தாமி மெலேஹன் (Tamie Melehan 29 வயது) என்ற மேற் படி பெண், தனது வீட்டில் வைத்து தனது காதலரான டேவிட் வோஹனை (David Vaughan 30 வயது) 16 தடவைகள் கத்தியால் குத்தியுள்ளார்.
இதனையடுத்து அவர் தனது நண்பர் ஒருவருக்கு கையடக்க தொலைபேசி மூலம் அனுப்பி வைத்த செய்தியில், ““நான் எனது காதலரின் மாமிசத்தை உண்ண முடியுமா?
அது சுவையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
நீயும் என்னுடன் இணைந்து உண்ண விரும்பினால் போதிய மாமிசம் இருக்கிறது. இது வேடிக் கையல்ல. உண்மையிலேயே சுவையான இறைச்சி'' என குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து அச்செய்தியில், தனது காதலரின் உடலை அகற்ற உதவுமாறு நண்பரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
பின்னர் தனது தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ““நான் அவனது (டேவிட் வோஹன்) குரல் வளையை வெட்டு வதற்கு முன் உங்களால் வர முடியுமா'' என்று கேட்டுள்ளார்.
தாமி மெலேஹ னின் தாயார் லொ ரேட்டா வாட்ஸ் சம்பவ இடத்திற்கு வந்த போது, டேவிட் வோஹன் கழுத்து வெட்டப் பட்டு இரத்த வெள்ளமாக இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
தாமி மெலே ஹன் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக