வியாழன், 4 பிப்ரவரி, 2010

இலக்கு என்பது ஒருவனது முடிவல்ல..

வெற்றி தான் வாழ்க்கை என்றால் மரணத்திடம் நாம் தோற்பது ஏன்...?
தோல்வி தான் வாழ்க்கை என்றால் மூடிய இமைகள் தினம் திறப்பது ஏன்...?


பெரும்பாலானவற்றைப் போல வெற்றியும், தோல்வியும் மனிதனால் உருவாக்கப் பட்ட ஒரு விடயமே. இந்த இரண்டை வைத்துக் கொண்டு ஒருவனின் வாழ்க்கையை முடி வெடுக்க முடியாது.
வாழ்க்கைப் பாதைகளில் நாம் கடந்து செல்லும் சிறிய மேடு, பள்ளங்களே வெற்றியும், தோல்வியும். இது கொஞ்சம் பழமையாக இருந்தாலும் இது தான் தன்னம்பிக்கையின் உண்மை.

இலக்கு என்பது ஒருவனுக்கு முடிவல்ல.
அது எண்ணிக்கையற்றது. ஒரு இலக்கை அடைந்ததும் அதை விட சிறந்த இன்னொரு இலக்கு வரும். அதை நோக்கி புறப்பட வேண்டுமே தவிர என்னுடைய இலக்கு முடிவடைந்து விட்டது என்று நிலை கொள்வதல்ல.

வெற்றியடைந்த குதிரைக்கு தெரியும் அது ஏன் பந்தயத்தில் வெற்றி பெற்றது என்று.அதன் மீது சாட்டைகளால் ஏற்படும் வலிகளே அதற்கு காரணம். ஆம், வாழ்க்கை ஒரு பந்தயம், அதில் நாம் குதிரைகள், இறைவன் தான் நம்மை ஓட்டும் மேய்ப்பாளன். நம் வாழ்க்கையில் சாட்டை அடிகளால் ஏற்படும் வலிகள் அனைத்தும் நாம் வெற்றியடையவே.....! வாழ்க்கையில் தடுமாறிக் கொண்டே இருப் பதை விட ஒருறையாவது விழுந்து எழுவதே சிறந்தது. எழாமல் விழுந்த இடத்திலே முடங்கி கிடந்து சாவது என்பது தான் கோழைத் தனம்.

ஒருவன் படித்தவன்.. சமூகத்தின் மீது மிகுந்த அக்கரை கொண்டவன். நண்பர்களுடன் உலக விடயங்களைப் பற்றி எப்போதும் அலசி கொண்டிருப்பான் அவன் ஒரு பெண்ணை காதலித்து வந்தான். அந்த பெண்ணும் இவனை காதலித்து வந்தாள்.

இந்த விடயம் அறிந்த அவளது பெற்றோர் சில வருடங்களுக்கு முன்பு திடீர் என்று அவளுக்கு திருமணம் நிச்சயித்துவிட்டார்கள். இதனால் அவனுக்கும் அவளுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டது .

என்னை அவள் ஏமாற்றி விட்டாள் என கவலைப்பட்டுக் கொண்டேபலரிடமும் கூறினான்.

அவனுக்கு ஆறுதலாக, "விடுடா, எல்லாம் நன்மைக்குனு நினைச்சுக்கோ...!, ஒழுங்கா ஒரு நல்ல வேலைய தேடி, வாழ்க்கையில முன்னேறப் பாருடா' என நண்பர்கள் அவனுக்கு ஊக்கம் கொடுத்தனர் .

சில நாட்களுக்கு பிறகு, அவளுடைய திருமண நாள் அன்று , அவன் தொலைபேசியில், "அழுது கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்' என்றானாம் நண்பர்களிடம் .

"டேய் முட்டாள், என்ன காரியம்டா பண்ணபோற, பைத்தியக்காரா...." என நண்பர்கள் திட்டி ஒரு வழியாக பேசி அவனை சமாதானம் செய்து விட்டனர்.

நாளடைவில் அவன் ஒரு கணிப்பொறியியலாளனாகி, வீடு, பங்களா, கார் என அவன் நிலையே தலைகீழாக மாறி விட்டது இன்று தற்கொலை என்பது ஒரு சாதாரண விடயம் ஆகிவிட்டது.

ஆம், பரீட்சையில் தோல்வி அடைந்தால் தற்கொலை, காதலில் தோல்வி அடைந்தால் தற்கொலை, வியாபாரத்தில் தோல்வி அடைந் தால் தற்கொலை என்று தோல்வியை ஒரு முடிவாக ஏற்று வாழ்க்கையை முடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி கொண்டே இருக்கிறது இந்த உலகத்தில் வாழும் மனிதனுக்கு வேறு ஒரு உயிரை கொடுக்க உரிமை இருக்கே தவிர, அவனுடைய உயிரை எடுக்க அவனுக்கே உரிமை இல்லை.

ஒரு பழைய புதுமொழி, "வெற்றி என்பது உங்கள் நிழல், அதை பிடிக்க முற்பட்டவனுக்கு தோல்வியே வரும், அந்த நிழலை விட்டுவிட்டு உன்னுடைய தனிவழியில் தன்னடக்கத்தோடு சென்று கொண்டே இருந்தால் அந்த வெற்றி எப்போதும் உன்னுடனே வரும்.'
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல