ஞாயிறு, 28 மார்ச், 2010

"சிதம்பர ரகசியம்" என்கிறார்களே அதன் விளக்கம் என்ன?

நம்மில் பலர் "இது என்ன பெரிய சிதம்பர ரகசியமோ, ஏன் சொல்லாமல் மூடி மறைக்கிறாய்" என்று சொல்லக் கேள்விப்பட்டிருப்போம். சரி, அது என்ன அந்த சிதம்பர ரகசியம் என்று பலரிடமும் விசாரித்துப் பார்த்தேன். எவரும் அதற்கு சரியான விளக்கம் கொடுக்கவில்லை. "இதெல்லாம் யாருக்கு தெரியும்" என்பதுதான் அவர்களின் பதிலாக இருந்தது. நானும் விடாமல் தேடியதில் கிடைத்த விளக்கங்கள் தான் இவை:

நந்தனார் கோயிலுக்குள் புகுந்ததை விரும்பாத தீட்சிதர்கள் அவரை எரித்து அந்த உண்மையை ஊருக்கு மறைத்த விஷயம்தான் 'சிதம்பர ரகசியம்'. அதற்கு ஆதாரமாக: சிதம்பரம் கோவிலில் இன்றும் ஒரு வாசல் (நந்தனார் நுழைந்ததாக கருதப்படும் வாசல்) நிரந்தரமாக பூட்டியிருக்கும்.

அதே வேளை இன்னுமொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது

திருஞான சம்பந்தரும், அப்பரும் சம காலத்திய சிவனடியார்கள். அவர்களுக்குள் சில தத்துவ கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒரு முறை, திருஞான சம்பந்தர் தீட்சிதர்களுடன் சேர்ந்து கொண்டு அப்பரை சிதம்பரம் கோவிலுக்கு விவாதத்திற்கு (ஒரு சதி திட்டத்துடன்) அழைத்தார். அப்பரை கோவிலுக்குள் வைத்து அக்னி பகவானுக்கு அளி(ழி)த்து விட்டு,வெளியே வந்து மக்களிடம், 'அப்பரை இறைவன் வந்து கூட அழைத்து சென்று விட்டார்' என்று கூறி விட்டார்கள். அதுதான் இந்த 'சிதம்பர ரகசியம்' எனப்படுகிறது.

இவற்றில் எது உண்மை, எது பொய் என்பது அந்த‌ எம்பெருமானுக்கே வெளிச்ச‌ம்!!!
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல