புதன், 10 பிப்ரவரி, 2010

11 மனைவிகள் 21 குழந்தைகளுக்கு சொந்தக்காரன்

அமெரிக்காவில் 29 வயது வாலிபர் ஒருவர் 11 மனைவிகளின் மூலம் 21 குழந்தைகள் பெற்று அதிர வைத்துள்ளார்.இந்தவாலிபர் (இல்லை கில்லாடி ) டெஸ்மாண்ட் ஹாட்செட் (Desmond Hatchett). இவருக்கு இரண்டு முறை ஒரே ஆண்டில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. இவரது மூத்த குழந்தைக்கு 11 வயதாகிறது. கடைசி குழந்தைக்கு 11 மாதம் மட்டுமே ஆகிறது. குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருவதால் இவரால் அனைத்து குழந்தைகளையும் பராமரிக்க முடியவில்லை.

இதையடுத்து அவரது மனைவிகளில் சிலர் நீதிமன்றத்தில் சென்று வழக்கு தொடர்ந்தனர். அதன் பின்னர் தான் இவருக்கு 21 குழந்தைகள் இருக்கும் செய்தி வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

நான் சாதனை எதையும் படைக்க விரும்பவில்லை,இனி குழந்தை பெற்று கொள்ள மாட்டேன்,நான் வேண்டுமென்று இதை செய்யவில்லை,எனது ஒவ்வொரு மனைவிக்கும் எனக்கு மேலும் சில குழந்தைகள் இருப்பது தெரியும்.எனது 21 குழந்தைகளின் பெயர், வயது மற்றும் பிறந்தநாள் ஆகியவற்றை என்னால் மறக்காமல் சொல்ல முடியும் என்கிறார் இந்த சாதனைக் கில்லாடி............

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல