சனி, 6 பிப்ரவரி, 2010

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் திருமணமாவதற்கு 3 மாதத்திற்கு முன்பிருந்தாவது முறையான அழகுபராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மணப்பெண்ணின் முக அழகானது வீடியோ, போட்டோவில் வசீகரமானதாகத் தெரியும். அரைதேக்கரண்டி எலுமிச்சபழ சாறுடன் சிறிது பால் சேர்த்து அத்துடன் கிளிசரின் சில துளிகள் விட்டு ஒன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு இதை எடுத்து இரவு படுப்பதற்கு முன்பு முகத்தில் நன்றாகப் பூசிக்கொள்ளுங்கள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் தவறாமல்
  செய்து வந்தால் உங்களது முகம் அபாரமாக பளிச்சிடும்.


கனிந்த தக்காளியில் சாறு எடுத்து காலை பகலில் முகம் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் தினமும் தொடர்ந்து செய்துவர முகம் சிறிது சிறிதாக நல்ல நிறத்தை அடைகிறது..

வெள்ளரிக்காயை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து முகம் முழுவதும் தடவி 25 நிமிடங்கள் உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினாலும் முகம் பளபளப்பு பெறும்..

பாதாமை அரைத்து பாலேட்டுடன் சேர்த்து சில துளிகள் பன்னீர் விட்டு முகத்தில் தடவிக்கொண்டு அரைமணி நேரம் உலரவிட்டு கழுவினால் முகம் பளிச் என்று ஆகிவிடும். தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் என்றால் என்னவென்று கேட்பீர்கள். தயிர்கூட மிகச்சிறந்த அழகு சாதனம்தான் முகத்தில் தயிரை தடவி வர உங்கள் முகம் இளமைப் பொலிவுடன் திகழும்..

முகத்திற்கு கிரீம் லோஷன், மாய்ஸரைஸர் என்று மாற்றி மாற்றி கவனத்துடன் ஒப்பனை செய்து கொள்ளும் நாம் கழுத்தை கவனிப்பதில்லை. நன்றாக உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். முகம் பளிச் என்று இருக்கும் கழுத்து சம்மந்தமில்லாததுபோல கறுப்பாக இருக்கும். முகத்திற்கு எடுத்துக் கொள்ளும் கவனத்தை கழுத்திற்கும் எடுத்துக்கொள்வது நல்லது..

சில பெண்கள் வித விதமான உடையணிந்து முகத்தை ஒப்பனை செய்துகொண்டாலும் கைவிரல்களைப் பார்த்தால் தடிமனாகவும், சொர சொரவென்றும் பார்ப்பதற்கே விகாரமாக இருக்கும். இதற்கு காரணம் என்ன? அவர்கள் கைவிரல்களை சரியாக பராமரிக்காததுதான். சரிவர பராமரித்து அழகூட்டப்பட்ட விரல்களே உங்கள் அழகிற்கு மேலும் மெருகூட்டக்கூடியவை. வீட்டுவேலைகளின் போது உதாரணமாக பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தலின் போது கைகளில் ரப்பர் உறைகளைப் போட்டுக்கொள்வது அவசியம். உறைகளைப் பயன்படுத்துவதற்கு முன் ஏதாவது ஓரு ஹாண்ட் க்ரீம் தடவி கொள்ளுங்கள். .

நகங்கள் மிகவும் மென்மையாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்­ர் எடுத்து அதில் உப்பு சிறிதளவு போட்டு அதில் விரல் நகங்கள் படுமாறு சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வர நகங்கள் உறுதி ஆகும். கைவிரல்கள் உலர்ந்து வெடிப்புகள் வராமலிருக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது கிரீம் அல்லது தேங்காய் எண்ணெயை கைகளில் பரவலாகத் தடவி தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும்..

உள்ளங்கைகளும், விரல்களும் மிருதுவாக இருக்க தயிரைத் தடவித் தேய்த்துக் கொள்வதாலும் விரல்கள் மென்மைப்படும். எல்லாவித பேஸ் பேக்குகளுமே கைகளுக்கு பயன்படுத்த ஏற்றவை..

கடைகளில் விற்கும் ஹாண்ட் கிரீம்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் வீட்டிலேயே கிரீம் தயாரித்துக் கொள்ளலாம். அரை அவுன்ஸ் கிளிஸரினுடன் அரை அவுன்ஸ் பன்னீர் சேர்த்து ஹாண்ட் கிரீம் தயாரிக்கலாம். அல்லது கிளிஸரினுடன் தேன், எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் ஹாண்ட் கிரீம் தாயாரிக்கலாம்..

நகங்களில் அவ்வப்போது ஆலிவ் எண்ணெய் சிறிது எடுத்து மஸாஜ் செய்து கொள்வதால் நகங்கள் பலப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது க்ரீம் அல்லது ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொண்டு கைவிரல்களை உருவி உருவித் தேய்த்து மஸாஜ் செய்து கொள்ள வேண்டும். விரல்களை மஸாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும். நகங்கள் உறுதியில்லாமல் அவ்வப்போது உடைந்தாலோ அல்லது தெறித்து விட்டாலோ உடம்பில் போதுமான அளவு இரும்புச்சத்து அல்லது கால்சியம் சத்து இல்லை எனத்தெரிந்து கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு நகங்கள் உறுதியாக இருக்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல