திங்கள், 22 மார்ச், 2010

சைனஸ் பிரச்சினை தீர மூக்கு வழியாக கயிறை விட்டு வாய்வழி எடுக்கும் பொலிஸ்

சைனஸ் என்கின்ற நோயை குணமாக்கு வதற்காக மூக்கு வழியான நுழைக்கும் கயிற்றை வாய்வழியாக எடுக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வசிக்கும் விஜயராகவன்(வயது 40) என்ற பொலிஸ் அதிகாரி இவ்வாறு நோயை குணப்படுத்திக் கொண்டிருப்பவராவார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் பணிபுரியும் இவர், கடந்த சில காலமாக சைனஸ் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு இடங்களில் பல சிகிச்சைகளைப் பெற்றும் பலன் கிடைக்காமல். வேதனையடைந்த இவர், மூக்கு வழியாக கயிறை விட்டு வாய்வழியாக தொடர்ந்து 10 நிமிடம் எடுப்பதன் மூலம் சைனஸ் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என நம்ப ஆரம்பித்தார்.

இதன் படி கடந்த ஓராண்டுக்கு முன்பு இப்பயிற்சியை ஆரம்பித்தார் விஜயராகவன். தினமும் காலை எழுந்தவுடன் 10 நிமிடம் கயிறை மூக்கின் 2 துவாரம் வழியாக விட்டு, வாய்வழியாக எடுக்கிறார்.

இதுகுறித்து விஜயராகவன் கூறுகையில், என்னுடைய சைனஸ் பிரச்சினையை தீர்க்க பல்வேறு புத்தகங்களை படித்து இந்த முறையை கண்டுபிடித்தேன். இது நானாக மேற்கொள்ளும் முயற்சி. இதற்காக தாமரை தண்டுகளை ஒரு வாரம் காய வைத்தபின்பு, தண்ணீரில் ஊற வைப்பேன். அதிலிருந்து நார்களை சேகரித்து கயிறு திரித்து, தினமும் மூக்கு துவாரம் வழியாக விடுவேன். ஆரம்பத்தில் இரத்தம் வந்தது. பின்னர், இரத்தம் வருவது தானாக நின்றது. இந்த சிகிச்சை முறை மூலம் அழுக்கு படிந்த நீர் வெளியேறி விடுவதால் உடலும், முகமும் பொலி வுடன் காணப்படுகிறது. இப்போது சைனஸ் தொல்லையும் இல்லை' என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை நிபுணர் சரவண முத்து கூறுகையில், நூலை போன்ற எதையும் மூக்கு வழியாக உள்ளேவிட்டு வாய் வழியாக எடுத்து விடலாம். ஆனால், சைனஸ் அறைக்குள் இருக்கும் சளி இதுபோன்று கயிறை விட்டு எடுப்பதால் கண்டிப்பாக வெளியேறாது. மேலும் கயிறுபோன்ற கடினமான பொருட்களை மூக்குக்குள் நுழைப்பதால் தசை பாதிக்கப் பட்டு, பிற்காலத்தில் மூக்கில் இரத்தம் வருதல், அதிகமாக சளி தேங்குதல், மூக்கு தண்டுவடத்தில் வளைவுகள் ஏற்படும்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல