வெள்ளி, 5 மார்ச், 2010

எங்கே நடிகை ரஞ்சிதா?

இணையங்களில் வெளியான செய்திகளின் தொகுப்பு

கடந்த 3 தினங்களாக ‘எங்கே நடிகை ரஞ்சிதா?’ என்ற கேள்வி கோடம்பாக்கத்தையும் நித்யானந்தரை அறிந்தவர்கள் மத்தியிலும் சுற்றிச் சுழன்றடிக்கிறது. நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தரும் சல்லாபிக்கும் காட்சிகள் முழுவதுமாக வெளிவந்து ஆன்மிக உலகையே புரட்டிப் போட்டுவிட்டது. இந் நிலையில் பல லட்சம் பக்தர்களை நம்ப வைத்து ஏமாற்றிய அந்த சாமியாரையும் காணவில்லை, அவரை மேலே விழுந்து புரண்டு சபலத்தில் தள்ளிய ரஞ்சிதாவையும் காணவில்லை. ரஞ்சிதாவுக்கு சென்னையில் இரண்டு வீடுகள் உள்ளன.

சாலிகிராமம் வீட்டில்தான் இவர் முதலில் குடியிருந்தார். பின்னர் திருமணம் செய்து கொண்ட கையோடு அந்த வீட்டை பூட்டிவிட்டு திநகரில் இன்னொரு பெரிய வீட்டுக்குக் குடியேறிவிட்டார். ஆனால் அவர் கணவர் ரஞ்சிதாவைப் பிரிந்து ராஜஸ்தானுக்குப் போய்விட்டார். சாலிகிராமம் வீட்டின் மேல் பகுதியை ஒரு இயக்குநருக்கும் கீழ் பகுதியை ஒரு தயாரிப்பாளருக்கும் வாடகைக்கு விட்டுவிட்டாராம். இந்த வீட்டைப் பிடிப்பதில் பெரும் போட்டியே நடந்ததாகவும் கூறப்படுகிறது. இப்போது ரஞ்சிதா விவகாரம் வீதிக்கு வந்துவிட, அவரைத் தேடி வீட்டுக்குப் போனால் பெரிய பூட்டு தொங்குகிறது.

செல்பேசி மற்றும் வீட்டு எண் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன. நித்யானந்தரும் இப்போது தலைமறைவாகியுள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வெளிமாநிலத்துக்கு ஓடிப் போய்விட்டதாக பெங்களூரில் உள்ள ஆஸ்ரம ஊழியர் ஒருவரே கூறியுள்ளார். இந்த செக்ஸ் வீடியோக்கள் வெளியானபோது, நித்யானந்தர் தனது பெங்களூர் ஆசிரமத்தில்தான் இருந்தாராம். ஆனால் நிலைமை மோசமாவதை உணர்ந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம். அவரும் ரஞ்சிதாவும் பத்ரிநாத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக வெளிநாடு பயணம் போகும்போது ரஞ்சிதாவையும் அழைத்துச் செல்வாராம் நித்யா. இப்போதும் அதே பாணியில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்கிறார்கள்.

ரஞ்சிதாவை நீக்குமா நடிகர் சங்கம்?

விபச்சாரத்திற்கு இணையான செயலை செய்து கையும் களவுமாக சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதாவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நடிகர் சங்கம் நீக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்து மதத்தின் தீவிர நம்பிக்கையாளர்களையும், அந்த மதத்தைச் சார்ந்தவர்களையும் பெரும் வேதனைக்குள்ளாக்கி விட்டது நித்தியானந்தா- ரஞ்சிதாவின் லீலைகள் அடங்கிய வீடியோ.

இந்த சம்பவம் தொடர்பாக நித்தியானந்தாவை விட தற்போது ரஞ்சிதாதான் அதிகம் விமர்சிக்கப்பட ஆரம்பித்துள்ளார். காரணம், ரஞ்சிதாதான் நித்தியானந்தா மீது விழுந்து புரளுகிறார். அவரை டிவி கூட பார்க்க விடாமல் வேறு செயலுக்கு அழைப்பது போல காட்சிகள் உள்ளன.

ரஞ்சிதா தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் ஆவார். நாடோடித் தென்றலில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்துள்ளார்.

தனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்த பின்னர் மீண்டும் அவர் நடிக்கத் தொடங்கினார். பாரதிராஜாவின் தெக்கித்திப் பொண்ணு தொடரில் நடித்து வந்தார். தற்போது மணிரத்தினத்தின் ராவணன் படத்திலும் நடித்து வந்தார்.

இந் நிலையில்தான் நித்தியானந்தாவுடன் சல்லாபம் செய்து சிக்கிக் கொண்டிருக்கிறார்.

முன்பு புவனேஸ்வரி விபச்சாரம் செய்து போலீஸாரால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டபோது அது குறித்து செய்திகள் வெளியிட்ட பத்திரிக்கை உலகம் மீது திரையுலகம் கடுமையாகப் பாய்ந்தது.

இன்னின்னார் விபச்சாரம் செய்கிறார்கள் என்று ரேட் வாரியாக ஒரு செய்தியை வெளியி்ட்ட நாளிதழ் மீது சட்டம் பாய்ந்து கைது வரை போய் நின்றது.

கூடவே, கூட்டத்தைக் கூட்டி கடுமையான ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்து தங்களது கோபத்தையும் தீர்த்துக் கொண்டது நடிகர் சங்கம்.

ஆனால் இன்று ஒரு நடிகை விபச்சாரத்திற்கு இணையான செயலை செய்து சிக்கியுள்ளார். இவர் மீது நடிகர் சங்கம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உறுப்பினர் பதவியிலிருந்து ரஞ்சிதாவை நீக்குவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

குறைந்தபட்சம் ஒரு கண்டனத்தையாவது தெரிவிப்பார்களா என்றும் தெரியவில்லை.

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் விவகாரம் கோலிவுட்டையை கதிகலங்க வைத்திருக்கிறது. ஏற்கனவே நடிகை புவனேஸ்வரி விவகாரத்தில் செய்தி வெளியிட்ட பத்திரிகையை அச்சில் ஏற்றமு‌டியாத அளவுக்கு கடுமையான வார்த்தைகளால் பேசி, திட்டித் தீர்த்தனர். நடிகைளுக்கு சட்ட பாதுகாப்பு தர வேண்டும் என்று கூட்டத்தில் பேசிய நடிகர் சூர்யா ரொம்பவே ஆவேசப்பட்டார். இப்போது நடிகை ரஞ்சிதா, சாமியார் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ள நிலையில் நடிகர் சங்கத்தின் ரீ-ஆக்ஷன் என்னவாக இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இதற்கிடையில் வீடியோ மூலம் கையும் களவுமாக சிக்கியுள்ள ரஞ்சிதா தவிர, பழம்பெரும் புன்னகையரசியின் தங்கை மகளாக அறிமுகமாகி மார்க்கெட் இழந்த சுதாராக நடிகை, தற்போது சின்னத்திரையில் அடைக்கலமாகி இருக்கும் யுகத்திற்கெல்லாம் ராணியாவ நடிகை என அரை டஜன் நடிகைகள் அந்த இளம் சாமியாருடன் சல்லாபித்த பட்டியலில் இருக்கிறார்களாம். எங்கே ரஞ்சிதா மாதிரி வீடியோ ஆதாரத்துடன் தங்களது வண்டவாளமும் தண்டவாளம் ஏறுமோ? எனும் பயத்தில் தங்களுக்கு நெருக்கமான நடிகர்கள் மூலம் சங்கத்தில் தர்பாருக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி வருகிறார்களாம். வீடியோ ஆதாரத்துடன் விஷயம் அம்புட்டும் வெளிவந்திருப்பதால் விபரீதம் உணர்ந்த சங்கம், செய்வதறியாது கையை பிசைந்து கொண்டிருக்கிறதாம்! பாவம்!!

ரஞ்சிதா தலைமறைவு.. தலைவலியில் மணிரத்னம்!

இன்னும் சில காட்சிகள் பாக்கியிருக்கும் நிலையில் ரஞ்சிதா தலைமறைவாகிவிட்டதால், ஏற்கெனவே பல சோதனைகளைச் சந்தித்த மணி ரத்னம் டென்ஷனின் உச்சத்துக்கே போய் விட்டாராம்.

ரஞ்சிதாவின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. எனவே தந்தையைப் போலவே ராணுவத்தில் பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் அவரைப் பிரிந்து தனியாக சென்னையில் வசித்தார். இங்கு அவருக்கு 3 வீடுகள் உள்ளனவாம். இரண்டு வீடுகளை வாடகைக்கு விட்டு விட்டு, ஹபிபுல்லா சாலை வீட்டில் வசித்தார் ரஞ்சிதா.

மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியான போது, அவற்றை ஒரேடியாக மறுத்த ரஞ்சிதா, "எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக் கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத் தயாராக இருக்கிறேன்" என்றார்.

இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் இணைத்து பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன.

குறிப்பாக இந்த சம்மரில் ராவணாவை வெளியிடும் நோக்கத்தில் பரபரப்பாக இயங்கிவரும் மணிரத்னம் ராவணா பட விஷயமாக ரஞ்சிதாவைத் தொடர்பு கொள்ள முடியாததால் டென்ஷனில் இருக்கிறார். ரஞ்சிதா விவகாரம் படத்தை பாதித்துவிடுமோ என்றும் கவலையில் உள்ளார். காரணம் இது மணிரத்னத்தின் சொந்தப்படம்.

ரஞ்சிதா விவகாரத்தோடு சேர்த்து 14 பெரிய பிரச்சினைகளை ராவணா படம் எதிர்கொண்டுள்ளதாம்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல