சனி, 6 பிப்ரவரி, 2010

மாதவிடாய் காலத்தில்

வயதுக்கு வந்த அதிக பெண்கள் மிகவும் அவதி படுவது அந்த 5 நாட்களில் 3 நாட்கள் அதிகமான வயிற்று வலி. இந்த வலி வருவது இயல்பு தான், இதுக்குனு நாம் மருத்துவரை அனுகி மாத்திரைகள் எடுத்தால் அதன் பின் விளைவுகள் அதிகமாக இருக்கும். ஆகையல் முடிந்த வரை வீட்டிலே இதுக்குனு கைமருந்து எடுத்துக்கொண்டால் பின்விளைவுகள் எதுவும் வராது.

சிறிது வெந்தயம் அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து மறுநாள் வெந்தய தண்ணீரை 3 வேளை தொடர்ந்து குடித்தால் "அந்த நாள் வயிற்று வலி" நன்றாக குறைந்து விடும். உடல் உஷ்ணம் உள்ளவற்களும் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும். .

அந்த 5 நாட்களில் காலை வெறும் வயிற்றில் கடுக்காய்த்தூள் 1 ஸ்பூன், மாந்துவர்ப் பொடி 1 ஸ்பூன், சீரகப் பொடி 1 ஸ்பூன் வெந்தயப் பொடி 1ஸ்பூன் அனைத்தையும் தேனில் கலந்து சாப்பிடவும். இரவும் சாப்பிடவும் இதனால் மாதவிடாய் கோளாறுகள், உடலின் சூடு, வயிற்றுபுண், கர்ப்பப்பை புண் போன்றவை நீங்கும். இன்னும் மாசம் தோறும் வயிறு வலியில் அவதிபடுபவர்கள் வயிற்றுவலி நீங்கும். உடல் அசதி நீங்கும், உடல் பலம் பெரும்,இடுப்பு வலி குறையும். .

இந்த பொடியினை சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் கழித்து ஒரு ஆப்பிள், ஒரு மாதுளை சாப்பிடவும் இரவும் சாப்பிடவும். இவ்வாளு செய்தால் அந்த நாட்களில் இழந்த சத்தைத் திரும்பப் பெருவீர்கள். மாதவிலக்கு நேரங்களில் நாப்கினால் ஈரம் உள்ள உணர்வுகள் அதிகமாக இருக்கும், சில பெண்களுக்கு வெள்ளை போக்கும் இருக்கும் இந்த நேரங்களில் கிருமிகள் வர வாய்ப்புகள் அதிகம். இந்த நேரங்களில் பெண்கள் தங்கள் உடலை மிகவும் சுத்தமாக வைக்கவும். அதுக்கு அந்த நாட்களில் உள்ளாடைகளை சூடு நீரில் டெட்டால் போட்டு அலசி வெயிலில் காய போடவும்..

இரவு படுக்கும் முன்பு அந்த இடங்களை நன்றாக மிதமான சூடு நீரில் உப்பு கலந்து அலசிவிடவும். அந்த நாட்களில் குளிக்கும் பொழுது மறைவான இடங்களில் மஞ்சள்பூசி குளிக்கவும். சிலர் நாப்கினுக்கு பதிலாக துணிகளை பயன்படுத்துவார்கள் அவர்கள் கட்டாயம் துணிகளை வெந்நீரில் ஊற வைத்து கிருமி நாசி சோப்பு போட்டு நன்றாக அலசி வெயிலில் காயவைத்து பின்பு போடவும். ஓவ்வொரு முறையும் இப்படி தான் செய்யனும். 3 மாதங்களுக்கு ஒரு முறை துணியினை மாற்றவும். மாதவிலக்கு முடிந்த பின்பு 2 அல்லது 3 நாட்களுக்கு உடலுக்கு மஞ்சள்,வேப்பிலை(கொழுந்து)க், குப்பமேனி இலை இவைகளை அரைத்து உடலில் பூசி 10 நிமிடம் கழித்து குளித்துவிடவும். அந்த நாட்களில் செய்யவேண்டியவைகள் ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது. அதிக கோபம் மனதில் தோன்றும் வெறுப்பு வரும் அதனை குறைத்துக்கொள்ளவும். மாதவிடாய் வரும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும். 2 வேளை குளிக்கவும். காட்டன் உடைகளை அணியவும். Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல