செல்போன்களின் ஒரே பிரச்சினை அவற்றை ஞாபகமாக `சார்ஜ்' செய்வதுதான். தொடர் பயணம் மேற்கொள்ளும்போதும், மின் இணைப்பு இல்லாத வெளியிடங்களுக்குச் சுற்றுலா செல்லும்போதும் `சார்ஜ்' இறங்கி செல்போன் தற்காலிகமாக உயிரிழந்துவிட்டால் சிரமம்.
இந்தப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு சீனாவைச் சேர்ந்த ஒரு வடிவமைப்பாளர், குளிர்பானத்தில் `சார்ஜ்' ஆகிக்கொள்ளும் செல்போனை வடிவமைத்திருக்கிறார்.
சிறிய `பென் டார்ச்' போல உள்ள இந்த செல்போனின் பின்புறத்தில் இனிப்பூட்டிய ஏதாவது ஒரு குளிர்பானத்தைக் கொஞ்சம் ஊற்றினால் போதும். உடனே செல்போன் `உயிர்' பெற்றுவிடும்.
இந்த செல்போனை உருவாக்கிய வடிவமைப்பாளர் டெய்சி ஜெங்க், ``ஒரு தனியார் செல்போன் நிறுவனத்துக்காக இயற்கைக்கு உகந்த (ஈகோ பிரெண்ட்லி) இந்த செல்போனை உருவாக்கியிருக்கிறேன். நான் மேற்கொண்ட ஆய்வில், செல்போனுக்கான மின் ஆதாரமாக பேட்டரியைப் பயன்படுத்துவது மிகவும் செலவுமிக்கது, அவற்றை உருவாக்குவதற்கு மிகுந்த மூல ஆதாரம் தேவைப்படுகிறது என்று கண்டுபிடித்தேன். பேட்டரி தயாரிப்பு, காலாவதியான பேட்டரியை அழிப்பது ஆகியவற்றால் மிகுந்த சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவேதான் இயற்கையான பேட்டரியாக குளிர்பானத்தில் செயல்படும் செல்போனை உருவாக்கினேன்'' என்று பெருமையோடு விளக்கிக் கூறுகிறார்.
சனி, 30 ஜனவரி, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக