செவ்வாய், 9 மார்ச், 2010

இள நரையா......?

தலையில் நீளமான முடி இருக்க வேண்டும் என்று ஒரு சாரார் விரும்பினாலும், முடி நீளமோ குட்டையோ, அது கருகருவென இருக்க வேண்டும் என்பதே அனைவன் விருப்பமாக இருக்கும். கருகரு முடியை, இளமையின் அளவுகோலாக கருதுவதும், இதற்கு ஒரு காரணம். ஆனால், இன்று பலருக்கும் இளம்வயதிலேயே முடி நரைக்கும் பிரச்சினை ஏற்படுகிறது இதற்கு, பரம்பரை, இரசாயன ஹெயர்டைகள் பயன்படுத்துவது, மனஅழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்கள் உள்ளன. இதை போக்க, இதோ சில டிப்ஸ்கள்...

* முதலில் தலைடியை நன்கு பராமரிக்க வேண்டும்.
உணவில் சத்துள்ள கீரைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
விற்றமின் பி12, விற்றமின் இ, இரும்புச்சத்து ஆகியவை அதிகளவில் காணப்படும், இறைச்சி, முட்டை, பால், மற்றும் பாற் பொருட்கள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

* தலை முடிக்கு பிளீச்சிங் போன்ற இரசாயன சிகிச்சை அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

* நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சிகைக்காய் ஆகியவற்றை சம அளவில் அரைத்து, அதை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம்.

* ஏற்கெனவே நரை முடி ஏற்பட்டவர்கள், அதை மறைக்க, ஹென்னா மற்றும் நெல்லிக்காய்ப் பவுடர்களை நான்கிற்கு ஒன்று என்ற வீதத்தில் கலந்து, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட டைகளை பயன்படுத்தலாம்.

* கறிவேப்பிலையை, தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது, நரைமுடி ஏற்படுவதை தவிர்க்க உதவும். கறிவேப்பிலை மற்றும் புதினா ஆகியவற்றை சம அளவில் எடுத்து, அதனுடன், சிறிது பூண்டு, இஞ்சி மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து சட்னி செய்து சாப்பிடலாம்.

* வாரம் ஒரு முறையாவது, தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி, சூடான எண்ணெய் மசாஜ் செய்து கொள்ளலாம்.

சொத்தை நகம் சுத்தமாகும் விரல் நுனிகளில் ஏராளமான உணர் நரம்பு கூட்டங்கள் நிறைந்துள்ளன. இந்த விரல் நுனிகளை பாதுகாக்க இயற்கையால் வழங்கப்பட்ட பாதுகாப்பு கவசம்தான் நமது நகங்கள். நகங்களை பாதுகாப்பாக வைத்தால்தான் விரல்களையும் சக்தி குறையாமல் பாதுகாக்க முடியும்.

நகங்கள் சுண்ணாம்பு, பொஸ்பரஸ், இறந்த புரதச் செல்களின் கலவையாகும். நாம் அதிகமாக உட்கொள்ளும் உலோகங்களும் நச்சுப்பொருள்களும்கூட உடலால் வெளியேற்றப்பட்டு, நகத்தால் சேமித்து வைக்கப்படுகின்றன. விரல் நுனிகளை வெப்பத்திலிருந்தும், குளிர்ச்சியிலிருந்தும் பாதுகாக்கும் நகங்களை வைத்தே ஒருவன் உடல் ஆரோக்கியத்தை கணித்து விடலாம்.
சாம்பல் படிந்த வெள்ளைநிற புள்ளிகள் உளள நகங்கள் உலோகம் மற்றும் உப்புச்சத்து பற்றாக்குறையையும், வெளுத்துப்போன நகங்கள் இரத்த சோகையையும், கறுத்த நகங்கள் மது மற்றும் புகைப்பழக்கத்தால் ஏற்பட்ட கல்லீரல் மற்றும் நுரையீரல் பலவீனத்தையும், வெடிப்புள்ள நகங்கள் விற்றமின் குறைபாட்டையும், சொத்தையான நகங்கள் ஒவ்வாமை மற்றும் தோல் நோய்களையும் காட்டுவதாக மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

நகங்களைபூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகள் தாக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இல்லாவிட்டால் நகத்தில் ஏற்படும் சொத்தையானது விரல்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி, உடல் மற்றும் மன உறுதியை குலைத்துவிடுகின்றன. ஒவ்வாமை மற்றும் பலவித தோல் நோய்களால் தோன்றும் நக சீர்குலைவை சீர்செய்யும் அற்புத மூலிகை .

அம்மானியா பேசிரொ என்ற தாவரவியல் பெயர் கொண்ட லித்ரேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்தச் செடிகளின் இலைகளிலுள்ள லாவ்சோன் என்னும் பொருள் நகத்தை தாக்கும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா கிருமிகளை கொல்லும் தன்மையுடையன.

நீர்மேல் நெருப்பு மற்றும் மருதாணி இலைகளை நீர் விட்டுஅரைத்து நகத்தைச் சுற்றி தினம் தடவி வர, நகச்சொத்தை மாறும். நீர்மேல்நெருப்பு இலைகளை எத்து சாம்பலாக்கி, அந்த சாம்பலுடன் காற்பங்கு பொத்த வெங்காரப்பொடி அல்லது போக் ஆசிட் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து நகச்சொத்தையுள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வர நகச்சொத்தை மறைய ஆரம்பிக்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல