செவ்வாய், 9 மார்ச், 2010

அழகு டிப்ஸ்

நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.
அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும்.

பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேகவைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.
இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென் மையானதாக மாறிவிடும்.

ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சர்க்கரை (சீனி) கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும்.

காலில் பித்த வெடிப்பா?
கவலையே வேண்டாம்! பப்பாளிகாயின் பாலை எடுத்து அதில் தேய்க்கவும். சில நாட்களிலேயே பாதவெடிப்பு காணாமல் போய்விடும்.

மெல்லிடை வேண்டுமா?
இதற்கும் பப்பாளி பெஸ்ட் சாய்ஸ் தான்! உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர நீங்களும் ஆகலாம் ஸ்லிம்!

பொடுகுத் தொல்லையா?
தேங்காய் பால் 1/2 கப், எலுமிச்சைச் சாறு 4 தேக்கரண்டி, வெந்தயம் சிறிதளவு ஊறவைத்து அரைத்து ன்றையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வந்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கூந்தல் நுனி வெடிக்காமல் நீளமாக வளரும்.

அருகம்புல்லின்சாரைத் தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி ஆறவைத்துத் தலையில் தேய்த்து வந்தால் தலையில் அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக்கும்.

வெள்ளை மிளகு 4 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்து தடவி அரை மணி நேரம் ஊறவிட்டு குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

சின்ன வெங்காயத்தைத் தோல் நீக்கி அரைத்துத் தலையில் தடவி அரைமணி நேரம் கழித்துக் குளித்தால் நல்லது.

வசம்பை நன்கு தட்டி நல்லெண்ணெயில் நன்றாக கருகும் வரை கொதிக்க வைத்து அதை வடிகட்டித் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் பூசி வந்தால் முடி உதிர்வது நீங்கும்.

பசலைக் கீரையை அரைத்துத் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்குவதுடன் கண்டி ஷனராகவும் இருக்கும். இதில் ஒன்றை பயன் படுத்திப் பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்த லைப் பெறுங்கள். நீங்களும் அழகுடன் திகழ்வீர்கள்.

பட்டுப்போன்ற கூந்தலுக்கு செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம்.

இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினம் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கும் இது உதவுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல