகபட்ச பாதுகாப்பு
பிரவுசர் வழியே இணையம் தேடுகையில், நாம் செல்லும் தடங்கள் அனைத்தும் பதியப்படுகின்றன. அவை நம் கம்ப்யூட்டரில், நமக்கு இணைய சேவை வழங்கும் நிறுவன சர்வர்களில் இருப்ப தால், மற்றவர்களும் அதனைக் காணும் வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுத்து நம் இணையத் தேடல்களை நாம் மட்டுமே கொள்ளும் வகையில் அந்தரங்கமாக இருக்கவே பல வழிகளைப் பிரவுசர்கள் தருகின்றன. பிரைவேட் பிரவுசிங், இன் காக்னிடோ, டோன்ட் ட்ரேக் மி என இந்த வழிகள் அழைக்கப்படுகின்றன. இருந்தாலும் நமக்கு நம் வழிகளை யாரும் அறிந்து கொள்ளாமல் இருக்க இன்னும் சில பாதுகாப்பு வழிகளை அமைக்கலாமே என்று தோன்றும்.
Labels:
கணணி மையம் (Internet)
வேர்ட் டிப்ஸ்
இப்படியும் டேபிள்
வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்க என்ன செய்கிறீர்கள்? டேபிள் மெனு சென்று இன்ஸர்ட் டேபிள் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து பின் தகவல்களை அதில் டைப் செய்திட வேண்டும்.
வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்க என்ன செய்கிறீர்கள்? டேபிள் மெனு சென்று இன்ஸர்ட் டேபிள் கிளிக் செய்து பின் கிடைக்கும் விண்டோவில் எத்தனை நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசை என்பதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து பின் தகவல்களை அதில் டைப் செய்திட வேண்டும்.
Labels:
கணணி மையம் (Microsoft Word)
ஆபீஸ் தொகுப்புகளில் ஆட்டோ ரெகவர்
எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், மின்சக்தி இல்லாமல், கம்ப்யூட்டர் முடங்கும் காலத்தில், அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடைவெளியை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம்.
விண்டோஸ் 8: சந்தேகத் தளிர்களும் விளக்கங்களும்
முற்றிலும் மாறுபட்ட இயக்கத்துடன் வந்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரிடையே கொஞ்சம் கொஞ்சமாக இடம் பெற்று வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டமே போதும் என ஒதுங்கியவர்களும், இதன் பயன்பாடுகளில் பலவற்றை விரும்பி, முழுமையாக இதற்கு மாறி வருகின்றனர். பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து முழுமையாக அறிந்த பின்னரே, அதற்கு மாறுவது குறித்துச் சிந்திக்க வேண்டும் என எண்ணி செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கான சில தகவல் துளிகள் இங்கு தரப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Windows 8 Tips)
போட்டோ மிக்ஸ்
போட்டோ எடுத்து ரசிப்பது என்பது இன்றைக்கு ஒரு குழந்தை விளையாட்டாக மாறிவிட்டது. சிறுவர்கள் கூட மிக அழகாக போட்டோ எடுக்கும் வகையில், திறன் கொண்ட எளிய டிஜிட்டல் சாதனங்கள் தற்போது சந்தையில் கிடைக்கின்றன. இவற்றுடன், அதே அளவிற்குத் திறன் கொண்ட கேமராக்கள் இணைந்த மொபைல் போன்களும் பெருகி உள்ளன. எனவே போட்டோ எடுப்பது என்பது அவ்வளவாக செலவில்லாத ஒரு பொழுது போக்காக மாறிவிட்டது. இவற்றுடன், இன்னும் நம் கற்பனைக்குத் தீனி போடும் வகையில், இந்த போட்டோக்களை மாற்றி அமைக்க, மெருகூட்ட பல அப்ளிகேஷன் புரோகிராம் கள், இணையத்தில் இலவசமாகக் கிடைக் கின்றன. அவற்றில் ஒன்றான போட்டோ மிக்ஸ் (FotoMix) என்பது குறித்து இங்கு காணலாம்.
Labels:
கணணி மையம் (Softwares)
குரோம் பிரவுசர் ட்ரிக்ஸ்
சிறிது சிறிதாக, குரோம் பிரவுசர் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. முதலில் சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் விருப்பமாக இருந்த இந்த பிரவுசர் தற்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்தும் பிரவுசராக இடம் பிடித்து வருகிறது. லினக்ஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும் பதிப்புகளும் கிடைக்கின்றன. மொபைல் சாதனங்களிலும் இது தொடர்ந்து இடம் பெறும் பிரவுசராக உருவெடுத்துள்ளது. இதனை நாம் விரும்பும் வகையில் வசத்திற்குக் கொண்டு வர கீழே சில வழிகள் தரப்படுகின்றன.
Labels:
கணணி மையம் (Google)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



